Total Pageviews

Sunday, July 17, 2016

தவளை!

 
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿

🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿

🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿

🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿

🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿

🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿

🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿

🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿

🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿

🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿

🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿

🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿

💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐

💐உயர முடியும் . . .
💐

💐உதவ முடியும் . . .
💐

💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .

👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .

👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .

👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .

👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .

👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .

👤
👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .

👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸

💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

Thanks to C.Malathi

டாட்டா உப்பு !

டாட்டாவின் அலுவலகம்.,,,,!!!!

டாட்டா எதேச்சையாக கேமரா வில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார்.

அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர்.

அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார்.

டாட்டா வுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது. கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. 

காலை 8.30 க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான்.

இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார். 

டாட்டா: மார்னிங். என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தாய்...? உடனே சொல் எனக்கு நேரமில்லை.

இளைஞன்: ஒரு பிசினஸ் விஷயமாக உங்களிடம் பேச வேண்டும்.

டாட்டா: என்ன பிசினஸ் ?

இளைஞன்: நீங்கள் உப்பு விற்க வேண்டும்.

டாட்டா: தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது.... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன் என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?

இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன்... அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன்.

டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... சரி .... காண்ட்ராகட்டில் சைன் பண்ணி விட்டு.... அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்.....

ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது....!!!!

பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் ஒரு மிகப்பெரிய ப்ராஜக்ட்டை அதன் லாபத்தை டாட்டா வால் யூகிக்க முடிந்திருக்கறது. அதுதான் வெற்றியின் ரகசியம். எந்த ஒரு முடிவையும் உடனே காலம் தாழ்த்தாமல் எடுப்பது. ஒருவேளை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான்.

வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது....!!!!

புரிந்தவர்களுக்கு இது பாடம்.... புரியாதவர்களுக்கு இது வெறும் கதை.....

புரிந்தவர்கள் வெற்றி பெறுங்கள்....!!!!.

Saturday, July 16, 2016

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி(குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.

1, திங்களூர் (சந்திரன்):

நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.

2, ஆலங்குடி (குரு) :

கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம்.

3, திருநாகேஸ்வரம் (ராகு) :

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.

4, சூரியனார் கோவில் (சூரியன்) :

சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

5, கஞ்சனூர் (சுக்கிரன்) :

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

7, திருவெண்காடு (புதன்) :

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.

8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.

9, திருநள்ளாறு (சனி) :

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்.🍃 



Thanks to B.Abirami
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்



சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்

சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். 
 
விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்.

Thursday, July 14, 2016

த்ரிவேணி சங்கமத்தில் கலக்கும் 3 நதிகள்


1.மிகப்பெரிய கோவில் குளம் கமலாலயம் எங்கே இருக்கிறது?

    திருவாருர்

2.கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை புனித நீராடும் குளத்தின் பெயர் என்ன?   2. மஹாமக குளம்

3.த்ரிவேணி சங்கமத்தில் கலக்கும் 3 நதிகள் எவை? 3. கங்கை, யமுனை, சரஸ்வதி (பூமிக்கடியில்)

4.சிந்து சமவெளி நாகரீக காலத்தில் சிந்துநதி தவிர அங்கே பாய்ந்த மற்றொரு புண்ய நதி எது?
 4

. சரஸ்வதி


5.எந்த நதியின் கரையில் ஜனமேஜயர் சர்ப்ப யாகம் நடத்தினார்?5. நர்மதா

6.சிருங்கேரி சாரதா பீடம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?                         6. துங்கபத்ரா

7.ராகவேந்திரர் சமாதி எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?7. துங்கபத்ரா

8.எந்த நதிக்கரையில் த்ரயம்பகேஸ்கரம் அமைந்திருக்கிறது?
8. கோதாவரி


9.சாலக்ராமம் எந்த நதியில் கிடைக்கும்?
9. நேபாளத்திலுள்ள கண்டகி நதி


10.சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?10. காவிரி

11.ஜோக் அல்லது ஜெரசப்பா நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?11. ஷராவதி

12.கங்கை நதிக்கு பாகீரதி என்று பெயர் வரக் காரணம் என்ன?
12. பகீரதன் தவம் செய்து கொண்டுவந்ததால் (இமயமலையில் வேறு பக்கம் ஓடிய நதியை பகீரதன் எஞ்ஜினீயர்களைக் கொண்டு சமவெளிக்குத் திருப்பிவிட்டதை புராணங்கள் இப்படிக் கூறுகின்றன)

13ஆண்டாள், பெருமாளின் மாலையை அணிந்து கொண்டு எங்கே முகம் பார்த்தாள்?13. கோவிலில் இருந்த கிணற்றில்

14.காவிரி நதி பாயக் காரணமான பறவை எது? ரிஷி யார்?
14. அகஸ்தியர்; அவரது தீர்த்த பாத்திரத்தை ஒரு காகம் கவிழ்த்தது

15.சிவபெருமானின் பூதகணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு உருவாக்கப்பட்ட நதி எது?
15. மதுரையின் வைகை நதி 
 
16. பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜைனியில் ஓடும் நதியின் பெயர் என்ன?

16. சிப்ரா நதி
 
17.கடலுக்கு சாகரம் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?
17. சகர மன்னனின் மகன்கள் தோண்டியதால் கடலுக்கான பள்ளம் ஏற்பட்டது. பகீரதன் அதில் கங்கையைப் பாயச் செய்தான்

18.கடலைக் குடித்த ரிஷி யார்?
18. அகஸ்தியர் (தென் கிழக்கு ஆசியாவுக்கு கடல் வழியாகச் சென்று இந்து நாகரீகத்தை நிலை நாட்டியதை புராணங்கள் இப்படிச் சொல்லுகின்றன. அகஸ்தியர் சிலைகள் அந்த நாடுகளில் இன்றும் உள.

19.ஆண் பெயரை உடைய பெரிய வட இந்திய நதி எது?
19. பிரம்மபுத்ர (மற்ற நதிகள் பெயர் பெண்கள் பெயர்கள்)

20.இமயமலையில் இருக்கும் மிகப்பெரிய புனித ஏரியின் பெயர் என்ன?
20. மானஸ சரோவர்.