Total Pageviews

Friday, August 19, 2016

வாழ்க்கை சுவையானது.




1. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

2. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

3. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

4. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

5. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

6. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

7.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்று விட்டான் என்பதே.

8. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

9. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

10. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு
ல்லாமே எளிதாகத் தோன்றும்.
 

11. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
 
12. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

13. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Thanks to Neelavathi Neela !

Tuesday, August 16, 2016

காமராஜரும் மாலை நேரக்கல்லூரியும்

 
காமராஜரும் மாலைநேரக்கல்லூரியும்
********
 
ஒருமுறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து, தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், தான் கேட்ட physics major இல் சீட் கிடைக்க வில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டாளாம்.

காமராஜர் சம்பந்தப் பட்டவர்களை கூப்பிட்டு கேட்க,கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்குத் தான் lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணைச்சேர்க்க இயலாது என்று சொல்ல,

காமராஜர், "உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?" என்று கேட்டாராம்.

அந்த முதல்வர் "நாலு பேருக்கு " என்று சொல்ல,இன்னும் 4 பேர் வந்தால் என்ன பெரிய பாத்திரங்கள் இருக்கிறதா" என்று கேட்டாராம்.

அதற்கு அந்த முதல்வர், ."இல்லை; ஒரு முறை சாதம் செய்து விட்டு, இரண்டாம் முறையும் செய்வேன்" என்று சொன்னாராம்.
.
அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக் கூடாது. 3.30 க்கு காலேஜ் முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு காலேஜ் வைத்து,அதே lab ஐ யூஸ் பண்ணலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை நேரக் கல்லூரி.

Thursday, August 11, 2016

யார் அழகி??*

யார் அழகி??*


ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..




"ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?"


இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்..

ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்..

அவருக்கு பதிலில் திருப்தி இல்லை..

அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்"..

அதிலும் அவருக்கு சம்மதமில்லை..

இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது..

ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்..

அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்..

அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..

ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது..

அது கலாம் அவர்கள்..

" குட்..! இதுதான் உண்மையான பதில்..

அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..

அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?..

கனிவான அன்பும், தளறாத நம்பிக்கையும், உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே..

அந்த நம்பிக்கை தானே அழகு" என்கிறார்..

அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது......


 image not displayed

இந்தியாவில் உள்ள டெகிரி அணை உலகின் 5 - வது உயரமான அணை ஆகும் .




#உலகில்_உள்ள_மிக_உயரமான_அணைகள்:

#உலகின் 5 - வது உயரமான அணை:
இந்தியாவில் உள்ள டெகிரி அணை ஆகும் .
இது உத்ராஞ்சல் மாநிலம் டெகிரி நகரில் அமைந்துள்ளது. கங்கையின் கிளை நதியான பாகீரதி ஆற்றின் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 261 மீட்டர் (855அடி). இந்த அணை உலகின் உயரமான அணைகளில் 5 - வது இடத்தைப் பெற்றுள்ளது.

#உலகின் 4 - வது உயரமான அணை:
இத்தாலியில் உள்ள வாஜோண்ட் அணை உலகின்
4 - வது உயரமான அணையாக இருக்கிறது. இது 262 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற அணைகளைவிட இதற்குரிய சிறப்பு இதன் சுவர்தான். அடித்தளத்தில் 27 மீட்டர் அகலத்திலும், உச்சியில் 3.4 மீட்டராகவும் சுவரின் தடிமன் இருக்கிறது. 1963 - ம் ஆண்டு அணை வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் புவியியல் தன்மை சரிவர சோதிக்காமல் கட்டப்பட்டதால் அணையின் மேற்பகுதியின் ஒருபுரம் உடைப்பு எற்பட்டு பல கிராமங்கள் அடியோடு அழிவுக்கு உள்ளானது. அதன் பிறகு இந்த அணை மிக உறுதியாக எழுப்பப்பட்டது.

#உலகின் 3 - வது உயரமான அணை:
உயரமான அணைகளில் 3 - வது இடத்தில் இன்குரி அணை இருக்கிறது. ஜார்ஜியா நாட்டின் இன்குரி ஆற்றில் இது கட்டப்பட்டு உள்ளது. இது 272 மீட்டர் உயரமுடையது. இந்த அணையில் உள்ள காங்ரீட் ஆர்ச் உலகில் உயரமான ஆர்ச் என்ற சிறப்பைப் பெறுகிறது. இங்கும் நீர்மின் நிலையம் செயல்படுகிறது.

#உலகின் 2வது உயரமான அணை:
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ”கிராண்டி டிக்ஸ்யென்ஸ்”அணை உலகின் 2 வது உயரமான அணை என்ற சிறப்புக்குறியது. காங்ரீட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட அணையாகவும் இது திகழ்கிறது. இதன் உயரம் 285 மீட்டர். இங்கு நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு 200 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.

#உலகின் உயரமான அணை:
தஜிகிஸ்தானில்தான் உலகிலேயே மிக உயரமான அணை இருக்கிறது. வாக்ஸ் ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. “நூரக் டேம்” என்பது இதன் பெயராகும். இது 1961 - ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980 - ல் கட்டி முடிக்கப்பட்டது.
314 மீட்டர் உயரமுடைய இந்த அணைதான் இதுவரை உலகின் உயரமான அணையாக இருக்கிறது.

#அறிந்துகொள்வோம்.


Thursday, August 4, 2016

காவிரி ஆறு

 
காவிரியின் கதை:-

கங்கையை விடப் புனிதமான காவிரி என்று புராணங்களும், மகரிஷிகளும் கூறுகிறார்கள்!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இடத்தில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி உருவாகிறது.

பிறப்பிடம்:-

இந்தியத் தீபகற்பத்தின் தெற் குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற் குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக் காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்று கிறது.

காவிரியின் நீளம்:-

காவிரியின் மொத்த நீளம் 800 கிலோ மீட்டர். இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும் பாய்கிறது. இரு மாநில எல்லையிலும் 64 கி.மீ. தூரம் ஓடி இரு மாநிலத் துக்கும் பொதுவான நதி காவிரி என்று சொன்னால் மிகையாகது.

காவிரி ஓடும் இடங்கள்:-

கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக காவிரி ஓடுகிறது.

தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திரு ச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென் று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.

துணை நதிகள்:-

ஹேமாவதி, ஹேரங்கி, லட்சு மண தீர்த்தம், கபினி, சுவர்ண வதி என்ற பெயரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் துணை நதிகள் காவிரியுடன் வந்து கலக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் சங்கமம் ஆகும் இந்த நதிகள் பெரிய காவிரியாக உருவெடுக்கிறது. இதில் சிம்ஷா, அர்க்காவதி ஆகிய ஆறுகளும் சேர காவிரி மிகப் பெரிய நதியாக கம்பீரமாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.

மேட்டூருக்கு கீழே தெற்கு நோக்கி திரும்பும் காவிரியுடன் பவா னி, நொய்யல், அமராவதி ஆகிய துணை நதிகள் கலக்கிறது. இதனால் காவிரி மேலும் விரிவடைகிறது.

அணைக்கட்டுகள்:-

மேட்டூர் அணை, கிருஷ்ண ராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்ட ப்பட்டுள்ள அணை களாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

2 அருவிகள்:-

கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும். ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

கொள்ளிடம், கல்லணை:-

திருச்சி மேல்அணை அமைந்துள்ள இடத்துக்கு முன்பு அது 2 கிலோ மீட்டர் அளவுக்கு அகன்று அகண்ட காவிரி ஆகிறது. மேல் அணையில் இரு பிரிவு களாக பிரிந்து வடக்கு பகுதி யில் உள்ள பிரிவு கொள்ளிடம் ஆகிறது.

தென்பகுதி, காவிரியாக ஓடி கல்லணைக்கு செல்கிறது. அங்கிருந்து வெண்ணாறு பிரிகிறது. பின்னர் காவிரியின் இரு நதிகளும் பல கிளைகளாக பிரிந்து 36 கிளை நதிகளாக பாய்ந்து வளங்களை வழங்குகிறது. இறுதியில் பூம்புகார் அருகில் சிறிய ஓடை யாக மாறும் காவிரி கடலில் கல க்கிறது.

புனித நதி:-

கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலை யும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடா முடியினுள் கங்கை இருக்கி றாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என் றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்களும், மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா, ஆனால் அது தான் உண்மை.

“கங்கையிற் புனிதமாய 

கவிரி” என்கிறார் ஆழ்வார்.

சேர நாட்டினரான இளங்கோ வடிகள்

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப

மணிப்பூ ஆடை அது போர்த்தும்

கருங்கயற்கண் விழித்து ஓல்கி

நடந்தாய் வாழி! காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஓல்கி

நடந்த எல்லாம் நின் கணவன்

திருந்து செங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி காவேரி!”

இதன் பொருள் என்ன தெரியுமா?

“காவிரி நடை பயின்று வருகின்ற வழி யெல்லாம் கழனிகள் எல்லாம் பச்சைப் பசுங்கம்பளங்கள் போல் திகழ்கின்றன. புனல் பெருகும் வழியெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ்சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய, இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டி னரான இளங்கோவடி களும், கம்பனுக்கு இணையாக ரசித்திருக்கிறார்.

`காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார்.

காவேரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது. இங்கு சுகமாக ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார்.

“அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்” என்ற வார்த்தை சரியானது தானே?

காவேரியம்மன் கோவில்:-

அதைவிட மிக முக்கியமான தாக விளங்குவது சிறப்பு வாய் ந்த காவே ரியம்மன் கோயில்! ஆம் காவிரி த்தாய் சக்தியின் வடிவமாகி நிற்கும் திருக்கோயில் இங்குதான் உள்ளது. நீண்ட நெடுங்காலத்திலேயே காவிரித் தாய்க்குக் கோயில் அமைத்து தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் சிலர் தேச நாதி ஸ்வரர் கோயில் என்று எழுதி வைத்திருக்கலாம்.

ஆனால், இப்பொழுதும் மக்கள் காவேரியம்மன் கோயில் என்றே அழைக்கின்றார்கள். காவிரி அம்மையும், காவிரியப்பனும் இணைந்து அமர்ந்துள்ள சிலையை மக்கள் போற்றி வழி படுகின்றனர்.

இப்பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு காவிரியப்பன், காவிரியம்மாள் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. அடுத்து பிரபலமான பெயராக மாதையனும், மாதம்மாளும் காணப்படுகிறது.

சிவாலயங்கள்:-

காவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கூடுமிடம் வரை காவிரி செல்லும் வழிநெடுக சிவாலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவேர முனிவன் காவிரியைக் கொண்டுவரக் காரணமானவன் என்பது புராணச் செய்தி.

அகத்திய முனிவர்:-

அந்தக் காவேரமுனிவரே அகத்திய முனிவர். காவிரிக் கரையில் அகத்திய முனிவரால் வணங்கப் பெற்ற ஐந்து புண்ணிய சிவ ஸ்தல ங்களுள் காவிரியம்மன் கோயிலும் ஒன்று. இந்தப் பூதலிங்கங் களையும் காவிரி அம்மனையும் இவர் வணங்கினார் என்பது மக்களிடத்தில் வழங்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று.

சக்தியின் வடிவமான காவிரி அன்னை இருக்கும் திருக்கோயிலில் சிவன் இல்லாமலா போய்விடுவார்? இங்கு அமைக் கப்பட்டுள்ள ஐந்து சிவலிங்கம் பிரசித்தி பெற்ற லிங்கங்களின் வரிசையில் போற்றப்படுகிறது. பெரிய பெரிய அளவில் ஐந்து லிங்கங்கள் ஆலயத் திற்குள் ஒரே இடத் தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கங்களை ஐந்து பூத லிங்கங்கள் என்று சிவனடியார்கள் போற்றி வணங்குகின்றனர்.

இங்கு நிறுவப்பட்டுள்ள நந்திச்சிலை சிறந்த கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலுள்ள சிறந்த நந்தி களில் இதுவும் ஒன்று.

திருச்சி காவேரியில் ஆடிப்பெருக்கு விழா:-

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு வருவதுண்டு.

அதுமட்டுமல்ல பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு வருவார்கள்.

மேட்டூர் அணை:-

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரில் அமைந்துள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.

கல்லணை:

கல்லணை இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது திருச்சிக்கு அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது பெரிய அதிசயம் ஆகும்.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட் டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
 
விவசாயம்:-

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அதில் நெல் சாகுபடியே முக்கிய தொழிலாகும். நெல் சாகுபடிக்கு மேட்டூரி லிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது காவிரி டெல்டா பகுதி யில் கடைமடை பகுதிவரை சென்றால்தான் அதில் சாகுபடியை முழுமையாக செய்ய இயலும்.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி, புதுக்கோட் டை, கடலூர் எனச் சில பகுதி களை இணைத்துக் காவிரி நீர்ப் பாசன மண்டலமாகப் பிரித் திருக்கிறார்கள். இந்தக் காவிரி நீர்ப்பாசன மண்டலத்தில் குருவை, சம்பா, தாலடி என்னும் மூன்று பருவமும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற நெல் ரகங்கள் உரப் பரிந்துரை, பயிர்ப் பாதுகாப்பு முறை ஆகியவற்றைப் பற்றிக் கையேடு தயார் செய்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளும் அந்தப் பரிந்து ரைகளைப் பின்பற்றி அவற்றில் குறிப்பிடடுள்ள 90% மகசூலைப் பெறுகிறார்கள்.
காவிரியைச் சுற்றி பார்க்க விருப்பமா....

Monday, August 1, 2016

அப்துல் கலாம் ! இப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..?

ஈரோட்டில் அப்துல் கலாம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி.... விழா மேடையில்...

 

அப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசாக , ஒரு வெட் கிரைண்டரை அந்த கம்பெனிக்காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு.ஆனால் சொந்த உபயோகத்துக்கு ஒரு கிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்ட நேரம் அது.

பார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்..
ஆனால் ... கலாம் போட்ட ஒரு கண்டிஷன் : “இந்த கிரைண்டருக்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே , இந்த கிரைண்டரை நான் வாங்கிக் கொள்ள முடியும் .”
பரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெனிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். சரி. பரவாயில்லை.

“4 ஆயிரத்து 850 ரூபாய்” என்று கிரைண்டரின் விலையைச் சொன்னார்கள் .

அடுத்த நொடியே 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான செக்கும் , கிரைண்டரும் கை மாறின.

ஆனால்... அடுத்து நடந்தது .... அப்துல் கலாம் எதிர்பாராதது.

அந்த கிரைண்டர் கம்பெனி , அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை.

“அப்துல் கலாம்” என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக்கை , அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை.

இது கலாம் கவனத்துக்கு வந்தது. அடுத்த நிமிடம் அப்துல் கலாம் அலுவலகத்திலிருந்து , அந்த கிரைண்டர் கம்பெனிக்கு போன் வந்தது. “உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி , கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது...”

“அல்லது..?”

“ நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் ..”

# அப்துல் கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை , அந்த கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.

அதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு !

எப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம்..?

இப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..?

சந்தேகம்தான்..!

அப்துல் கலாமின் நினைவு நாளில்... ....

Sunday, July 17, 2016

தவளை!

 
ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,

தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......

வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது...?

பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.

ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...

👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿

🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿

🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿

🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿

🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿

🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿

🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿

🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿

🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿

🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿

🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿

🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿

💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐

💐உயர முடியும் . . .
💐

💐உதவ முடியும் . . .
💐

💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜

❇❇❇❇❇❇❇
👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .

✳✳✳✳✳✳✳✳
👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .

👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .

👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .

👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .

👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .

👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .

👤
👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .

👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸

💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே🌸

Thanks to C.Malathi