Total Pageviews

Tuesday, January 20, 2026

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-டி.ராஜேந்தர் இசையில் ஒரு பாடலை பாட 16 மணி நேரம் எடுத்துக்கொண்ட பாட்டு !

 ஒரே பாட்டுக்கு நள்ளிரவு வரை இடைவிடாமல் ரீடேக்; எஸ்.பி.பி-ஐ படுத்திய டி.ஆர்; எந்த பாட்டு அது?

தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான்.

தமிழ் சினிமாவில், பிரபல பாடகரான பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஒரு சில பாடல்களை சிரமப்பட்டு பாடியிருந்தாலும், டி.ராஜேந்தர் இசையில் ஒரு பாடலை பாட 16 மணி நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். அது என்ன பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் தான் டி.ராஜேந்தர். ஒரு தலைராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து நடிகராகவும் இயக்குனராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

அதேபோல் தனது படங்களில் நாயகிகளை தொடாமல் எப்படி காதலிக்க வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர் டி.ராஜேந்தர் தான். 1980-90 காலக்கட்டங்களில் இவரது படங்கள் வெளியாவது, இவரது படங்களின் இசை வெளியீட்டு விழா நடப்பது என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல் தனது படங்கள் மட்டுமல்லதமல், மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள ராஜேந்தர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

டி.ராஜேந்தர் இசையில் பல பாடகர்கள் ஹிட் பாடல்களை பாடியிருந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், டி.ராஜேந்தர் படத்தில் பாடல் பாட வந்து தெறித்து ஓடியுள்ளார். 1986-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கம், நடிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவில் வெளியான படம் தான் மைதிலி என்னை காதலி. நடிகை அமலா இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 11 பாடல்கள் இடம்பெற்ற இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் டி.ராஜேந்தர் எழுதியிருந்தார்.

8 பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க பாடல் ‘’நானும் உந்தன் உறவை’’ என்ற பாடல். இந்த பாடலை பாட வந்த எஸ்.பி.பி முதலில் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட டி.ராஜேந்தர், இல்லை மீண்டும் ஒருமுறை பாடுங்கள் என்று சொல்ல, மீண்டும் என்.பி.பி அந்த பாடலை பாடியுள்ளார். அதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லி மீண்டும் மீண்டும் பாடுமாறு கூறியுள்ளார். இதில் எஸ்.பி.பி. பாடுவது அவருக்கு திருப்தியாக இருந்தாலும் டி.ராஜேந்தருக்கு திருப்தி இல்லை.

அப்போது அவரிடம் பாடல் நன்றாக வருமே என்பதற்காக என் பாலு இன்னும் நன்றாக பாடுவாரே என்று டி.ராஜேந்தர் சொல்ல, அப்படியோ என்று உற்சாகத்துடன் எஸ்.பி.பி மீண்டும் ஒருமுறை பாடுவாராம். அடுத்து எஸ்.பி.பி பாட மீண்டும் அதே வார்த்தையை சொல்லி டி.ஆர், பாட சொல்லியுள்ளார். ஒரு கால்ஷீட்க்கு 7 பாடல்கள் பாடியிருந்த எஸ்.பி.பி., இந்த ஒரு பாடலை பாட கால்ஷீட் தாண்டி இரவு 12 மணிவரை சென்றுள்ளது.

அப்போதும் திருப்தி இல்லாத டி.ஆர் இன்னொரு முறை போலாமா பாலு சார் என்று கேட்க, இதுக்கு மேல் என்னால் முடியாது. நான் பாடியதை நீங்கள் கேட்டுப்பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் நாளை மீண்டும் ஒருமுறை வந்து பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் எஸ்.பி.பி. ஆனால் இந்த பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, January 1, 2026

உலகம் சுற்றும் வாலிபன் !

 

உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறு களைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டுக்கட்டை கிடையாது திரும்பிய திசை களிலெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.

படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின் விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்திமிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.

*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .

அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, இயக்குனர் பா .நீலகண்டன் ,வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .

*உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.

*உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .

*பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .

*முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்கப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .

*காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .

*லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது

.

*அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .

*டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.

*லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .

*நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .

*குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .

*ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி

மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .

தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

*அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது...

சென்னை தேவிபாரடைஸில்

தொடர்ந்து 225 காட்சிகள்

மதுரை மீனாட்சியில்

தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்

அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! 

சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்.....

#திண்டுக்கல்சமையல்