Total Pageviews

Wednesday, October 22, 2025

நண்பரின் மகளுக்காகக் காலேஜ் சீட் கேட்டும் கொடுக்காத முதல்வர்... சந்திரபாபு கொடுத்த பதிலடி!

 

சந்திரபாபுவை சந்திப்பதற்காக அவரது நண்பர் ஒருவர் மகளையும் அழைத்து வந்தார். அவர் சந்திரபாபுவிடம் என்னுடைய மகளுக்குக் காலேஜ்ல சீட் வாங்கித் தரணும். நீங்க நினைச்சா நிச்சயமா முடியும்னு சந்திரபாபுவிடம் கூற, காலேஜ் சீட்டா? வாங்க என்னோடு என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார் சந்திரபாபு.

அந்தக் கல்லூரி நிர்வாகத்தைச் சந்தித்த சந்திரபாபு, இந்தப் பெண்ணுக்கு சீட் வேணும்னு கேட்டார். அதற்கு அட்மிஷன் எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி சீட் தருவதற்கு வாய்ப்பு இல்லன்னு அந்த நிர்வாகி சொன்னார். இதைக் கேட்டதும் சந்திரபாபு மிகுந்த வருத்தம் அடைந்தார். ராத்திரி முழுவதும் தூங்கவே இல்லை. அப்படி இருக்கும்போதுதான் அந்தக் கல்லூரிக்கு நிதி திரட்டுவதற்காக எம்எஸ்வி.யுடன் இணைந்து 75 ஆயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

அதனால் மறுநாள் காலையில் அந்த நண்பரையும், அந்தப் பெண்ணையும் தன் வீட்டுக்கு வரவழைத்து மீண்டும் அந்தக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு போய் கல்லூரி முதல்வரைச் சந்தித்தார். உங்க கல்லூரிக்கு நிதி திரட்டுவதற்காக எம்எஸ்வி.யுடன் இணைந்து இசைக்கச்சேரி வைத்து 75 ஆயிரம் ரூபாயை நிதியாகத் திரட்டி உங்க கல்லூரிக்கு கொடுத்துருக்கேன். அப்படி இருந்தும் நான் பரிந்துரைத்த ஒரு பெண்ணுக்கு சீட் இல்லைன்னு சொல்றீங்களே. என்ன நியாயம்னு கேட்டுள்ளார் சந்திரபாபு.

அதைக் கேட்டதும் கல்லூரி முதல்வர் பழைய ரெக்கார்டுகளை எல்லாம் திரும்பப் பார்த்தார். அதுல சந்திரபாபு சொன்னது உண்மைதான்னு தெரிய வந்தது. உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அந்தக் கல்லூரியிலே அட்மிஷன் கொடுத்தார். அட்மிஷன் கொடுத்த உடனே நாற்காலியை விட்டு எழுந்த சந்திரபாபு, ‘நான் நேற்று வந்து உங்கக்கிட்டே கேட்டேன். அப்பவே நீங்க அட்மிஷன் கொடுத்துருந்தீங்கன்னா நான் உங்களுக்கு நன்றி சொல்லிருப்பேன்.

அப்படிக் கொடுத்துருந்தீங்கன்னா அது எனக்காகக் கொடுத்த சீட்டுங்கற எண்ணம் வந்துருக்கும். ஆனா இப்ப நீங்க கொடுத்த சீட்டு நான் வசூலித்து தந்த 75ஆயிரம் ரூபாய்க்காகக் கொடுத்த சீட்டு. அதனால உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்’ என்று சொல்லி விட்டு அந்தக் கல்லூரியை விட்டுப் புறப்பட்டார் சந்திரபாபு. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

Thursday, August 14, 2025

உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் கொடு, நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிடு!

 எனக்கு  நேரமில்லை":_*

பன்னிரண்டு மணி நேர பயணம் இப்போது நான்கு மணி நேரமாக சுருங்கிவிட்டது, 



ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

பன்னிரண்டு பேர் கொண்ட குடும்பம் இப்போது வெறும் இருவர், ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு நான்கு வாரங்கள் எடுத்த செய்தி, இப்போது நான்கு வினாடிகளில், 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

தூரத்திலுள்ள ஒருவரின் முகத்தைப் பார்க்க முன்பு வருடங்கள் ஆயின, 
இப்போது வினாடிகளில் தெரிகிறது – ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வீட்டில் சுற்றிச் செல்ல எடுத்த நேரமும் முயற்சியும், 
இப்போது லிஃப்ட்டில் வினாடிகளில் முடிகிறது, 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

வங்கி வரிசையில் மணிக்கணக்கில் நின்ற மனிதன், 
இப்போது மொபைலில் வினாடிகளில் பணப் பரிமாற்றம் செய்கிறான், 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

முன்பு வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள்,
இப்போது சில மணி நேரங்களில் நடக்கிறது, 
ஆனாலும் மனிதன் சொல்கிறான் – நேரமில்லை.

ஆக்டிவாவில் செல்லும்போது, ஒரு கை கைப்பிடியில், இன்னொரு கை போனில் – 
ஏனென்றால் நின்று பேச அவனுக்கு நேரமில்லை.

கார் ஓட்டும்போது, ஒரு கை ஸ்டீயரிங்கில், இன்னொரு கை வாட்ஸ்அப்பில் – 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

ட்ராஃபிக் ஜாம் ஆனால், புதிய வழி உருவாக்க லேன் மாறுகிறான் 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

நண்பர்கள் மத்தியில், அவன் விரல்கள் போனில் பிஸியாக இருக்கும், 
ஏனென்றால் எங்கோ செல்ல வேண்டும் – நேரமில்லை.

தனியாக இருக்கும்போது அவன் நிம்மதியாக இருக்கிறான், 
ஆனால் மற்றவர்கள் இருக்கும்போது அமைதியின்றி இருக்கிறான் – 
ஏனென்றால் அவனுக்கு நேரமில்லை.

புத்தகம் படிக்க நேரமில்லை,
பெற்றோரை அழைக்க நேரமில்லை,
நண்பனைச் சந்திக்க நேரமில்லை,
இயற்கையை ரசிக்க நேரமில்லை

ஆனால் –
ஐபிஎல்-க்கு நேரம் இருக்கிறது,
நெட்ஃபிளிக்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அர்த்தமற்ற ரீல்ஸுக்கு நேரம் இருக்கிறது,
அரசியல் விவாதத்திற்கு நேரம் இருக்கிறது –
ஆனால் தனக்கு நேரமில்லை...

உலகம் எளிமையாகிவிட்டது, வேகமாகிவிட்டது,
தொழில்நுட்பம் நெருங்கிவிட்டது, தூரங்கள் மறைந்துவிட்டன,
வசதிகள் பெருகிவிட்டன, வாய்ப்புகள் வளர்ந்துவிட்டன..
ஆனாலும் மனிதன் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே தன்னிடமிருந்து விலகிச் சென்றான்.

அமைதியாக உட்கார,
தன்னோடு பேச,
தன்னைப் புரிந்துகொள்ள,
அல்லது சில நிமிடங்கள் மனமார சிரிக்க –
நேரமில்லை என்கிறான்.

*பின்னர் ஒரு நாள், நேரமே நழுவிப் போகிறது. அந்த இறுதி நொடியில் அவன் உணர்கிறான் – நேரம் இருந்தது... ஆனால் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே வாழ்வதை மறந்துவிட்டேன்.*

எனவே இன்றே முடிவு செய் – உனக்காக கொஞ்சம் நேரம் வை,

உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் கொடு,

உன் இதயத்திற்காக, உன் அமைதிக்காக, வாழ்வின் சாராம்சத்திற்காக கொஞ்சம் வாழ். ஏனென்றால் நேரமில்லை என்பது உண்மையல்ல – அது வெறும் பழக்கம்... அதை மாற்ற வேண்டும்.

Thursday, August 7, 2025

திண்டுக்கல் பூட்டு !

 பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு. இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாட்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆட்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத் திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.


நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர். பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது.

 திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது. இதனை ஒழுங்கு படுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர். 



ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளை செய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

#டிலோ பூட்டு:
திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

#பெல் லாக்:
இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும் போதும், திறக்கும் போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

#லண்டன் லாக்:


ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.


இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.


பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை 22 கிலோ.

Sunday, April 20, 2025

அர்த்தமுள்ள இந்து மதம் ! கவியரசர் திரு,கண்ணதாசன் !

 நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :? ?👇👍


1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.💪

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.💪

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.💪

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி

வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்..💪

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.💪

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை

கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.💪*

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.💪

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.

👉மரமும் கடவுள்,🌼

👉கல்லும் கடவுள்,

👉நீரும் கடவுள்(கங்கை),

👉காற்றும் கடவுள் (வாயு),🌼

👉குரங்கும் கடவுள் அனுமன்,🌼

👉நாயும் கடவுள் (பைரவர்),🌼

👉பன்றியும் கடவுள் (வராகம்).🌼

9. நீயும் கடவுள்,

நானும் கடவுள்...

பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.👍

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்👍,

பெண் ஆசையை ஒழிக்க   👉இராமாயணம்,👍

மண் ஆசையை ஒழிக்க 👉மகாபாரதம்,👍


கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த  👉பாகவதம்,👍

அரசியலுக்கு  👉 அர்த்தசாஸ்த்திரம், 👍

தாம்பத்தியத்திற்கு  👉காம சாஸ்திரம்,💪

மருத்துவத்திற்கு 👉சித்தா, ஆயுர்வேதம்,👍

கல்விக்கு   👉வேதக் கணிதம்,👍

உடல் நன்மைக்கு  👉யோகா சாஸ்த்திரம்,👍

கட்டுமானத்திற்கு  👉வாஸ்து சாஸ்திரம்,👍-

விண்ணியலுக்கு 👉கோள்கணிதம்.👍

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.🌸

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து

"கொல்லாமை " "புலால் மறுத்தல்",

ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.🌸

13. இந்துக்களின் புனிதநூல்  என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம்.

🌼 ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.🌸

13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.🌺

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

இந்துவாக (இயற்கையாளனாக)  வாழ்வதில் பெருமை

கொள்வோம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Saturday, March 29, 2025

இப்பல்லாம் நிறைய பேருக்கு கல்யாணம் ஆகறதே பெரிய குதிரை கொம்பா போயிடுச்சு.

 

இப்பல்லாம் நிறைய பேருக்கு கல்யாணம் ஆகறதே பெரிய குதிரை கொம்பா போயிடுச்சு!

பொண்ணு சராசரியா 70 ஆயிரத்திலேருந்து ஒரு லட்சம் சம்பாதிக்குது.

பையன் 50 ஆயிரத்தை தாண்ட மாட்டேங்குறான். இதான் பிரச்சினைன்னு நிறைய பேரு நினைச்சுக் கிட்டு இருக்காங்க.

ஆனா, உண்மையான காரணம் இது இல்ல...

ஒரு பெரியவரு, அனுபவஸ்தரு சொன்னதை கேளுங்க....

முன்னாடிலாம், டிகிரியோ இல்ல PG யோ முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க. அப்ப      20 அல்லது 30 ஆயிரம்தான் சம்பளம் இருக்கும்.

அதுக்கப்புறம் ஒரு 2, 3 வருஷத்துல ரெண்டு பேருக்குமே கொஞ்சம் சம்பளம் கூடும். அப்பதான் ஒரு சொந்த வீட்டை கஷ்டப்பட்டு வாங்குவாங்க!

இன்னொரு அஞ்சு வருஷம் ஆன பிறகு நிதி நிலைமை நல்லா இருந்தா கார் வாங்குவாங்க. அதுக்குள்ள ஒண்ணு இல்லேன்னா ரெண்டு குழந்தை பிறந்து இருக்கும்!

கஷ்டமோ நஷ்டமோ முடிஞ்சா அந்த குழந்தைகளை சிபிஎஸ்இ இல்லேன்னா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைப்பாங்க. அதாவது இன்பம் துன்பம் ரெண்டையுமே புருஷன் பொண்டாட்டி சேர்ந்து ஷேர் பண்ணிக்கிட்டு வாழ்ந்தாங்க.

அதனால கல்யாணம் நடக்கிறது அவ்வளவு கஷ்டமான விஷயமா இல்ல!

இப்பல்லாம் என்ன நடக்குதுன்னா, பொண்ணு வீட்ல அவளுக்கு கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே அதாவது அவ வேலைக்கு சேர்ந்த பிறகு ஒரு அஞ்சு வருஷமோ இல்ல எட்டு வருஷமோ வெயிட் பண்ணி முதல்ல அவ சம்பாத்தியம், சேவிங்ஸ்ல முன் பணம் கட்டி ஒரு பெரிய வீடா வாங்கிடறாங்க!

இதனால பொண்ணோட மார்க்கெட் வேல்யூ பயங்கரமா எகிறுடுது. அவ சம்பளம் வேற ஒரு லட்சம் இல்ல ஒன்றரை லட்சமா உயர்ந்துடுது. இதே கால கட்டத்துல பசங்களோட பொருளாதார நிலை இப்படி முன்னேறுதான்னா, நிச்சயம் இல்ல!

ஒரு டிகிரியோட படிப்பை முடிச்சிக்கிறான்!

40 or 50 ஆயிரம் சம்பளம் வர்ற வேலையில செட்டில் ஆயிடறான்!

பொண்ணு சம்பளம் ஒரு லட்சம்னா அவங்க எப்படி  50 ஆயிரம் சம்பளம் வாங்கற பையனுக்கு பொண்ணு குடுப்பாங்க? இதுல பொண்ணுக்கு சொந்த வீடு இருந்துச்சுன்னா சுத்தம்!

ஒரு பக்கம் financially இந்த ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் போது, பொண்ணை பெத்தவங்க நூத்துக் கணக்கான terms and conditions சோட வர்றாங்க!

பையனுக்கு அம்மா இருக்கக் கூடாது. தங்கச்சி இருக்கக் கூடாது!

பொண்ணுக்கு சமையல் தெரியாது. பையன் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்!

பொண்ணை விட பையனுக்கு அதிக சம்பளம் இருக்கணும். சொந்த வீடு, கார் இருக்கணும்னு லிஸ்ட் பெரிசா போயிக்கிட்டே இருக்கும்!

இந்த எதிர்பார்ப்புகளை மீட் பண்ற மாப்பிள்ளைகள் 10% கூட இருக்க மாட்டாங்க. அப்படியும் சிக்கி 30, 40 லட்சம் செலவு பண்ணி கல்யாணம் செஞ்சி வெச்சா ரெண்டு பேருக்குமே ஒத்து போகலன்னு டைவர்ஸ்சுக்கு பொண்ணு வீட்டுக் காரங்க ஈசியா வந்துடறாங்க!

செகண்ட் மேரியேஜ்ங்குறது ஒரு தனி ட்ராக்!

அதிகம் படிக்காத, அதிகம் சம்பாதிக்காத லோ மிடில் கிளாஸ்லதான் கல்யாணம் சீக்கிரமா நடந்து முடியுது

அதுக்கு பெண் வீட்டார் 10 லட்சம் மினிமம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வெக்கணும்!

ஆக,

கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து வாழ்க்கையில படிப்படியாக முன்னேறணும்கிற கான்செப்ட் எப்ப ஒழிஞ்சதோ அப்பவே கல்யாண சிஸடமும் அழிஞ்சு போச்சு. இதுல ரொம்ப பாதிக்கப் பட்டது 90's கிட்ஸ் தான்.

இதுக்கு என்ன தீர்வு இருக்குங்குறதே புரியல...

எந்த கண்டிஷனும் போடாத லவ் மேரேஜ் அதிகமானா ஓரளவு பிள்ளைங்க நிம்மதியா இருப்பாங்க!

இதுக்கு மாற்றாக உங்ககிட்ட தீர்வு இருந்தா தாராளமாக சொல்லலாம்......

உங்களது பெற்றோர் உங்கள் திருமணத்தை பற்றி எவ்வளவு யோசிப்பார்கள்?

#தாய் தகப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டு போகும் பெண்களுக்கு இந்த பதிவு...

நம்மை பெற்றெடுக்கும் போதே நம் அன்னை ஒரு வலியை தாங்கி இருப்பாள்,

பால் ஊட்டி, சீராட்டி, கோவிலில் பிரசாதம் கொடுத்தல் கூட தன் பிள்ளைக்காக பத்திர படுத்தி எடுத்து வருவாள்,

கொஞ்சம் முகம் வாடி இருந்தாலும் "என்ன கண்ணு பசிக்குதா" என்று ஆயிரம் முறை கேட்டு விடுவாள்.

நீங்கள் தூங்காமல் படிக்க அவள் தூங்காமல் இருப்பாள்,

தன் பிள்ளை தப்பே செய்திருந்தாலும் யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டாள்,

அதே போன்று தான் அப்பாவும்,

பெண் பிள்ளை என்றால் அப்பாவுக்கு தான் அதிக பாசம்,

தன் பிள்ளையின் பாதம் கூட மண்ணில் படகூடாது என்று நினைப்பார்,

என்ன கேட்டாலும் வங்கி தருவார்,

பிள்ளைக்காக மனைவியிடம் சண்டை கட்டுவார்,

பிள்ளையின் படிப்புக்காக பல லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருப்பார்.

ஒரு விசேசங்களுக்கு துணி எடுக்கவேண்டும் என்றால் அம்மா, அப்பா இருவருமே பல துணிக்கடைகள் ஏறி இறங்குவார்கள்.

ஒரு துணி எடுக்கவே இவ்வளவு யோசிக்கும் உங்களது பெற்றோர் உங்கள் திருமணத்தை பற்றி எவ்வளவு யோசிப்பார்கள்?

அதை பற்றி எதையும் யோசிக்காமல் சில பெண்கள்.

தலைமுடியில் சாயம், கிழித்துவிட்ட ஜீன்ஸ் பேன்ட், இடுப்பு தெரியும் அளவு சட்டை, அழகான இருசக்குற வாகனம் இதை மட்டுமே வைத்திருக்கும் ஒரு சிலரிடம் காதல் வயபடுகிரர்கள்.

அதற்காக தன் பெற்றோரையே தூக்கி எறிகிறார்கள்,

பத்து நாள் பழகிய ஒருத்தனுக்காக பெற்றவர்களை தூக்கிஎறிந்து திருமணம் செய்துகொண்ட பலர் பிழைக்காமல் பெற்றவரை தேடி வந்துள்ளனர்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தால் நீ எப்போதும் வேண்டுமானாலும்

உன் தாய் வீடு வரலாம்..

யோசித்து பார்......

பெற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நம் குடும்பத்தை பற்றி உங்களது பெண்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

முக்கியமாக தந்தைகள் பணம் மட்டுமே வாழ்க்கை என்று ஓடினது போதும், தன் பிள்ளைக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்துகொள்ளுங்கள்

சகோதரர்கள் தன் சகோதரியை கவனியுங்கள்...

ஸ்ரீபிரியா தயாரித்த படம் "நீயா' ?

 

"நாகின்'' படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீபிரியா தயாரித்த படம் "நீயா'

ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

"நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத் தயாரிப்பாளர் ஆக்கியது. வைஜயந்திமாலா இந்திப் படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார்,

ஹேமந்தகுமார். பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது. சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.

படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார்.

"அவ்வளவுதானே! கவலையைவிடு'' என்று அம்மா சொன்னார். அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது.

"நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப்படத்தில் ரீனாராய் நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள். இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல். 1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார். "நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.

அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:- "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.

ஒன்றாவதோ, இரண்டாவதோ படிக்கும் போது, இந்த ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடலுக்கு பள்ளி ஆண்டு விழாவில், நடனம் ஆடிய தாக நினைவு, தலையில் பொம்மை பாம்பை வைத்து கொண்டு, என் தோழி ஸ்டெல்லா என்கிற பெண்ணுடன்( சற்று உயரமாக இருந்ததால் நான் ஆண் பாம்பு! ஸ்டெல்லா பெண் பாம்பு🙂 அது முதல் வாராய் கண்ணா! என்று பாடிக் கொண்டே இருப்பேன். எவர்க்ரீன் சாங். என் ஃபேவரைட் பாடல்களில் ஒன்று.😄