Total Pageviews

Tuesday, January 1, 2013

இந்தியாவின் `இளமை'



* இந்தியாவில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 47 சதவீதத்தினர் 20 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்.

* 54 சதவீத இளவட்டத்தினர் படித்துக் கொண்டே பணம் சம்பாதிக்கின்றனர்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் ஐந்தில் ஒருவர் திருமணமானவர். அதே வயதில் நாட்டின் சரிபாதிப் பெண்கள் திருமணமானவர்கள்.

* 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் ஆண்களில் 64 சதவீதத்தினரும், பெண்களில் 34 சதவீதம் பேரும் வேலை பார்க்கிறார்கள். நகர இளைஞர்களை விட கிராமப்புற இளைஞர்கள் அதிகமாக வேலைவாய்ப்புப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஓர் ஆச்சரியச் செய்தி.

* தேசிய கிராமப்புறப் பகுதி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு கிராமப்புற இளைஞர் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 100 ரூபாய் சம்பாதிக்கிறார். இதனால், கிராமப்புறப் பகுதி செலவழிப்பு, கடந்த மூன்றாண்டுகளில் மும்மடங்காக உயர்ந்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.