எஸ்டிடி வேரியண்ட்: Std(Petrol) (Base Model) Rs.4,36,841/- Delhi On Road Price
மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கே10 காரின் எஸ்டிடி வேரியண்டில் 13 அங்குல வீல்கள் சென்டர் கேப்புடன் வழங்கப்பட்டிருக்கின்றது. காரின் உட்பக்கத்தில் பாட்டில் ஹோல்டர்கள், சன் விஷர்கள், கேபின் ஏர் ஃபில்டர், ரிமோட் ஃப்யூவல் லிட் ஓபனர், ரிமோட் பூட் ஓபனர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களாக ரியர் சைல்டு லாக், முன் பக்கத்தில் ப்ரீ டென்ஷனுடன் கூடிய சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ட்யூவல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
எல்எக்ஸ்ஐ வேரியண்ட்: LXI Model - Rs.5,26,070 /- Delhi On Road Price
மேலே பார்த்த எஸ்டிடி வேரியண்டைக் காட்டிலும் சற்று அதிக அம்சங்கள் கொண்ட தேர்வாக எல்எக்ஸ்ஐ வேரியண்ட் இருக்கின்றது. இந்த தேர்வில் பாடி நிறத்திலான பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீட்டர் வசதிக் கொண்ட ஏசி, பவர் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் எஸ்டிடி வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களும் எல்எக்ஸ்ஐ வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
விஎக்ஸ்ஐ வேரியண்ட்: VXI Model - Rs.5,44,884/-
Delhi On Road Price
உடல் நிறத்திலான டூர் ஹேண்டில்கள், ரூஃப் அன்டென்னா, முன் பக்கத்தில் பவர் விண்டோக்கள், அக்சஸெரி சாக்கெட், இன்டர்நெல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், 2 டின் ஸ்மார்ட் பிளே ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் மற்ற கீழ் நிலை வேரியண்டுகளில் இடம் பெறாத அம்சங்களாக விஎக்ஸ்ஐ வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டூர் லாக், இம்பேக்ட் சென்சிங் டூர் அன்லாக், எஞ்ஜின் இம்மொபிலைசர், சென்ட்ரல் டூர் லாக்கிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
விஎக்ஸ்ஐ பிளஸ்: VXI PLUS Model Rs.5,81,435 Delhi On Road Price
மேலே பார்த்த ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்டுகளைக் காட்டிலும் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்விலேயே மிக அதிக வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் மேலே பார்த்த அனைத்து வேரியண்டுகளிலும் இடம் பெற்றிருக்கும் அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பல புதிய மற்றும் கூடுதல் அம்சங்கள் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.
கூடுதல் அம்சங்களாக சில்வர் அக்செண்டுகள் காரின் உட்பகுதி டூர் ஹேண்டில், சென்டர் கார்னிஷ், சைடு லூவர்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரிமோட் சாவி, 17.78 அங்குல ஸ்மார்ட் பிளே திரை (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), மல்டி ஃபங்க்சன்கள் கொம்ட ஸ்டியரிங் வீல், ரியர் பகுதியில் பார்சல் டிரே, 4 ஸ்பீக்கர்கள் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
சிறப்பு வசதிகளிலும், அலங்கார அம்சத்திலும் மாறுபட்டுக் காணப்படும் இந்த வேரியண்டுகள் எஞ்ஜின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 67 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்சமாக 24.39 கிமீ தொடங்கி 24.90 கிமீ வரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அவை மைலேஜ் தரும்.
Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2022/2022-maruti-alto-k10-hatchback-variant-wise-features-details/articlecontent-pf302593-032978.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider