Total Pageviews

Wednesday, June 27, 2012

பரிந்துரை


  • ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்யூஸ்.
  • நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
 -நியேட்சே.
  • வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.
- பிராய்டு.
  • அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.
  • கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- முகம்மது நபி.
  • சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி.
  •  மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்.
  • இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.
  • ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- சாமுவேல் பட்லர்.
  • வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.
  • நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.
  • தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- டிரெட்ஸி.
  • இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- மகாகவி பாரதியார்.
  • அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்.
  • நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.
  • எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்.
  • கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்
  • ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
- பெர்னாட்ஷா.
  • அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
- சர்ச்சில்.
  • தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.
  • நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது.
- சுவாமி சுகபோதானந்தா.
  • பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.
 -வைரமுத்து

பணிவு இருந்தால் எல்லாமும் அவனிடம் தானே வந்து சேரும்


உன்னைவிட பெரியவன் யாருமில்ல, அதுனால யாருக்கும் பயப்படாதே! 
உன்னைவிட சின்னவன் யாருமில்ல, அதுனால யாரையும் தாழ்வா நினைக்காதே!
"

இது தில்லு முல்லு படத்தில் ரஜினி பேசும் வசனம்.  எனக்கு மிகவும் பிடித்த வசனம். முதல் வரி ஒருவருடைய தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது என்றால், இரண்டாம் வரி ஒருவருக்கு பணிவைத் தூண்டுகிறது என்பது  என்  எண்ணம்.

"நேத்து எங்க ஆபீசர் என்னைக் கண்டபடி திட்டினாரு, ஆனாலும் நான் பொறுமையா இருந்துட்டேன்"என்று கூறுவது பெருமை இல்லை.  ஏனென்றால் உயர் அதிகாரியிடம் பணிவாக இருப்பது அதிசயம் இல்லை.  ஆனால், "பியூனுக்கு ஏதோ மனக் குழப்பம் போலிருக்கு, அதான், எப்பவும் சரியா செய்யறவன், நான் சொன்னது எதையும் நேத்து சரியா செய்யலை. சரி போறான்னு விட்டுட்டேன்" என்று சொல்லிப் பாருங்கள், உங்கள் இளகிய மனம் எதிராளிக்குப் புரியும்.

சின்ன வயதில் அதிகமாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை, நான் வளர்ந்த சூழல் அப்படி.  ஆனால், கேபிள் டிவி வந்தபிறகு, கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தாலும், சினிமா மோகம் என்றுமே எனக்கு இல்லை.  அதனால், இவரின் ரசிகன், அவர் சூப்பர் என்றெல்லாம் ஒரு நடிகர்/நடிகையை ஆராதிக்கும் நபரும் நான் இல்லை.  ஆனால், தமிழ்ப் படவுலகில் நான் விரும்பும் இரண்டு மனிதர்கள் (கவனிக்கவும்: நடிகர் இல்லை, மனிதர்) திரு ரஜினிகாந்த் (யாருப்பா அங்க விசில் அடிக்கறது, கோபி சாரா, வணக்கம் தல) மற்றும் திரு ஏவிஎம் சரவணன். காரணம், இவர்கள் இருவரிடமும் நான் காணும் பணிவுதான்.  தமிழ்நாடே அவர் பின்னால் இருக்கும் (அல்லது இருப்பது போல் தோன்றும்) சூழலில் கூட தனிக் கட்சி என்று ஆரம்பிக்காமல் (அல்லது ஆரம்பித்துக் காணாமல் போகாமல்) அமைதியாக இருந்தாரே, சர்வ நிச்சயமாகச் சொல்லுகிறேன், மனத்தில் பணிவு என்ற ஒன்று இல்லாத எந்த நபரும் அந்த நேரத்தில் அந்த ஒரு முடிவு எடுத்திருக்க முடியாது.  

அதேபோல், திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்களை எந்தப் பொது இடத்தில் பார்த்தாலும் இரு கைகளை கட்டிய வண்ணமே இருப்பார்.  எத்தகைய ஜாம்பவான்களை வைத்து எவ்வளவு மெகா ஹிட் படங்களை கொடுத்த எத்தனை பெரிய ஒரு பட நிறுவனம், அந்த ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் இவ்வளவு அமைதியாக பணிவாக தோன்றுகிறார் என்றால், அந்த பணிவுக்கு என்னுடைய பெரிய சல்யூட்.

இதைத்தான் தெய்வப் புலவர் 
                                        பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
                                        சுருக்கத்து வேண்டும் உயர்வு 

என்கிறார் (திருக்குறள் - 963)

"பணிவாக இருந்தால் நம்மைக் கோழை என்று நினைக்க மாட்டார்களா?" என்று கேட்க தோன்றலாம்.  முதலில் அப்படி நினைத்தாலும், காலப் போக்கில் நம்முடைய பணிவைக் கண்டு வியந்து அவர்கள் மனம் மாறிவிடுவார்கள்.  

குலைதள்ளிய வாழை சற்று வளைந்துதான் இருக்கும், அதுதான் பிறருக்குப் பயன் கொடுக்கும். எனவே, பணிவாய் இருப்போம், பிறருக்குப் பயன் கொடுப்போம்.

Tuesday, June 26, 2012

பணிந்து செல்




இகழ்ச்சி”
என்னை துணிந்து நில்
என்றது


“புகழ்ச்சி”
என்னை பணிந்து செல்
என்றது.

நாடு வளம் பெற


குற்றங்களை  குறைக்க உடனடி தீர்ப்பு  கடுமையான நடவடிக்கை,  கடுமையான தண்டனைகள் . முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சட்டப்பூர்வமான அணுகுமுறை, ஆகியவை குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்..

மாற்று எரி பொருள் - எரிசக்தி  தேட வேண்டிய கட்டாயம்.

100 கோடி மக்கள் தொகை மேல் உள்ள இந்தியாவில் எரி பொருள் தேவையை பூர்த்தி செய்ய [Gas, Petrol, Diesel, Kerosin]  பிற நாடுகளையே சார்ந்து  இருக்கவேண்டிய சுழலில்தான் இந்தியா உள்ளது.  மாற்று எரி பொருள் கண்டு பிடித்தால் மடடுமே,  இந்தியா வல்லரசு ஆக முடியும். இல்லாவிடில்  வல்லரசு என்பது கனவு போலாகி விடும்.

மாற்று  எரிசக்தி அதாவது  சூரியசக்தியின் மூலமாகவும், காற்றின் முலமாகவும், இந்தியாவில் கிடைக்கக்கூடிய கனிம, மற்றும் தனிம வளங்கள் முலமாக அதிக அளவில் உற்பத்தியினை பெருக்கி நாடு தன்னிறைவு பெற வழி  வகைகள் மேற்க்கொள்ள வேண்டும்.

Monday, June 25, 2012

உழைப்பு, நல்லெண்ணம், அன்பு போன்றவற்றினால் வெற்றி பெறலாம்


புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
கண்ணதாசன்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்
மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை
பணம் படைத்த  வீட்டினிலெ
வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத  மனிதருக்கு
சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த ஆனைவருமே
காதல் கொழ்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை

கனவு கானும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்
அவளை பார்த்து சிரிப்பாள்
அவள் மனதில் யார் வருவார்
யாரை பார்த்து அழைப்பாள்?

இந்தப்பாடலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் எவ்வளவு நிதர்சானமான உண்மை.

வெற்றி பெற புத்தி மட்டுமே தேவை என்பதுதான் தவறு. வெற்றியில் இன்னும் பலவற்றின் பங்குகள் இருக்கின்றன. புத்தி இல்லாமல் கூட உழைப்பு, நல்லெண்ணம், அன்பு போன்றவற்றினால் வெற்றி பெறலாம் என்றுதான் அதற்கு சரியான பொருள். இதற்கு புத்தியில்லாதவன் மட்டுமே ஜெயிக்கிறான் என்று அர்த்தம் எடுப்பது தவறு. புத்தியில்லாதவனும் வெற்றி பெறுகிறான். புத்தி உள்ளவனும் வெற்றி பெறுகிறான் என்றுதான் பொருள்.

வெற்றி படைத்தான் அப்படின்னு சொல்லலை.. வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்கிறார்கள். அதாவது வெற்றி என்பது சூழலால் கொடுக்கப்படுவது.

வெற்றி பெறுவதையே நாம் எல்லோரும் விரும்புகிறோம். வாழ்க்கைப் பாதையில் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் யுத்த களங்கள் எத்தனை .. எத்தனை! எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி கிட்டுவதில்லை. எல்லோரும் வெற்றி பெற்ற மனிதர்களாக வீதி உலா வருவதில்லை. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள். தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்றும் சொல்வார்கள். யதார்த்த உலகத்தில், எத்தனையோ திறமையான மனிதர்கள் பிரபலம் அடைய முடியாமல், அவர்களின் திறமை வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே வாழ்ந்து மறைந்துவிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்களைப் பார்க்கிலும் குறைவான திறமை உள்ளவர்களும் கூட பிரபலம் அடைந்து வெற்றியாளர்களாக வெளி உலகத்துக்குத் தெரிய வருகிறார்கள். இதை நாம் என்னவென்று சொல்வது? இதைத்தான் சிலர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். சிலர் நேரம் என்கிறார்கள். சிலர் விதி என்கிறார்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கவியுள்ளத்தில் விளைந்த இந்த வரிகள் வெற்றி குறித்து என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

எத்தனை அழகான, எத்தனை ஆழமான வரிகள்! இந்த வரிகளைப் பாடும் போதும், பிறர் பாடக் கேட்க்கும் போதும், சந்திரபாபு அவர்களின் குரலில் திரைப் பாடலாகக் கேட்கும் போதும் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது.

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

எத்தனை யதார்த்தமான வரிகள்! நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனுபவித்துவரும் விஷயங்கள்தான். நம்முடைய வீடுகளில் நாம் தினம் தினம் காண்பதுதான். இத்தோடு நிறுத்தாமல் இந்த உலகத்தில் நமது வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளின் நிச்சயமற்ற தன்மையை கவியரசர் கீழ்கண்ட வரிகளில் படம் பிடிக்கிறார்.

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை.

அன்னை திரைப்படத்தில் ஆர். சுதர்சனம் அவர்களின் இசையில் திரு சந்திரபாபு அவர்களின் நடிப்பிலும் குரலிலும் படமாகியுக்கும் கண்ணதாசன் அவர்களின் கவியுள்ளம் எனது மறக்க முடியாத பாடம்.
 

"குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்' ஜூன் 12


ஓவ்வொருவருக்கும் ஒரு காலமும் இருக்கிறது; ஒரு கடமையும் இருக்கிறது; அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் கடமையைச் செய்து வர வேண்டும்; இதுவே சரியான ஒழுங்குமுறையாகும். இந்த ஒழுங்குமுறை மீறப்படுமானால் அதுவே சமூகச் சீரழிவாக மாறிவிடும்.

அரும்பு, மொட்டு, மலர், காய், கனி என்ற வளர்ச்சிப் பருவம்தான் தாவரங்களின் இயற்கை நியதி; இதில் மாறுபாடுகள் ஏற்படுமானால் அது அரும்பிலேயே அழுகி, மொட்டிலேயே கருகி, பூவிலேயே சருகாகி, பிஞ்சிலேயே வெம்பிப் போய்விடும் அல்லவா! இந்த இயற்கை நியதி எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுக்கு மட்டும் பொருந்தாமல் போகுமா?

மனித குலம் குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள், முதியவர்கள் என வளர்ச்சி பெறுகிறது. இந்தப் படிநிலையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இது மாறுபடுமானால், சமுதாயம் சீரழிவுக்கு உள்ளாகும்.

இளமைப் பருவம் கல்விக்கானது. "இளமையில் கல்' என்றும், "இளமையில் கல்வி சிலையில் எழுத்து' என்றும் கூறப்படுவது அதனால்தான். படிக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டும்; பணியாற்ற வேண்டிய வயதில் பணியாற்ற வேண்டும், இதற்கு ஏறுமாறாகப் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவது சமுதாய சீர்கேட்டின் அடையாளமாகும்.

இதனை எதிர்த்துதான் ஜூன் மாதம் 12-ஆம் நாள் உலகம் முழுவதும் "குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின'மாகக் கொண்டாடப்பட்டது. நமது நாட்டிலும் விழிப்புணர்வு பேரணிகளும், கருத்தரங்கங்களும், கையெழுத்து இயக்கங்களும் நடத்தப்பட்டன.

""குழந்தைகள் மூலம் பெறப்படும் வருமானம், வீட்டுக்கு அவமானம்'' என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளில் அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதோடு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதி பூண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை நேய மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட நம் கடமையை ஆற்றிடுவோம்''

நாடெங்கும் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்க்கலாம். தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், கூலி வேலை, எடுபிடி வேலை என எங்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாததுபோல அரசு அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.

குழந்தைத் தொழில் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986 - குழந்தைகள் தொழில் செய்வதை முற்றிலும் ஒழிக்கத் தவறிவிட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டன. வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டனைகளும் பெயரளவுக்குச் சிலருக்கு வழங்கப்பட்டன.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றே மனித உரிமை அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் ஆபத்தான அல்லது ஆபத்து இல்லாத என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துவிதமான தொழில்களிலும் பணிபுரிவதைத் தடை செய்யும் வகையில், குழந்தைத் தொழில் ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

இந்திய மக்கள்தொகையில் முதன்மையாக இருப்பவர்கள் குழந்தைகளே! எந்தக் கொள்கையானாலும், திட்டமானாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்க முடியாது.

குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 முதல் நடைமுறையில் இருந்தாலும் அது குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக, அரசின் கடமைகளை ஓரளவு அங்கீகரித்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

""மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும். பலபேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற மனிதனும் அழிபட்டுப் போவான்...'' என்றார் கல்வியியலைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ.

படிக்க வேண்டிய வயதில் தொழில் செய்ய அனுப்பப்படும் குழந்தைகளின் நிலையும் அப்படித்தான்.

Thanks to Dinamani

Sunday, June 24, 2012

நாகேஷ் பற்றி கே. பாலசந்தர்



தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி' வேடத்தை யாரால் மறக்க முடியும்? பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.

“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.

ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.

நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.

சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.

அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?' என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!' என்று விளக்கம் சொன்னார்.

அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்' நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.

நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்' என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.'
அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்' நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே' என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.
`சர்வர் சுந்தரம்' நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்' நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்' என்று கத்தினார்கள்.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.
பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி' நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.

அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்' நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி' நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.

அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்' எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.

ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.

நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா' என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.

இந்த `வெள்ளிவிழா' பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.

ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.

அடுத்து `அபூர்வ ராகங்கள்' படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.
 
(Thanks Manivannan and KUMUTHAM)

நடிகர் திலகம் பற்றி கவிஞர் கண்ணதாசன்


எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

Thursday, June 21, 2012

சுவாமி விவேகானந்தர்



  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
  • எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
  • தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
  • பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
  • மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.
  • 'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
  • ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
  • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
  • நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.
  • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
  • இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
  • மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
  • நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறதுஎன்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.
  • நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
  • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்