Total Pageviews

Thursday, December 13, 2012

ரஜினி ஸ்பெசல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தாய்மொழியான மராத்தியில் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை. ரஜினிகாந்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்களேன். 

ரஜினிகாந்தின் சொந்த பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவரது பெற்றோர் மகாராஷ் டிராவைச் சேர்ந்தவர்கள். கர்நாடக தலைநகர் பெங்களூரில் வளர்ந்த ரஜினியின் தாய் மொழி மராத்தி ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்க மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இத்தனை மொழிப் படங்களில் நடித்த அவர் தனது தாய்மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 


கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராகும் முன்பு அவர் பல்வேறு சின்ன சின்ன வேலைகளை செய்துள்ளார். ஊரெல்லாம் கொண்டாடும் ரஜினிக்கு பிடித்த ஹீரோ கமல் தான். சிவாஜி பட வெற்றிக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானை அடுத்து ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி. ரஜினி பெரிய நடிகரான பிறகு கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்துள்ள படங்களில் அவர் இறந்துபோகும் காட்சி கிடையாது. அவர் இறப்பது போன்று காட்சி வைத்தால் அவரது ரசிகர்களின் மனம் புண்படும் என்று இயக்குனர்கள் நினைக்கின்றனர்.

பெங்களூர்ல இளமையான காலத்துல ஒரு தடவை வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் மோசமா திட்டுனாங்க. மனசே வெறுத்துப் போச்சு.. பேசாம தற்கொலை பண்ணிக்கிற முடிவுக்கு வந்தேன். சாகறத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட் ஒவியர் ரமேஷை பார்க்கனும்னு தோணுச்சு. அவரோட வீடுதேடி போனேன்.. அவர் அங்கே இல்லை. அனுமார் மலைக்கோயிலுக்கு போனதா சொன்னாங்க. தேடிப் போனேன்... மலையில் இருக்குற பாறையில விதவிதமா ஒவியம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அந்த படங்கள்ல தாடிவச்ச ஒருத்தர் என்னை வெறிச்சு பார்த்து சிரிச்சார். 'உன்னை யாருமே புரிஞ்சுக்கலையா.. கவலையை விடு.. எல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு.. நான் பார்த்துக்கறேன்'னு பேசினார். பிரமிச்சுப் போயிட்டேன். ரமேஷிடம் 'இவர் யாருப்பா'னு கேட்டேன் 'அடப்பாவி இதுகூடவா தெரியாது.. இவர்தான்டா ராகவேந்திரர்'னு சொன்னார்!


பெற்றோர்... எப்போ பார்த்தாலும் என்னோட அம்மா ராம்பாய் 'வெயிலுல அலையாதே.. மறக்காம தலைக்கு எண்ணேய் தேய்ச்சு குளி.. நல்லா சாப்பிடு... வேலையில்லாட்டி பேசாம வீட்டுல படுத்து தூங்கு..'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க! என் வாழ்க்கையோட எதிர்காலத்தைவிட என் உடம்புமேல ரொம்ப அக்கறை. அப்பா கோபக்காரர்.. படிக்கிறப்போ பிடிவாதம் பிடிப்பேன். அதனால் அப்பாவிடம் நிறைய அடிவாங்கிட்டு அப்படியே துங்கிடுவேன். மறுநாள் எதைக்கேட்டு அடம்பிடிச்சோம்... எதுக்காக உதை வாங்கினோம் என்பதே மறந்து போயிடும்.

குருநாதர்.... 'எம்.எஸ்.வி-யை சந்திக்கறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழியில்லை.... சந்திச்ச பின்னாடி சோறுதிங்க நேரமில்லை'னு எம்.எஸ்.விஸ்வநாதனை பத்தி பேசறபோது வாலி சார் அடிக்கடி சொல்லுவார். அப்படித்தான் நானும் கே.பி-சாரைபத்தி சொல்லுவேன். எனக்குள்ளே இருக்குற நடிகனை முதன்முதலா கண்டிபிடிச்ச கடவுள். அப்புறம்தான் உலகத்துக்கே நான் தெரிஞ்சேன். என்னை தெரியவச்சார்! 'காமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே..'னு சொன்னதை இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சுட்டு வர்றேன்.

கண்டக்டர்.... கர்நாடகா டிரான்ஸ்போர்ட்ல கண்டக்டரா வேலை பார்த்தப்போ ராஜ்பகதூர் நண்பனா கிடைச்சான். இப்போகூட ரெஸ்ட் கிடைச்சு பெங்களூரு போனால் வீட்டுலகூட அதிகம் இருக்க மாட்டேன். நண்பர்களோட பொழுது போக்குவேன். இப்போ பணம், பேர், புகழ் எல்லாம் இருக்கு.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், நிம்மதி இப்போ டெபனட்டா இல்லை.


எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்க மாகாண அரசு அழைப்பு! சிறப்பு விருந்தினராக வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்க மாகாண அரசு அழைப்பு!

வீடு... ராயப்பேட்டையில விட்டல் வீட்டு மாடியில் குடியிருந்தேன். அப்பவே அந்த ஹவுஸ் ஓனர் பாத்திமா அக்தர் நல்லா பழகுவாங்க. இப்போ நான் போயஸ் கார்டன்ல வசிக்கிற வீடு அந்தக் காலத்துல அவங்களுக்கு சொந்தமானது. நான்தான் விலைக்கு வாங்கினேன்.. இப்போ அதுக்கு பிருந்தாவன்னு பேர் வச்சிருக்கேன்.

ம்னைவி... திருமணம் முடிஞ்ச பிறகுதான் 'ஏண்டா இவ்வளவு லேட்டா கல்யாணம் செய்தோம்னு ஃபீல் செய்யுற அளவுக்கு லதா அன்பா இருந்தாங்க. என்னோட முன்கோபம், சினிமா தொழில்ல இருக்குற ப்ராப்ளம் எல்லாத்தையும் நல்லா உணர்ந்து உறுதுணையா இருக்குறாங்க. அம்மாவுக்கு என்னோட ஆரோக்கியம் முக்கியம்னா, லதாவுக்கு என்னோட எதிர்காலத்து மேல் ரொம்ப ரொம்ப அக்கறை.

ந்ட்பு... நான் கஷ்டபட்ட போதும் சரி... இப்போ வசதியா இருக்கும் போதும் சரி என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர் ஆச்சர்யமான நண்பன். அதுபோல இன்ஸ்ட்டியூட்ல படிச்சப்போ பழகிய நண்பர்கள் எல்லாருமே எனக்கு இப்பவும் நல்ல ப்ரெண்ட்ஸ்! சினிமாவுல, அரசியலுல எல்லாத்துலயும் நண்பர்கள் நிறையபேர் இருக்காங்க!

வாகனம்... நான் பெங்களூர்ல கண்டக்டரா வேலை செஞ்ச பஸ் நம்பர் 10ஏ. சென்னையில முதன்முதலா வாங்கின ஸ்கூட்டர் டிஎன்ஆர்- 4306, அப்புறம் பியட் கார்... இப்போ இன்னோவா!

பட்டம்... 'திரிசூலம்' வெள்ளிவிழா பங்ஷனுக்கு மதுரைக்கு போயிருந்தேன். அப்போ எல்லாரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் அவங்க அவங்க பேரைச்சொல்லி சாமிகிட்டே அர்ச்சனை செஞ்சாங்க. குருக்கள் என்னோட நடத்திரத்தை கேட்டார் 'தெரியாது சாமீ..'னு சொன்னேன். இப்போதான் உண்மை தெரியுது, மக்கள் கொடுத்து இருக்குற பட்டம்தான் (சூப்பர்ஸ்டார்) என்னோட உண்மையான நட்சத்திரம்னு!

மேக்கப்.... 'அபூர்வராகங்கள்' படத்துல முதன்முதலா மேக்கப் போட்ட சுந்தரமூர்த்திதான் 'குசேலன்'வரை எனக்கு மேக்கப் போட்டவர்.

நடிப்பு... படப்பிடிப்புக்கு போகும்போது முக்கியமான காட்சிகள் இருந்தால் என்னோட டயலாக்கை முதல்நாளே வாங்கிட்டுப் போய் வீட்டுல ரிகர்சல் செய்வேன். வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுல மனப்பாடம் செய்யத் தெரியாம அப்படி செய்யறது இல்லை. மறுநாள் தேவையில்லாம நேரத்தையும், ஃபிலிமையும் வேஸ்ட் பண்ணாம நடிகனும்னு ஒரு அக்கறை அவ்வளவுதான்!

ரசிகர்.... 'அபூர்வ ராகங்கள் ' படத்தை சென்னை கிருஷ்ண வேணி தியேட்டர்ல முதன்முதலா பார்த்தேன். நான் நடிச்ச காட்சியை திரையில பார்த்ததும் சீட்டுல உட்கார்ந்து இருந்த ஒரு சிறுமி என்னை திரும்பி பார்த்தார். படம் முடிஞ்சி வெளியில வரும்போது என்கிட்டே ஓடிவந்த சிறுமி சினிமா டிக்கட் பின்னாடி கையெழுத்து கேட்டார்.. நான் போட்டேன். எனக்கு கிடைச்ச முதல் ரசிகை அந்த சிறுமிதான். அவர் எங்கேனு தேடிக்கிட்டே இருக்கேன். நான் போட்ட முதல் ஆட்டோகிராப் சினிமா டிக்கட் பின்னாலதான்!

Thanks to One India.com

No comments:

Post a Comment