Total Pageviews

Monday, December 17, 2012

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு

 சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் 1950 வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் நாள், கர்நாடகாவில் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ரமாபாய். இவர்களின் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினிகாந்த். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் (ராமகிருஷ்ணா மிஷனின் அங்கம்)ஆகியவற்றில் கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இதே சமயத்தில் பல மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.

     நடிகராக விரும்பி சென்னைக்கு வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1975ஆம் ஆண்டு புத்தண்ணா கனகால் இயக்கிய 'கதா சங்கமா' என்ற கன்னட படத்தில் முதன் முதலாக நடித்தார். அதே ஆண்டில் தமிழில் கே பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு அவர் தொடர்ந்து நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி (1977), அவர்கள் (1977), 16 வயதினிலே (1977), காயத்ரி போன்ற படங்கள் அவரை மிகச்சிறந்த வில்லத்தனமான நடிப்பிற்காக நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் (1978), ஆறிலிருந்து அறுபது(1979) வரை போன்ற படங்கள் அவர் நாயகனாக நடித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. பில்லா, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களில் அவர் அதிரடி நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தில்லுமுல்லு படம் இவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக உலகுக்கு வெளிக்காட்டியது. பில்லா இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற 'டான்' படத்தின் தமிழாக்கம் ஆகும். அமிதாபச்சனின் பிற படங்களான குத்-தார், நமக் ஹலால், லாவாரிஸ், திரிசூல் மற்றும் கஸ்மே வாதே போன்ற படங்கள் முறையே படிக்காதவன், வேலைக்காரன், பணக்காரன், மிஸ்டர் பாரத் மற்றும் தர்மத்தின் தலைவன் போன்ற பெயர்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. அவரின் 100 வது படமான ஸ்ரீ ராகவேந்திரர், சமயத்துறவி ராகவேந்திரரின் வாழ்க்கையைப் பற்றிய படமாகும்.

     90களில் இவர் நடித்து வெளிவந்த அண்ணாமலை, பாட்ஷா, போன்ற படங்கள் இவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியது. இவ்விரு திரைப்படங்களும் இன்றளவிலும் திரையிடப்படும் இடங்கள் அனைத்திலும் நல்ல வசூலைக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முத்து படம் இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் அமோக வெற்றி பெற்றது. ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் முத்து தான். ரஜினிகாந்த் தாமே திரைக்கதை அமைத்த படம் வள்ளி 1993 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்து வெளிவந்த படம் படையப்பா மிகப்பெரும் வெற்றி பெற்றது. மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002ல் இவர் நடித்து வெளிவந்த பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இருந்தாலும் அடுத்து 2005 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்தது.

     ரஜினிகாந்த், தமிழ் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் பிலட் ஸ்டோன் (Blood Stone) (1988).

விருதுகள்

     படையப்பா, பெத்தராயடு, பாட்ஷா, முத்து, அண்ணாமலை, தளபதி, வேலைக்காரன், ஸ்ரீ ராகவேந்திரா, நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், 16 வயதினிலே ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் ரஜினிகாந்த். புவனா ஒரு கேள்விக்குறி நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். வள்ளி படத்திற்காக சிறந்த திரைக்கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் விருதை வென்றுள்ளார்.

     ரஜினிகாந்த் அவர்கள் 1984 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். விருதையும், 1995 ஆம் ஆண்டு ரஜனீஷ் ஆசிரமத்தின் ஓஷோபிஸ்மிட் விருதையும், 1995ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் கலைச்செல்வன் விருதையும், 2007 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசின் ராஜ் கபூர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அளித்து கௌரவித்துள்ளது.

ஒரு சமயம் ரஜினி தன படத்தில் எம்.ஜி.ஆர் போஸ்டர் இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகற்றச் சொல்லிவிட்டாராம். அந்த போஸ்டர் அகற்றப்பட்ட பிறகே குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் இப்படிக் கூறியுள்ளார், தான் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில்: “ரஜினியுடன் படம் செய்வது ஒவ்வொரு முறை புதிய அனுபவமாகவே அமையும் எங்களுக்கு.

சகலகலா வல்லவன் படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் சுவரில் ஒட்டப்பட்ட எம்ஜிஆர் படப் போஸ்டர் வரும். அந்தக் குறிப்பிட்ட காட்சியின்போது தியேட்டர்களில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.

அந்த அதிகப்படியான வரவேற்பைப் பார்த்துவிட்டு, ரஜினியை வைத்து நாங்கள் எடுத்த பாயும் புலி படத்திலும் எம்ஜிஆர் போஸ்டர் வரும்படி காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், இந்தப் போஸ்டரை எடுத்துவிடுங்கள் என ரஜினி சொல்லிவிட்டார். அதை ஏன் வைத்தோம் என்று நாங்கள் விளக்கியபோது, அவரது கண்டிப்பு அதிகமானது.

“பாருங்க சரவணன்… என்னைப் பார்க்க விரும்புபவர்கள் என் படத்துக்கு வர வேண்டும். எம்ஜிஆர் என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்குப் பாராட்டு கிடைக்கும்படி செய்வது நியாயமில்லை…” என்று கூறிவிட்டார். அந்த போஸ்டர் எடுக்கப்பட்ட பிறகே காட்சி படமானது…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தனைக்கும் அன்றைக்கு முதல்வராக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான்!

 சிவப்பானவர்கள்தான் ஹீரோ ஆக முடியும் என்பதை உடைத்தவர். 

தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் கலாசாரத்தை தொடங்கி வைத்தவர்.

 குழந்தைகளுக்கும் பிடித்த முதல் தமிழ் சினிமா ஹீரோ. 

நடையின் வேகத்துக்கு நாம் எல்லோரும் அடிமை.

சிக்ஸ்பேக் இல்லாமலேயே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுப்பவர். 

சினிமாவை தவிர பிற இடங்களில் எளிமையாகவே வலம் வருபவர்.

துணிச்சலாக பேசுபவர்.துணிச்சலாக பேசினால் ஆதரவு தருபவர்.

 உலக நாடுகளில் அதிக நாட்டு மக்களை கவர்ந்த ஒரே தமிழ் ஹீரோ.

 அவருக்கு ரசிகனாக இருப்பதே பெருமை என காலர் தூக்க வைத்தவர்.

 தன் முதல் காதல் தோல்வியில் முடிந்ததை அதுவும் ஒரு பெண் தன்னை பிடிக்கவில்லை என சொன்னதை ஓப்பனாக சொன்னவர். 

ரசிகர்களை உரிமையுடன் கண்ணா என அழைப்பவர். 

தமிழ் சினிமாவுக்கே வேகம் கூட்டியவர். சக நடிகர்களுக்கும் பிடித்தவர். தலைமுறை தான்டி இன்றைய குழந்தைகளுக்கும் பிடித்த ஹீரோ. 

எல்லா அரசியல் தலைவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நெருக்கமாக இருப்பவர். அவர் பெயரை பயன்படுத்தி தான் பிற ஹீரோக்கள் கைதட்டு வாங்குவார்கள்.

 அவர் இதுவரை பயன்படுத்தியது இல்லை.

 அதிக கடவுள் நம்பிக்கை உடையவர். 

ரசிகர்களின் குடும்பங்களின் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரே ஹீரோ.

 அவர் இடத்தை பிடிக்க தான் அஜித் முதல் சிவகார்த்திகேயன் வரை ஆசைப்படுகிறார்கள்.

தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதை இன்னும் மறக்காதவர்.
 
தன் குரு பாலசந்தரை உயிராக நினைப்பவர். 

தான் சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து கமலின் திறமைக்கு மரியாதை கொடுப்பவர். 

மது, மாது, சிகரெட் என தன்க்கிருந்த பழக்கங்களை வெளிப்படையாக சொன்ன ஒரே ஹீரோ. 

மாறுவேடத்தில் சென்று மக்களோடு மக்களாக பழகும் ஹீரோ.

No comments:

Post a Comment