Total Pageviews

Wednesday, November 16, 2011

ஞானம்

ரு மனிதன் தனது இன்ப துன்பங்களை சமஅளவில் ஏற்றுக்கொள்வதே ஞானம். இந்த ஏற்றுக் கொள்ளுதலில் இது 'இவ்வளவுதான், இப்படித்தான்' என்று தேறுவதும், எல்லாம் 'இறைவன் விட்ட வழி' என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுதலுமே ஞானம்.
இந்த பக்குவபடுதலை நாம் 'பட்டறி' மற்றும் 'கெட்டறி' என்கிறோம். அதாவது
· 'பட்டறி' - பட்டால் தான் அறிவு வரும். "தனது அனுபவத்தால் அறிதல்".
 
· 'கெட்டறி' - கெட்டால் தான் தெளிவு வரும். "தவறு செய்தல் மனித இயல்பே ஆனால் அதே தவறை மீண்டும் செய்யாதிருத்தல்".
 
துயரங்கள் நிறைந்த மனதிற்கு ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும். அதனை அறிந்து ஏற்றுக் கொள்ளும் விதமே 'ஞானம்'.
இன்ப துன்பங்களின் இருநிலைகள்:
· முதல்நிலை, நம்மையறியாமல் வருவது நாம் அறியாமல் தீர்க்கப்படுகிறது. இதனையே கடவுளின் அருள் என்கிறோம்.
 
· இரண்டாவது நிலை, நாம் அறிந்து ஏற்படும் துன்பங்களை, நாமே நமது அறிவின் கூர்மையால் தீர்க்கிறோம். இதனை நமதுஅறிவு என்கிறோம்.
 
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்ப துன்பங்கள் சகஜமானபோதிலும்
 
உங்கள் ஞானத்தால் அனைத்திற்கும் நல்ல முடிவை கொடுத்திடமுடியும்


மனதால் முதிர்ச்சியடையுங்கள்


மனதால் முதிர்ச்சியடையுங்கள்
* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது.
 

உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
* உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.

கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும்.
 இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம்
அழைத்துச் செல்கின்றன.
* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர்
முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும்.
* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண்
அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த அறிவால் காண்கிறான்.
துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால் மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும்.
 கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.
* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும்
புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப்
போவதுமில்லை. இப்போதும் இல்லை.
* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
* மலத்தைத் தின்று உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும்
பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும், தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.
 


வாழ்க்கை என்பது


ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது -ஹென்றி போர்டு
நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான். -சாமுவேல் ஜான்சன்.
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

மூன்று வகை - வெளியில் வரும் போது மனிதனாக இரு.



வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

மிகக் கடினமானவை மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது
.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்

செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது - சபாகிளிஸ்

வாழ்வது சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடுகள் சிரிக்கட்டுமே!

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்க்கை!!ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்று இரண்டு நிஜங்களும்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.- பெர்னாட்ஷா

கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும் -முகமதுநபி

வீட்டுக்குள் இருக்கும் போது
ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு
வெளியில் வரும் போது மனிதனாக இரு.

வாழ்க்கை!

வெற்றிக்குப் பிறகு

தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;

தோல்விக்குப் பிறகு

தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,

மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

முதியோர் சொல்லும்

முதுநெல்லியும்

ஒரே மாதிரி.

முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்

 மரங்களைப் போன்றவை.

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.

அவற்றைக் கடந்து சென்றால்

அவை சிறிதாகிவிடும்.

இதுதான் வாழ்க்கை!

கற்பு என்பது

நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை -கவிஞர் வைரமுத்து
எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்! -எட்மண்ட் பர்சி
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!” -கவிஞர் வாலி
வெண்ணெயை உருக்கும்
அதே கதிரவன் தான்
களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது.
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது. ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது, கடவுளின் பரிசு.
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.

மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.
பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்