Total Pageviews

Sunday, February 25, 2018

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு !

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 13, 1963

பிறப்பிடம்: சிவகாசி, தமிழ்நாடு (இந்தியா)

பணி: திரைப்பட நடிகை

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ஸ்ரீதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசியில் ஆகஸ்ட் 13, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது. ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது. பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான(கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை:

தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீதேவி,1967-ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’.ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.

இந்தி திரை உலகில் ஸ்ரீதேவி:

1978 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிஇந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரைப்படஉலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, அவருடைய “சத்மா” திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது.1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.பின்னர், “சாந்தினி” திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.

பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மூன்றாம் பிறை:

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படம், திரைப்பட உலகில் பல சாதனைகளைப்பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு:

போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 ஆம் அண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பத்மஸ்ரீ விருது:

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

விருதுகள்:

    ‘பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
    சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
    சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
    ‘பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்:

    ‘நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.
    “MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.
    “வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர்  இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
    ‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.

ஸ்ரீதேவியின் முக்கிய படைப்புகள்:

தமிழ்:

    நம் நாடு (1969)
    குமார சம்பவம் (1969)
    மூன்று முடிச்சு (1976)
    காயத்ரி (1977)
    கவிக்குயில் (1977)
    மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
    முடிசூடா மன்னன் (1978)
    பைலட் பிரேம்நாத் (1978)
    மூன்றாம் பிறை (1983)

 நடிகை ஸ்ரீதேவி 1963-ம் ஆண்டு தமிழகத்தில் சிவகாசியில் பிறந்தவர்.  அவர், 1969-ம் ஆண்டு தமிழில் துணைவன் என்ற  தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  அதில் தமிழ் கடவுள் முருகன் வேடம் ஏற்று நடித்துள்ளார்.

தொடர்ந்து பூம்பட்ட என்ற மலையாள படத்திலும், கந்தன் கருணை, நம் நாடு, பிரார்த்தனை, பாபு, பாடி பந்துலு, பால பாரதம், வசந்த மாளிகை மற்றும் பக்த கும்பரா ஆகிய தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றார்.

அதன்பின் 1976-ம் ஆண்டு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படம் மூலம் தனது 13வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியுடன் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்வார்.

தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, பிரியா, ஜானி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

தெலுங்கு மொழியில் அவர் நடித்த, கொண்ட வீட்டி சிம்ஹம், ஷண ஷணம், பொப்பிலி புலி உள்ளிட்டவை சிறந்த படங்களாக உள்ளன.  முடுல கொடுக்கு, பிரேமாபிஷேகம், பங்காரு கனகா, கைதி ருத்ரய்யா உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வந்த நடிகை ஸ்ரீதேவி இந்தி திரையுலகிலும் நுழைந்து புகழ் பெற்றார்.  சொல்வா சாவன் என்ற இந்தி படத்தில் முதன்முதலில் அறிமுகம் ஆன அவர் அடுத்து ஹிம்மத்வாலா என்ற படத்தில் ஜிதேந்திரா உடன் ஜோடியாக நடித்துள்ளார்.

அவருடன் மாவாலி, மக்சாத் மற்றும் ஜஸ்டிஸ் சவுத்ரி உள்ளிட்ட படங்களிலும் ஜோடியாக நடித்து நடிகை ஸ்ரீதேவி இந்தி திரைப்பட ரசிகர்களிடையே புகழ் பெற்றார்.

நாகினா, மிஸ்டர் இந்தியா, சால்பாஸ், சாந்தினி, லம்ஹே, குடா கவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.  லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட அவர் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பின் 2004ம் ஆண்டில் மாலினி ஐயர் தொலைக்காட்சி தொடரில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் அவர் இருந்துள்ளார்.

அவர் கடைசியாக நடித்த தமிழ் படம் புலி.  2015ம் ஆண்டில் அக்டோபரில் இது வெளிவந்தது.  இதில் வில்லியாக நடித்து உள்ளார்.  இந்தியில் அவரது நடிப்பில் வெளியான கடைசி படம் மாம்.

நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. 



Thursday, February 22, 2018

இந்தக் கடைவாசல்லதான் பல முறை தூங்கியிருக்கேன்’-ரஜினி!




முள்ளும் மலரும்' பைரவியும் தாய் மீது சத்தியமும் பில்லாவும் என வெவ்வேறு விதமான கதைகளில் அசத்திய ஆரம்ப கால ரஜினிதான்... இன்றைய பிரமாண்ட ரஜினிக்கு அஸ்திவாரம். விவிதபாரதியில் ‘மை நேம் இஸ் பில்லா’ போட்டால், சவுண்டு வைத்து தெருவே திரும்பிப் பார்க்க அலப்பறையைக் கூட்டியது, நான் மட்டும்தானா என்ன?

ஒருபக்கம் பாலசந்தர், இன்னொரு பக்கம், மகேந்திரன், அந்தப் பக்கம் பார்த்தால், கே.பாலாஜி, இந்தப் பக்கம் தேவர் பிலிம்ஸ் என்று ரஜினி அடித்ததெல்லாம் மாஸ் ஹிட். சூப்பர் ஹிட். இன்றைக்கு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு இணையான வளர்ச்சி, ரசிகர்கூட்டம், ‘என்ன சொல்வார்... எப்போ சொல்வார்’ என்று பிபி எகிறித் தவித்துக் கிடக்கிறான் தமிழன்.

ரஜினியும் ராதிகாவும் ஷூட்டிங் முடிய நள்ளிரவாகி விட, இரண்டுபேரும் காரில் வந்தார்கள். அது 'ரங்கா' படம் என்று படித்ததாக நினைவு. அந்த நள்ளிரவில், சென்னை மவுண்ட் ரோடில் எல்லாக் கடைகளும் அலுவலகங்களும் மூடியிருந்தன. ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார் ரஜினி. இறங்கினார். கடை வாசலுக்கு வந்தார். பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்தார். பற்றவைத்தபடி இங்கும் அங்கும் நடந்தார். அவருக்கே உண்டான ஸ்டைல் அது !

ராதிகாவுக்கு ஆச்சர்யம்... குழப்பம். ‘என்னாச்சு’ என்று கேட்டார். கண்களில் லேசான கலக்கம். நடுக்கத்துடன் குரல் உடையச் சொன்னார்... ‘பெங்களூர்லேருந்து சென்னைக்கு வந்து, சினிமா சான்ஸ் தேடிட்டிருந்த சமயத்துல, சாப்பிடக் காசு கிடையாது. தூங்கறதுக்கு இடம் கிடையாது. இதோ... இந்தக் கடைவாசல்லதான் பல முறை தூங்கியிருக்கேன்’ என்று சொல்ல... அதிர்ந்துவிட்டார் ராதிகா. அதுதான் ரஜினி!

சினிமா, அறிமுகம், கைநிறைய சம்பளம், பேர், புகழ் என நாளொரு கால்ஷீட்டும் பொழுதொரு சம்பள உயர்வுமாக ரஜினி கிராஃப் ஏறிக்கொண்டே இருக்க... அதைப் புத்திக்குள் ஏற்றிக்கொள்ளவே இல்லை அவர். ஷூட்டிங் முடிந்தால், படம் முடித்துக் கொடுத்தால், கண்டக்டராக வேலை பார்க்கும் போது, பெங்களூருவில் சுற்றிய போது என பழைய நண்பர்களை அழைத்து, அவர்களுடன் பொழுதைக் கழித்த ரஜினி... பாசநேசத்தின் அடையாளம்.

சம்பளத்தில் கறார் காட்டுவதில்லை. சக நடிகர்களுடன் பந்தா காட்டுவது கிடையாது. மூத்த நடிகர் நடிகைகளை மதிப்பது, படம் முடிந்த கையுடன் ஆன்மிகத் தேடல்... என வாழ்க்கையை அழகாகவும் அன்பாகவும் ஆக்கிக் கொண்டி ருக்கிற ஆகச் சிறந்த மனிதர் ரஜினிகாந்த். ஆன்மிக குருவான ராகவேந்திரர், சினிமா குருவான கே.பாலசந்தர், செதுக்கிய மகேந்திரன், கைதூக்கி விட்ட நண்பர்கள் என எவரையும் மறக்கவில்லை. அதே மதிப்பு, மரியாதை, பிரியம், பக்தி! அதுதான் ரஜினிகாந்த்.

'பாட்ஷா' இவரை இன்னும் உச்சத்துக்கு ஏற்றியது. சொல்லப்போனால், இவரின் வாழ்க்கையை பா.பி., பா.மு. என்று பிரிக்கலாம். காரணம்... பாட்ஷாவுக்குப் பிறகு இவருடன் ஒட்டிக்கொண்ட அரசியல்!

விழாவில் பேசிய பேச்சு, தீயாய் பற்றிக் கொள்ள... ரஜினி வெர்ஸஸ் ஜெயலலிதா என்றானது. இப்போது ரஜினி சொல்லும் போர் அப்போதே நிகழ்ந்தது. உடனடியாக ஆலோசனைகள் கொடுக்கப்பட்டன. எல்லாமே அரசியல் ஆலோசனைகள். அறிவுரைகள். வியூகங்கள்.


இப்போது ரசிகர்கள் ‘தலைவா வா’ என்கிறார்கள். ஆனால் அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து மக்களும் எதிர்பார்த்தார்கள். ஆசைப்பட்டார்கள். அந்த விருப்பங்கள், ரஜினி பட ஹிட்டுக்களாக அறுவடை செய்யப்பட்டன என்பது கிளைக்கதை. ஆனால் ரஜினிக்கு அரசியலோ, பதவியோ, ஆட்சியோ ஆள்வதோ பிடிக்கவில்லை. அதுதான் யதார்த்த ரஜினி. அதுதான் உண்மையான ரஜினி.

எந்த ஜெயலலிதாவை எதிர்த்தாரோ அந்த ஜெயலலிதாவைப் புகழ்ந்தும் பேசினார். எந்தக் கருணாநிதி மூப்பனார் கூட்டணி உருவாகக் காரணமாக இருந்தாரோ... அந்த ஆட்சியையே சரியில்லை என்றும் ஒருகட்டத்தில் போட்டுடைத்தார். இந்த நிமிடம் வரை அரசியலுக்கு அவர் வரவில்லை. வழக்கம்போலவே அவர் வருவாரா கேள்வி மட்டும் சிந்துபாத் லைலா கதைப் போல் தொடர்கதையாகி, விடுகதை போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் ரஜினியைச் சுற்றியே மையம் கொண்டிருக்கிறது அரசியல் புயல்.

நின்றால் ஸ்டைல், நடந்தால் ஸ்டைல், பேசினால் ஸ்டைல். பார்த்தால் ஸ்டைல் என்றிருந்த காலம் போய், நின்றால், நடந்தால், பேசினால், பேசாது மெளனம் காத்தால், பார்த்தால் என எல்லாமே அரசியல் சூழ் ரஜினி உலகாகிவிட்டது இன்றைக்கு!