Total Pageviews

Wednesday, October 30, 2024

உலகம் சுற்றும் வாலிபன் !

*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .

உலகம் சுற்றும் வாலிபன் பெரும் நெருப்பாறு களைக் கடந்து திரையைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் வேறு எந்த ஒரு மாநிலமொழி படத்துக்கும் இப்படி ஒரு முட்டு க் கட்டை கிடையாது திரும்பிய திசைகளி லெல்லாம் நெருக்கடி பெற்ற படம் .

 படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கும் பொழுது டப்பிங் மிக்சிங் ரீ ரிக்கார்டிங் பிரிண்ட் போடுதல் என எந்த பணிகளில் எப்போது எம்ஜிஆர் ஈடுபட்டாலும் மின்சாரம் அறவே இருக்காது எம்ஜிஆருக்கு எப்படி எல்லாம் தொல்லை தரலாம் என்பதில் முழு கவனம் செலுத்தியது கருணாநிதி யின் ஆளுங்கட்சி மேலும் சுவரொட்டிகளின் வரியை உயர்த்தியது.

படம் வெளியான அன்று சென்னையிலே மின் வினியோகம் இல்லை இனிமேலும் மின் விநியோகம் அறவே வராது என்ற நிலைமையை புரிந்த தேவிபாரடைஸ் சொந்தக்காரர்கள் சக்தி மிக்க ஜெனரேட்டரை வைத்து திரையில் உலகம் சுற்றும் வாலிபனை திரையிட்டு காட்டினார்கள்.

*'மேலே ஆகாயம் கீழே பூமி' இதுதான் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வைத்த முதல் டைட்டில் .

அயல்நாட்டு படப்பிடிப்புக்கு அதிகம்பேர் அரசாங்கம் அனுமதிக்கவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், விஎன் ஜானகி அம்மையார், ஆர் எம் வீரப்பன், மஞ்சுளா ,சந்திரகலா, லதா ,அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராம மூர்த்தி,  இயக்குனர் பா .நீலகண்டன் , வசனகர்த்தா கே.சொர்ணம் நடன இயக்குனர் கோபால கிருஷ்ணன் போன்ற முக்கிய மானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் .

*உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் .பின்னர் எம்.எஸ்.வி இசை அமைப்பாளர் ஆனார்.

*உலகம் சுற்றும் வாலிபன் வட ஆற்காடு தென் ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கான வினியோக ஒப்பந்தம் முதன்முதலாக ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது .

*பட்டிக்காட்டு பொன்னையா இயக்குனர் பி எஸ் ரங்கா அவர்களின் உதவியாளர் ஹரி அவர்கள் எக்ஸ்போவில் படம் எடுப்பதற்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் .

*முப்பத்து ஆறாயிரம் பல்புகளில் வெளித்தோற்றத்தில் சுவிஸ் பெவிலியனில் எம்ஜிஆரும் சந்திரகலாவும் ஆடிப்பாடும் நிகழ்ச்சிக்கு விசேஷஅனுமதி வழங்க ப்பட்டது.எக்ஸ்போ 70 கண்காட்சியில் மொத்தம் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது .

*காமபுரா புத்தர் சன்னதி ஜப்பானின் புகழ்பெற்ற புராதான கோவில் அங்கு வீற்றிருக்கும் பிரம்மாண்ட சித்தார்த்தர் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் புத்தி தெளிந்து அவர் பைத்தியமாக தோன்றும் காட்சியை எடுத்தனர் .

*லில்லி மலருக்கு கொண்டாட்டம் என்ற பாடலில் எம்ஜிஆர் மஞ்சுளா கப் அண்ட் சாசரில் தோன்றும் காட்சி நாராவில் டரீம் லேண்டில் எடுக்கப்பட்டது

.

*அன்னப்பட்சி போன்ற சிறிய கப்பலில் எடுக்கப்பட்ட பன்சாயி பாடல் காட்சி டோக்கியோவில் உள்ள யுமூரிலேண்டில் எடுக்கப்பட்டது .

*டால்ஃபின் ஷோ மற்றும் தீ வளையத்தில் நாய் மற்றும் புலிகள் தாவும் காட்சியை மக்கள் ரசித்துக் கொண்டிருக்கும்போதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நேரடியாக படமாக்கினார்.

*லதாவின் முதுகில் அசோகன் துப்பாக்கியை நீட்டியவாறு பின்தொடரும் சீன் டோக்கியோவில் பரபரப்பான கின்சா அங்காடித்தெருவில் எடுக்கப்பட்டது .

*நிலவு ஒரு பெண்ணாகி பாடல் ஹாங்காங்கில் உள்ள பெல்ஸ் கடற்கரை யில்படமாக்கப்பட்டது .

*குழந்தைகளோடு எம்ஜிஆர் லதா பங்கேற்கும் சிக்குமங்கு பாடல்டைகர் பார்ம் கார்டனில் படமாக்கப்பட்டது .

*ஹாங்காங்கின் இந்திய வம்சாவளி

மிஸ்டர் ஹரி லீலாவின் விசைப்படகில் தங்கத் தோணியிலே பாடல் எடுக்கப்பட்டது .

தங்கத் தோணியிலே பாடல் கே.ஜே.யேசுதாஸ் எம்ஜிஆருக்காக பாடிய முதல் பாடல் .

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் சேர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் நடித்த தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ராத் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற முதல் வெளிநாட்டு நடிகை ஆவார்.அந்த பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.

*அவள் ஒரு நவரச நாடகம் பாடல் காட்சி சில மேட்சிங் ஷாட்டுகளை சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான நீச்சல் தொட்டியில் எடுக்கப்பட்டது...

சென்னை தேவிபாரடைஸில்

தொடர்ந்து 225 காட்சிகள்

மதுரை மீனாட்சியில்

தொடர்ந்து சுமார் 300 காட்சிகள்

அரங்கு நிறைந்த காட்சிகளாக, திரையரங்கில் ஓடியது... உலக திரைப்படத் துறையில் இனியும் யாரும், எவரும் நெருங்க முடியாத, நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்டமான சரித்திரம் படைத்த, சகாப்தம் உருவாக்கிய சாதனையின் உச்சம் பெற்ற வெற்றி எது தெரியுமா???!!! 

சென்னை நகரில் சுவரொட்டிகள் (Wall Posters) ஒட்டப்படாமலேயே வெள்ளிவிழா கொண்டாடிய அபூர்வமான, பேரற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான இணையே இல்லாத அட்டகாச வெற்றி பெற்றது மிகவும் குறிப்பிட தக்கதாகும்.....

Tuesday, October 29, 2024

பூர்வீக கிராமத்தை கைவிட்ட கார்த்திக்: முத்துராமன்

 

பூர்வீக கிராமத்தை கைவிட்ட கார்த்திக்: முத்துராமனும் போகாதது ஏன் தெரியுமா?

1956-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான ரங்கோன் ராதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமகமானார் நடிகர் முத்துராமன்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள நடிகர் கார்த்திக், சொந்த கிராமம், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். இந்த படத்திற்கு பின் மணிரத்னம் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களில் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்திக், தற்போது தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான, பிரஷாந்தின் அந்தகன் படத்தில் நடிகர் கார்த்திக் கேரக்டரிலேயே நடித்திருந்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. க்ளாசிக் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக்கின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள, ஒக்கநாடு மேலையூர் என்ற கிராமம் தான். கார்த்திக் தந்தை முத்துராமன் இந்த ஊரில் தான் பிறந்துள்ளார்.

முத்துராமனின் உறவினர்கள் பலரும் இப்போது இந்த ஊரில் வாழ்ந்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் ரத்னாவதி தம்பதிக்கு 1929-ம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தவர் தான் முத்துராமன். நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய முத்துராமன், 1956-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான ரங்கோன் ராதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமகமானார். எம்.ஜி.ஆர் சிவாஜி, ஜெயலலிதா ஆகியோருடன் நடித்துள்ள முத்துராமன், ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவருடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி. சகோதரி தங்கள் சொந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் செய்துகொண்டார். சகோதரர்கள் இருவரும் அக்கா தங்கை இருவரை திருமணம் செய்துகொணடனர். முத்துராமன் உயிருடன் இந்த காலக்கட்டத்தில் அவர் தனது சொந்த ஊருக்கு யாரையாவது பார்க்க சென்றால் விடமாட்டார்களாம். கோவில் கும்பாவிஷேகத்தின்போது கோவில் கலசத்தில் கழற்றிப்போட்ட மோதிரத்தை முத்துராமன் திரும்ப வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதை இந்த ஊர்க்காரர்கள் குற்றமாக எடுத்துக்கொண்டதே இதற்கு காரணமாம்.

கிராமத்தில் இருந்த முத்துராமனின் வீடு நிலம் என் அனைத்தையும் விட்டுவிட்டார்களாம். முத்துராமன் உறவனர் முறையான ஒரு பாட்டி இந்த ஊரில் இருப்பதாகவும், முத்துராமனின் வீடு இருந்த இடம் தற்போது தரைமட்டமாக உள்ளதாகவும், இந்த ஊர் கோவில் கும்பாவிஷேகத்திற்கு முத்துராமன் வந்துள்ளார். ஆனால் அவரது மகன் கார்த்திக் மற்றும் பேரன்கள் யாருமே இந்த ஊர் பக்கமே வந்தது இல்லையாம். கார்த்திக்கின் உறவினர் ஒருவர் சொந்த கிராமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தபோது கண்டிப்பாக வருகிறேன் என்று சொன்னாராம் கார்த்திக். இந்த தகவல் பிரேக்கிங் வோல்க்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

Monday, October 28, 2024

ஸ்ரீவித்யா! கமல்ஹாசனும் நானும் காதலித்தோம். அது அவ்வளவு பெரிய ரகசியமில்லை !

 ஒருமுறை கமல்ஹாசனுக்கும் தனக்குமான காதலை உணர்ச்சி வெள்ளமாக மலையாளப் பேட்டியொன்றில் பகிர்ந்திருந்தார் நடிகை ஸ்ரீவித்யா ... அதில் கமல்ஹாசனும் நானும் காதலித்தோம். அது அவ்வளவு பெரிய ரகசியமில்லை. திரைத்துறையில் அனைவருக்குமே தெரியும். கமலுடைய தந்தையாருக்கு என் மீது அதிக அன்பிருந்தது. நாங்கள் திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள்.

ஆனால் சில வருடங்கள் காத்திருக்கும்படி கமல்ஹாசனிடம் என் அம்மா வேண்டுகோள் விடுத்தார்.''' உங்கள் இருவருக்கும் 21 வயதுதான் ஆகிறது. கமல் மகா நடிகனாக ஆக வேண்டியவன். ஸ்ரீவித்யாவும் அப்படியே. திரைத்துறையில் நீங்கள் அடைய வேண்டிய உயரம், போக வேண்டிய தூரம் அதிகம். அப்படி பெரிய நடிகர்களாக ஆகையில் உங்கள் இருவருக்குமே வேறு வேறு ஆட்கள் மீது காதல் வரலாம். ஒரு நான்கைந்து வருடங்கள் காத்திருங்கள். அதன் பின்னரும் காதல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள்'''' என்று கமல்ஹாசனிடம் அம்மா அறிவுறுத்தினார்.

ஆனால் கமலுக்கு அதில் விருப்பமில்லை. நானோ என் தாயார் பேச்சை மீர விரும்பவில்லை. இதனால் கமலுக்கு என் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். சிறிது காலத்திலேயே அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். நிறைவேறாத என் காதலை எண்ணி நான் மிகவும் காயமடைந்துவிட்டேன். என்னை விட அந்தப் பெண்ணிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ? நான் எதில் குறைந்தேன் ? என்றெல்லாம் நினைத்து தீரா வலியில் விழுந்தேன். அந்த வலியில்தான், எதையும் யோசிக்காமல், என்னை விரும்புகிறேன் என்று சொன்ன ஒருவரை (மலையாளத் தயாரிப்பாளர் ஜார்ஜ்) எதையுமே யோசிக்காமல் திருமணம் செய்தேன். அந்த திருமணமும் தோல்வியடைந்தது'''' என்று கூறிஇருந்தார்.


- பாட்ஷா 2 - இனி இல்லவே இல்லை! ரஜினி !

 

      "அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார்.

நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.”

அந்த அழகிய நட்பு 2018 மே மாதத்தில் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. பாலகுமாரன் மறைந்து போனார்.

ஆம். இதே மே 15 ல்தான் பாலகுமாரன் இந்த பூமியை விட்டு புறப்பட்டு போனார்.

அவரது இறுதி காலம் முழுவதும் ஆன்மீக அமைதியில் கரைந்து அப்படியே ஆகாயத்தில் கலந்து போனார்.

தன் படங்களுக்கு வசனம் எழுத பாலகுமாரனைப் போல இன்னொருவர் வர இனி வாய்ப்பே இல்லை என ரஜினியே நினைக்கும் அளவுக்கு தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி விட்டு போய் விட்டார் பாலகுமாரன்.

அந்த இடம் இனி என்றென்றும் நிரந்தர காலி இடமாகவே ரஜினியின் வாழ்வில் இருக்கும்.

ஈடு சொல்ல முடியாத சிறப்போடு நடந்து முடிந்தது இந்த உலகத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் வாழ்க்கைப் பயணம்.

ஆம். இதுதான் அழகு.

நடிகை காஞ்சனா அவர்கள்!

 

'விமான பணிப்பெண்ணாக இருந்த என்னை இயக்குனர் ஸ்ரீதர் அவர் இயக்கிய 'காதலிக்க நேரமில்லை' படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என்னை தற்போது வரை பலருக்கும் காஞ்சனா என்று தான் தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி. நடிகை வைஜெந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் எனது பெயரை காஞ்சனா என ஸ்ரீதர் மாற்றினார்.

1964-ல் அந்த படம் வெளியான பிறது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படவாய்ப்புகள் குவிந்தது. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்தேன். அந்த சொத்துகளை எனது உறவினர்கள் என்னை எம்மாற்றி அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு வழக்கு என்று பெற்றோருடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பது வெங்கடாஜலபதுக்கு எழுதி வைப்பதாக வேண்டி கொண்டிருந்தேன்.

ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் மீண்டும் என்னுடைய கையுக்கு வந்தது. இதனால் நான் வேண்டிக்கொண்ட படி, 80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிட்டேன். நான் திரைப்படத்தில் ஓய்வு இல்லாமல் நடித்து கொண்டிருந்ததால், எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதையே என் பெற்றோர் மறந்து விட்டனர். நானும் திருமணம் செய்து கொள்ளமல்லேயே இருந்து விட்டேன்.

இப்போது என்னுடைய தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை . எனது தங்கை என்னை நன்றாக பார்த்து கொள்கிறார்.

தற்போது என்னுடைய கவனம் முழுவதையும் ஆன்மீக ஈடுபாடுகளில் காட்டி வருகிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையான் தரிசனம், யோகா என என்னை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறேன். கடவுளிடம் இன்னொரு பிறவி மட்டும் வேண்டாம் என வேண்டி கொள்கிறேன் என காஞ்சனா தன்னை பற்றி தெரிவித்துள்ளார்.'

Tuesday, August 23, 2022

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு?

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???*

 சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு...

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்...

 அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்...

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

ஏன் கோவிலை கட்டினார்கள்?

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???

பாரதத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.

வாழ்க தமிழ்
வெல்க பாரதம்
வந்தேமாதரம் 🚩🙏
இதுதான் உண்மையான வரலாறு...