Total Pageviews

Tuesday, November 15, 2011

மனைவியிடம் கோபிக்காதீர்கள்


நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒனறு பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.

திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியாலஎல்லா
உலகங்களையும் அளந்தவர்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.

No comments:

Post a Comment