Total Pageviews

Tuesday, March 31, 2026

பாலசந்தர் சொன்னதை தேவவாக்காக கடைபிடித்த ரஜினி...அதனால்தான் அப்படி வர்ராறா?


திரையுலகில் எப்படிப்பட்ட செல்வாக்கு உடைய நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைக்கு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். தமிழ்சினிமா உலகைப் பொருத்தவரை பல நடிகர்கள் பொது நிகழ்ச்சிக்கு வரும்போது தலையில் விக் முடியோடுதான் வருவார்கள்.

ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அதுமாதிரியான தோற்றத்தில் எந்த விழாவிலும் நீங்கள் பார்க்க முடியாது. அவர் எப்படியான தோற்றத்தில் இருக்கிறாரோ அதே மாதிரி தான் விழாக்களிலும் கலந்து கொள்வார். தலையில் வெள்ளை முடி இருந்தால் அப்படியே தான் வருவார்.

அவருடைய இந்தப் பழக்கத்திற்கு முக்கியமான காரணம் அவரது குருநாதரான கே.பாலசந்தர். அவர் ஒருமுறை ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறினார். கேமராவுக்கு முன்னாடி எவ்வளவு வேணுமானாலும் நில்லு. ஆனால் கேமராவுக்குப் பின்னாடி ஒருநாளும் நடிக்காதே என்றார்.

அந்த அறிவுரையை அப்படியே தேவவாக்காகக் கொண்டார் ரஜினிகாந்த். பொதுவிழாக்களில் தன்னோட முடியை எல்லாம் மறைத்து அதுக்கு விக் வச்சிக்கிட்டாலும் நடிக்கிறதாகத்தானே அர்த்தம். அதனால்தான் அது மாதிரி தோற்றத்தில் இல்லாமல் தான் எப்படி இருக்கிறோமோ அப்படியே விழாக்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டார் ரஜினி.

அதே மாதிரி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் உள்ள சிறப்பம்சம் என்னன்னா அவங்க வீட்டுக்கு யார் போனாலும் சரி. எழுந்து நின்று வரவேற்பார். அவங்க வீட்டை விட்டுப் போகும்போது அவர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி. சிறியவர்களாக இருந்தாலும் சரி. வாசல் வரை வந்து வழியனுப்புவார். இதுமாதிரியான சில அபூர்வ குணங்கள் தான் தமிழ்சினிமா உலகில் அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

No comments:

Post a Comment