Total Pageviews

Friday, April 22, 2016

எண்ணங்களும் செயல்களும் !

வாழ்க்கையின் பிரதிபலிப்பு!


நம் எண்ணமே!

ஒரு ஊரில் ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது. மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகள் பொருத்தப் பட்டிருந்தன.

ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.

அந்த மாளிகை முழுவதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரிந்தது. இதைப் பார்த்த குட்டி நாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது. கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.

நம்மைச் சுற்றி எத்தனை அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தபடி மகிழ்ச்சியாக வெளியே ஓடியது.

அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது. அது கொஞ்சம் முசுடு. யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும். அந்த நாய்க் குட்டியும் அந்த கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்த்தது.

கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும், அதற்குப் பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது. அதனுடைய பிம்பங்களும் அதே போல் திரும்ப முறைப்பதாகத் தெரிந்தது.

அந்த நாய் நமக்கு எதிரிகளாக எத்தனை நாய்கள் என்று பயந்து வெளியே ஓடி விட்டது.

நம்முடைய விறுப்பு, வெறுப்புகளான நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாக இருக்கின்றன.

No comments:

Post a Comment