Total Pageviews

Sunday, May 6, 2012

மதுரை சித்திரை திருவிழா

அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழா. வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருவிழா இன்று துவங்குகிறது. காலை கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார் சுந்தரராஜ பெருமாள். நாளை   முழுவதும் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார்.

மறுநாள் மே 5 காலை  ஆறு மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகரை பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு புதூரிலும், மாலை ஆறு மணிக்கு அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.அன்று இரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

பின்,  மே 6ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் தல்லாகுளத்தில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

பின் பக்தர்களின் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகை ஆற்றில் இறங்குகிறார்: அன்று காலை 6.45 மணிக்கு மேல் ஏழு மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் திரள்வர். பகலில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரியும், இரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமும் நடக்கிறது.
மறுநாள் காலை அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்யும், மறுநாள் பூப்பல்லக்கும் நடக்கிறது.

மே 8 தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கள்ளழகர், மே 9ம் தேதி அழகர் மலை சென்றடைகிறார். இதன் முதல் நிகழ்ச்சியான கொட்டகை முகூர்த்த விழா நேற்று காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், மாலை வண்டியூரிலும் நடந்தது.

காலையில் நடந்த விழாவில் அழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் யாழி பூஜிக்கப்பட்டது. பின் கோயிலில் பந்தல் அமைப்பதற்கான பந்தல்கால் பூஜிக்கப்பட்டு, கோவில் முன் வைத்தனர்.
அதன் பின் அழகரை வரவேற்கும் பக்தர்கள் மண்டகபடிகள் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டு 397 திருக்கண் மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருளிபக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

No comments:

Post a Comment