Total Pageviews

Wednesday, November 16, 2011

திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை


கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.


* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது

* வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது

* பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது

* கோயிலுக்குள் தூங்கக் கூடாது

* கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது

* விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது

* ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது

* மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது

* கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது

* சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது

* ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது

* சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது

* மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது.

* கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது,

* அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.

No comments:

Post a Comment