Total Pageviews

Monday, July 22, 2013

நேர்காணலை எதிர் கொள்ளும் போது செய்யக்கூடாத விஷயங்கள்



வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றி கரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.
இவ்வாறான கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த நிலையான நேர்காணலை எதிர் கொள்ளும் போது அறிந்தோ, அறியாமலோ நாம் சில தவறுகளை செய்ய நேர்ந்தால் அது நமது பணிவாய்ப்பை பாதித்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் எந்த முக்கிய தவறுகளை செய்யக்கூடாது என்பதை தருவதே இந்த படைப்பின் நோக்கம்.
1. போதுமான தயாரிப்பின்மை: பணி வாய்ப்பாளர்களால் பெரிதும் வெறுக்கப்படும் தவறு இதுதான். ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் தங்களிடம் நேர்காணலை எதிர்கொண்டு வேலை தேடி வரும் ஒவ்வொருவரும் போது மான தயாரிப்புகளுடன் தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவே முனை கிறார்கள். அதனால் வேலை தேடுபவர்கள் இதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர வேண்டும். உங்கள் பணியின் தன்மை, பணி வாய்ப்பாளர் பற்றிய விபரங்கள், எதிர்பார்க் கப்படும் கேள்விகளுக்கான தயாரிப்புகள் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
2. தாமதமாக செல்லுதல்: ஒரு நேர் காணலுக்கு தாமதமாக வருவது பணி வாய்ப்பாளரால் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கப்படும். நமது தாமதத்திற்கு என்னதான் காரணங்களை கூறி நியாயப்படுத்த நாம் முயன்றாலும், அது நமது பணி வாய்ப்பை பாதிக்கும். எனவே நேர்காணலுக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்.
3. பொருத்தமற்ற உடை அணிதல்: ஒரு நேர்காணல் அறைக்குள் நாம் நுழையும் போது நம்மைப்பற்றிய முதல் பதிவை நமது ஆடைகளே செய்கின்றன என்பதை கவனத்தில் வைக்கவும். இதன் பின்னரே நமது திறமை, தகவல் பரிமாற்றத்திறன் போன்ற இதர விஷயங்கள் உள்ளன. அதனால் உங்களுக்கு மன நிறைவைத் தரும் பொருத்தமான உடைகளை மட்டுமே அணியவும்.
4. உங்கள் ஊதியத்தைப் பற்றி பேசத் தயங்காதீர்கள்: இன்றைய வேலை தேடுபவர் களில் பலரும் தங்கள் ஊதியம் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். அதே போல் இது தொடர் பான கேள்விகள் உங்களிடம் எழுப்பப்பட்டால் அவற்றுக்கு எப்படி பதில் சொல்வது என்பதிலும் போதுமான தயாரிப்புகள் கட்டாயம் தேவைப் படும். நாம் பதில் தேடும் தொழில் அரங்கில் நடப்பில் உள்ள ஊதிய விகிதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடியான பதில்களைத் தருவது நல்ல பயன் தரும்.

மருத்துவர்கள் தினம் ஜுலை 1




மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில் டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் இறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தி யாவில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவர் பி.சி.ராய் (பிதான் சந்திர ராய்), பீகாரில் உள்ள பான்கிபூரில் 1888ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர். மருத்துவ படிப்பை முடித்து விட்டு, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2ஆவது முதல்வராக பதவி வகித்தார்.

1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண் டுகள் காங்கிரஸ் முதல்வராக தொடர்ந்து இருந்தார். பி.சி.ராய் சுதந்திர போராட்ட வீரராக மட்டும் இல்லாமல், சிறந்த மருத்து வராகவும் சேவை புரிந்துள்ளார். ஏழை,எளிய மக்களுக்காக பல மருத் துவமனைகளை தொடங்கினார்.

பி.சி.ராய் முதல்வராக இருந்த போதும், எழை,எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என்று பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார். இவருக்கு 1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப் படுகிறது. பி.சி.ராய் தனது 80ஆவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி இறந்தார்.

அவரது நினைவாகவே அந்த நாளை மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கடைபிடிக்கிறோம்.

கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் வெடித்து எண்ணெய் சிதறும் ஏன்?



கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் பலத்த சத்தத்துடன் வெடித்து எண்ணெய் சிதறும். அதே நேரத்தில் கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இது ஏன்? எண்ணெய் கொதிக்கும் போது அதன் வெப்பம் 150 டிகிரி சென்டி கிரேடுக்கும் அதிகமாக இருக்கும். தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி சென்டிகிரேடு தான்.

இதனால் தான் கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் துளி பட்டதும் அதன் வெப்பம் அதிகரித்து உடனடியாக ஆவியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது தண்ணீர் சூடாகி ஆவியாவது ஆயிரம் மடங்கு வேகத்தில் நடைபெறுகிறது. இந்த திடீர் மாற்றம் காரணமாக கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் பட்டதும் அது சிதறி வெடிக்கிறது. இதற்கு காரணம் தண்ணீரின் கொதிநிலையை விட எண்ணையின் கொதிநிலை அதிகம்.

இதனால் தண்ணீரில் படும் எண்ணெய் மிக விரைவாக ஆவியாவது இல்லை. எனவே தான் தண்ணீரில் எண்ணெய் கொட்டினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.