Total Pageviews

Thursday, May 9, 2013

காந்திஜி


காந்திஜியைப் பற்றி அனைவரும் பெரிய அளவில் எழுதி விட்டார்கள். அவருடைய சுயசரிதை போதும் அவரைப் பற்றி சொல்வதற்கு, இன்றும் சுயசரிதைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது காந்தியுடைய சுய சரிதை (சத்திய சோதனை) தான். பெயரே பாருங்கள் சத்திய சோதனை. அதுவும் அவரே கைப்பட எழுதியது அதை படிக்குபோது சில சமயங்களில் மெய் சிலிர்க்கும் என்பார்களே அதை அனுபவிக்கலாம்.

எல்லோரும் அவரை மகாத்மா என்கின்றனரே ஏன்? -  ஒரு சின்ன நிகழ்ச்சி,

காந்திஜி ஒரு சமயம் ரயில் வண்டியில் ஏறும் சமயம் அவர் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்து விட்டது. அவர் உடனே என்ன செய்தார் தெரியுமா தன்னுடைய மற்றொரு காலின் செருப்பை கழற்றி அந்த தண்டவாளங்களுக்கிடையே வீசிவிட்டார். அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு இந்த வண்டி புறப்பட்டவுடன் இங்கே இருக்கும் செருப்பை எடுத்து செல்பவன் எப்படி பயன்படுத்துவான் அவன் உபயோகபடுத்த மற்றொரு செருப்பு தேவையல்லவா அதனால் தான் மற்றொரு செருப்பை வீசினேன் என்றார். அதாவது அந்த சமயத்திலும் அவரின் சமயோசித செயல் வியப்புக்குரியதே.

அதே போன்று காந்திஜி அவர்கள் 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழக சுற்றுப்பயணத்தின்போது அங்கிருந்த ஏழை விவசாயிகள் ஒரேயொரு துண்டினை மட்டும் கட்டி வேலை செய்வதை கண்டவுடன் நமது நாட்டில் இவ்வளவு பேர் மேல்சட்டையில்லாமல் இருக்கிறார்கள் நான் மட்டும் எதற்கு இப்படி மேலாடை தரிக்க வேண்டும் என்று மேலாடையை உதறித் தள்ளினார், ஆனால் இதே காந்திஜி இங்கிலாந்தில் வக்கீலாக வேலை பார்க்குபோது பட்டுத் தொப்பி கணுக்கால் உறை (பேன்ட்) தரித்து கையில் ஒரு பிரம்பும் வைத்து இளவரசனாகவே இருந்து வந்தார். அவர் தென்னாப்பிரிக்காவில் வக்கீலாக இருக்கும்போது ஆண்டுக்கு 15000 டாலர் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால்  அதையெல்லாம் விட்டு நம் நாடு இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது அது சுதந்திரமடைவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இந்தியா வந்து சத்தியகிரகம் என்ற உயர்ந்த ஆயுதத்தை கையில் எடுத்து சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தையே ஒரு ஆட்டம் காட்டி அவர்களை இங்கிருந்து ஓட்டி நாமெல்லாம் இவ்வாறு நடக்கவேண்டும் என்று நம்மை வழி நடத்திசென்ற அந்த ஆத்மாவை மகாத்மா என்று கூறுவது நியாயந்தானே.