Total Pageviews

Sunday, February 26, 2012

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் இயங்கும் சூப்பர் ஸ்டார் ரஜனியின் அதிசய இணைய தளம்.


பொதுவாக ஒரு இணைய தளம் இயங்க வேண்டுமென்றால் இன்டர்நெட் இணைப்பு அவசியம். ஆனால் இப்போது 'ஆல்அபவுட் ரஜினி' புதிய இணையதளத்தை உருவாக்கி, அதை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஆஃப் லைனிலேயே இயங்க வைத்துள்ளனர்.

இந்த இணையதளம் குறித்த தகவல் பரவியதுமே ஏக வரவேற்பு கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார், இதனை உருவாக்கியுள்ள தேசிமார்டினி.காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருபக்ஷ் சிங்.

முடிவான சோதனைகளுக்குப் பிறகு இந்த தளத்தினை இயங்க வைத்து, அதன் குறியீடுகள் குறித்தும் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, இன்டர்நெட் இணைப்பில்லாமல் ஆஃப் லைனில் இயங்கும் உலகின் முதல் இணையதளம் 'ஆல்அபௌட்ரஜினி'தான் என்று கூறுகிறார்கள்!

ரஜினி என்றாலே அசாதாரணம் என்று அர்த்தம் என்ற பொருளில் வட இந்தியாவில் பிரபலமாகிவிட்ட கமெண்டுகள் ஏராளம்.

இப்போது 'ரஜினியின் பேரை வச்சா இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாமலே இணையதளம் இயங்கும்,' என்று கூற ஆரம்பித்துள்ளனர். 

அதே நேரம் இது பழைய டெக்னிக்தான் என்றும், சின்ன ஸ்கூல் பசங்களே இந்த வேலையைச் செய்துவிடுவார்கள் என்ற விமர்சனமும் இல்லாமல் இல்லை.

இன்டநெட்டே இல்லாமல் இந்த தளமும் உண்மையில் இயங்குவதில்லை. இந்தத் தளத்தை திரையில் காண இன்டர்நெட் கனெக்ஷன் அவசியம். தளம் தெரிந்த பிறகு, இணைப்பை துண்டித்துவிட்டு, அதில் உள்ள மூன்று பகுதிகளுக்குள் நுழைந்து பார்க்க முடியும். எனவே இது ஒரு ஏமாற்று வேலை என்பவர்களும் உண்டு. 

எப்படியோ, அவரவர் வெப்சைட் ஆரம்பித்து, அதை பிரபலமாக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஜினி என்ற பயன்படுத்தி வெப்சைட் ஆரம்பித்தவர்களுக்கு கிடைத்தது ஜஸ்ட் இரண்டே நாளில் அபார விளம்பரம்... பிரபலம்!
இணைய தளத்துக்கு செல்ல.. http://www.desimartini.com/allaboutrajni.htm

டாடா காற்றின் மூலம் இயங்கும் கார்

'கம்ப்ரஷ்டு ஏர்' எரிபொருளில் செல்லும் புதிய கார்: டாடா தயாரிக்கிறது

காற்றை எரிபொருளாக(கம்ப்ரஷ்டு ஏர்) பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. ரூ.4லட்சம் விலையில் இந்த காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் கார்களுக்கான மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பேட்டரியில் இயங்கும் கார், ஒயினில் ஓடும் கார் என்று மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கம்ப்ரஷ்டு காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. பார்முலாஒன் கார் தயாரிப்பு எஞ்சினியர் ஒருவர் வடிவமைத்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கார் டாடா கார் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மினிகேட் என்ற பெயரில் வரும் இந்த கார் பைபர் கிளாஸ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இலகுவான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருவதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கான எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டர் மூலம் இந்த காரில் 300 கிமீ செல்ல முடியும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டரின் விலை ரூ.100 மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும்,மற்ற கார்களை போல கார்பன் புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 6,000 கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாகவும், ரூ.4 லட்சம் விலையில் இந்த காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க!

பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணினி இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பது எப்படி...?









இதற்க்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்திருந்தால் எப்படி உபயோகிப்பது என கீழே பாருங்க, பதிவு செய்யாதவர்கள் தொடருங்கள்.

Phone number  பதிவு செய்வது எப்படி:
முதலில் உங்களின் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settingsபகுதிக்கு செல்லுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobileஎன்பதை கிளிக் செய்யுங்கள்.




பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள். 
ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrierஎன்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும். 

இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்.)


நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும். 


மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும்.


மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.  இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே Facebook  உபயோகிக்கலாம். எப்படி உபயோகிப்பது என அறிய கீழே பாருங்கள். 


SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:

பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும். 

புதிய நண்பரை சேர்க்க - add your friend name , Subcribe செய்ய - Subscribe your friend name மேலும் விவரமாக அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள்.  இதில் உள்ள அனைத்து கட்டளைகளையும் SMS மூலமாக செய்து விடலாம்.



காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு.!!

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம். பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.