Total Pageviews

Saturday, February 28, 2026

ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

 

2 மாதம் சிகிச்சை; என்னிடம் சொல்லாம அவரை விடாதீங்க: ரஜினிகாந்த் அட்மிட் ஆன மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர் வைத்த கட்டளை!

உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் தனக்கு போன் செய்து நலம் விசாரித்தாகவும், ட்ரீட்மெண்ட் முடிந்தும்கூட சி.எம்.சொன்னால் தான் உங்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தர் இயக்கததில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, போக்கிரி ராஜா, பில்லா, மிஸ்டர் பாரத், ப்ரியா என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் ரஜினிகாந்த் வேகமாக வளர்ந்து வந்தாலும் அவருடன் தொடர்ந்து சர்ச்கைள் மற்றும் பொய்யான தகவல்களும் பரவ தொடங்கியது.அந்த வகையில் 1978-ம் ஆண்டு ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, அம்ரீஷ் ஆகியோர் நடிப்பில வெளியான பிரியா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று  ஓடிக்கொண்டிருக்கும் போது நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் அவரை பிடிக்காதவர்கள், ரஜினிகாந்த் இனி நடிக்க மாட்டார். அவர் பைத்தியம் அவரின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று பரப்ப தொடங்கியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த நிகழ்வுகள் குறித்தும், எம்.ஜி.ஆர் தன்னிடம் நலம் விசாரித்தது குறித்தும் ஒரு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில், பணம் கொடுத்தே சிவந்த கை எம்.ஜி.ஆர், அவர் எப்போதே எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கார் என்பது தெரியாது. ஏனென்றால் விஜயா ஹாஸ்பிடல் வந்து அட்மிட்டாயிருக்கேன்.

நர்வஸ் பிரேக்டாம். எம்.ஜி.ஆர் அவர்கள் வாரத்திற்கு இருமுறை போன் பண்ணி எப்படியிருக்கார் என்று விசாரிப்பார். அங்கே இரண்டு மாதம் சிகிச்சை எடுத்து நான் குணமான பிறகும், என்னை வெளியே விடடாமல் அப்படியே உட்கார வச்சிட்டாங்க. ஏனென்றால் சி.எம். ஆபிஸில் இருந்து ஒரு போன் வருகிறது. நான் டிஸ்ஜார்ஜ் ஆன பிறகு அவருக்கிட்ட சொல்லிவிட்டு தான் போகனும் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் எனக்கு போன் செய்தார். எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்கலா? நான் டெல்லி போய்ட்டு இருக்கேன். வந்தவுடன் வந்து என்ன பாருங்க என்று சொன்னார்.

அதன்படி அவரை பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது என்கிட்ட சொன்னாங்க. பார்ப்பா தம்பி ஒரு நடிகனுக்கு உடம்புதான் மூலதனம். அந்த உடம்பை ஜாக்கர்த்தியா பாத்துக்கொணும். ஸ்ட்ண்ட் பண்றேனு சொல்லி ரிஸ்க் எடுக்காதே. ஸ்டெண்ட் பண்ணதற்கு வேற ஆளங்க இருக்காங்க என்று அறிவுரை கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

செம்மீன் ஷீலா !

 

17 வயதில் அறிமுகம்; ஒரே நடிகருடன் 107 படங்கள் நடித்து சாதனை: 2 முதல்வர்களுடன் நடித்தவர் இந்த நடிகை!

2 முதல்வர்களுடன் நடித்துள்ள இந்த நடிகை ஒரே நடிகருடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2 முதல்வர்களுடன் நடித்துள்ள இந்த நடிகை ஒரே நடிகருடன் இணைந்து 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது 17 வயதில் சினிமாவில் அறிமுகமாகி சுமார் 480 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை ஒருவர், 2 மாநில முதல்வர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான் செம்மீன் ஷீலா.

1945-ம் ஆண்டு, கேரளாவில் பிறந்த இவர், தனது 17 வயதில் 1962-ம் ஆண்டு, பாக்யசித்தகம் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதே ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் தமிழில் வெளியான பாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷீலா, அடுத்து எம்.ஜி.ஆருடன் சில படங்களில் நடித்திருந்தார். மேலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

1995-ம் ஆண்டு வெளியான பம்பாய் படத்தில் நடித்திருந்த ஷீலா 10 வருட இடைவெளிக்கு பிறகு 2005-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தில், பிரபுவின் அத்தை அகிலாண்டேஸ்வரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் நடிகர் பிரேம் நசீருடன் இணைந்து 107 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த ஷீலா, இன்றுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை செய்துள்ளார்.

அதேபோல் தமிழில் எம்.ஜி.ஆருடன் நடித்த ஷீலா, தெலுங்கில் என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார். இவர்கள் இருவருமே பின்னாளில், முதல்வர்களாக முத்திரை பதித்தனர். 1966-ம் ஆண்டு மலையாளத்தில் சத்யன் நடிப்பில் வெளியான செம்மீன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அன்று முதல் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்பட்ட இவர், அழகிலும் நடிப்பிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குனர், நாவல் ஆசிரியர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், ஓவியர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய நடிகை செம்மீன் ஷீலா, காதலிக்க நேரமில்லை பட நடிகர் ரவிச்சந்திரனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜார்ஜ் விஷ்ணு என்ற ஒரு மகன் இருக்கிறார். தமிழில் காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜார்ஜ் விஷ்ணு, கடைசியாக சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 80 வயதை கடந்துள்ள நடிகை ஷீலா, கடைசியாக மலையாளத்தில் ‘அனுராகம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். யக்ஷகானம், சிகரங்கள் என இரு படங்களை இயக்கியுள்ள ஷீலா, தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரது மகன் விஷ்ணு தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழச்சி கயல்விழி

Wednesday, February 25, 2026

சுருளி ராஜன் !

 படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எம்ஜிஆர் ரஜினியை விட படு பிசியான நடிகர்.. 1 ஆண்டில் 50 படம்!! இந்த பழக்கத்தால் பறிபோன உயிர்..
 
சினிமாவில் சிலரது குரலும், அவர்களது உடல்மொழியும் தனித்துவமானது. அதை பிரதியெடுக்க முயற்சித்தாலும், அந்த நேர்த்தியை வார்த்தெடுக்க வாய்ப்பில்லை. அப்படியான கலைஞர்கள் காலம் கடந்து வாழ்பவர்கள். அப்படி ஒருவர் தான் மறைந்த நடிகர் சுருளி ராஜன். ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்து கரியரின் உச்சத்தில் இருந்தவர். அவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள் காத்திருந்த காலம் இருந்தது.
 
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி ராஜனின் பெற்றோர் சிறு வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் தனது அண்ணன் பராமரிப்பிலேயே வளர்ந்தார். தொடக்கத்தில் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தவர், சினிமா கனவை எட்டிப்பிடிக்க சென்னை வந்தார். திமுகவின் தேர்தல் நிதியில் தயாரிக்கப்பட்ட கருணாநிதி வசனம் எழுதிய ‘காகிதப் பூ’ என்ற நாடகத்தில் நடிக்க சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
 
இந்த நாடகம் வெற்றிபெற்றதால் சுருளி ராஜனுக்கான சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ‘காகித பூ’ நாடகத்தை பார்த்த நடிகர் ஜெய்சங்கர், அவர் நடிப்பில் 1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.அடுத்து ‘அன்று கண்ட முகம்’ படத்தில் நடித்தார். 
 
ஜெய்சங்கர் - சுருளிராஜன் இடையிலான பிணைப்பு அதிகரித்ததால், அடுத்தடுத்து ஜெய் சங்கர் நடித்த ‘காதல் படுத்தும் பாடு’, ‘உயிர் மேல் ஆசை’ ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் ‘தண்ணீர் திருவிழா’, சிவாஜியுடன் ‘அஞ்சல் பெட்டி 520’ படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 
 
தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினியுடன் அன்புக்கு நான் அடிமை, எல்லாமே உன் கைராசி, ஜானி, காளி, முரட்டுக்காளை, நான் போட்ட சவால், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1980-ம் ஆண்டு மட்டும் 50 படங்கள் நடித்து சாதனை படைத்தார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சுருளி ராஜன் நடித்துள்ளார்கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு விஜயகாந்தின் ‘ஏமாறாதே ஏமாறாதே’ திரைப்படம் தான் சுருளி ராஜன் நடிப்பில் வெளியான கடைசி படம்.
 
அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையானதால் சுருளிராஜனின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து அனைவரும் சிரிக்க வைத்த சுருளி ராஜன் கடந்த 1980-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு பிறகும் பல திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Sunday, February 8, 2026

பட்டிமன்றம் ராஜா'

 

பட்டிமன்றம் ராஜா'

பட்டிமன்றம்' ராஜா. வங்கியில் உயர் பதவி யிலிருந்து இன்றோடு ஓய்வு பெறுகிறார். நீண்ட கால வங்கிப் பணியை நிம்மதியாக நிறைவு செய்ததற்காக மதுரை மீனாட்சியம்மனை தரிசிப்பதற்குச் சென்று கொண்டிருந்தவரிடம் பேசினேன். ''ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு. 1984-ம் ஆண்டு படிப்பு முடித்த கையோடு ஏதாவது நல்ல வேலை கிடைக்காதானுதான் பேங்க் வேலைக்கு வந்தேன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்துவிட்டேன். இப்போது எனக்கு, 59 வயது ஆகிறது. மக்களுடன் மக்களாக வங்கியிலும் பட்டிமன்றப் பேச்சாளராக இத்தனை வருடம் நான் பயணித்ததற்கும் மீனாட்சி அம்மனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் மீனாட்சி அம்மனை வணங்கி விட்டு த்தான் தொடங்குவேன். இதோ, இத்தனை வருட காலம் என் உடல் நலத்தைப் பேணிக்காத்த அம்மனை வணங்கத்தான் செல்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டவர்,

உழைக்க ஒரு காலம், ஓய்வு எடுக்க ஒரு காலம் என ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்தையும் தாண்டி வருவான். அப்படி எனக்கு உழைப்பதற்கான வயதையும் ஓய்வுக்கான வயதையும் சரியான நேரத்தில் செலவிடுகிறேன். இடையில், நடிப்பு, பேச்சு என எனக்காகச் சலுகைகள் தந்த வங்கிக்கு எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் பணிபுரிந்த இடமும் சரி, குடும்பமும் சரி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்'' என்றவரிடம், "இனி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடிக்கலாமே. நடிப்பையும் பேச்சையும் தொடர்வீர்களா..?'' எனக் கேட்டதற்கு, 'நிச்சயமாக... பேச்சுதான் எனக்கு உயிர் மூச்சு. அதை விட முடியாது. கண்டிப்பாக என்னைப் பட்டிமன்ற மேடைகளில் தொடர்ந்து பார்க்கலாம்.

சாலமன் பாப்பையாவுடன் இணைந்து சன் டிவிக்காகப் பட்டிமன்றங்களில் பேசிவரும் இவர், 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கருடன் இணைந்து அந்தந்த நாள்களுக்கான சிந்தனைகள் பற்றிப் பேசியவர். தன் நகைச்சுவையான பேச்சின் இடையே சமூக சிந்தனைக் கருத்துகளைப் பேசுவது ராஜாவின் பலம். பாரதி பாஸ்கரும் ராஜாவும் எப்போதும் எதிரெதிர் அணியில் இருப்பவர்கள். ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு பேசும்போதுதான் கைத்தட்டலால் அரங்கே அதிரும். 7,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கும் சிறப்புக்கு உரியவர் 'பட்டிமன்றம்' ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பணியை நிறைவு செய்திருக்கும் ராஜா