Total Pageviews

Thursday, December 19, 2024

மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் !

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆழ்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், ம அவரது மனைவி ஒரு ஜோதிடராக இருந்த மருத்துவ ஆலோசகரிடம் அழைத்து சென்றார்.

💙அவர் சில தனிப்பட்ட விஷயங்களைக் கேட்டு, அந்த மனிதரின் மனைவியை வெளியே உட்காரச் சொன்னார்.

💙பெரியவர் பேசினார்...

நான் மிகவும் கவலைப்படுகிறேன் ...

சொல்லப்போனால் நான் கவலையில் மூழ்கியிருக்கிறேன்...

வேலை அழுத்தம்...

குழந்தைகளின் படிப்பு மற்றும் வேலை பதற்றம்...

வீட்டுக் கடன், வாகனக் கடன்...

*நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்..*

💙அப்போது கற்றறிந்த ஆலோசகர் ஏதோ யோசித்து, "நீங்கள் எந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தீர்கள்?"

💙அந்த மாண்புமிகு பள்ளியின் பெயரைச் சொன்னார்.

💙ஆலோசகர் கூறியதாவது:-

*"நீங்கள் அந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். உங்கள் பள்ளியில் இருந்து உங்கள் 'பத்தாம் வகுப்பு' பதிவேட்டைக் கண்டுபிடித்து, உங்கள் சகாக்களின் பெயர்களைப் பார்த்து, அவர்களின் தற்போதைய நல்வாழ்வைப் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கவும்.*

💙எல்லா விவரங்களையும் ஒரு டைரியில் எழுதி ஒரு மாதம் கழித்து என்னை சந்திக்கவும்."*

💙ஜென்டில்மேன் தனது பள்ளிக்குச் சென்று, பதிவேட்டைக் கண்டுபிடித்து, அதை நகலெடுத்துக் கொண்டார்.

💙அதில் 120 பெயர்கள் இருந்தன. அவர் ஒரு மாதம் முழுவதும் இரவும் பகலும் முயன்றார், ஆனால் 75-80 வகுப்பு தோழர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியவில்லை.

💙*ஆச்சரியம்!!!*

*அவர்களில் 20 பேர் இறந்தனர்...*

*7 விதவைகள்/விதவைகள் மற்றும் 13 பேர் விவாகரத்து பெற்றவர்கள்...*

*10 பேர் பேசக்கூட தகுதியில்லாத அடிமைகளாக மாறினர்...*

* 5 பேர் மிகவும் மோசமாக வெளியே வந்தனர், அவர்களுக்கு யாரும் பதில் சொல்ல முடியாது..*

*6 பணக்காரர் ஆனதால் அவரால் நம்பவே முடியவில்லை...*

*சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிலர் முடங்கி, நீரிழிவு, ஆஸ்துமா அல்லது இதய நோயாளிகள்..*

*விபத்துகளில் கை/கால் அல்லது முதுகுத் தண்டுவடத்தில் காயங்களுடன் ஒன்றிரண்டு பேர் படுக்கையில் இருந்தனர்...*

*சிலருடைய பிள்ளைகள் பைத்தியம் பிடித்தவர்களாக, அலைந்து திரிபவர்களாக அல்லது பயனற்றவர்களாக மாறினர்...*

*ஒருவர் ஜெயிலில் இருந்தார்... இரண்டு விவாகரத்துக்குப் பிறகு ஒருவர் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் இருந்தார்...*

💙ஒரு மாதத்திற்குள், பத்தாம் வகுப்பின் பதிவேடு விதியின் வேதனையை விவரிக்கிறது.

💙ஆலோசகர் கேட்டார்:- "இப்போது சொல்லுங்கள் உங்கள் மனச்சோர்வு எப்படி இருக்கிறது?"*

💙அவருக்கு நோயும் இல்லை, பட்டினியும் இல்லை, மனது நிறைவாக இருந்தது, நீதிமன்ற\போலீஸ்\வக்கீல்களால் வளர்க்கப்படவில்லை, மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் நல்லவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பதை அந்த மாமனிதர் புரிந்து கொண்டார். அவரும் ஆரோக்கியமாக இருந்தார்...

💙உலகில் நிறைய துக்கம் இருப்பதையும், தான் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருந்ததை அந்த மனிதர் உணர்ந்தார்.*

💙மற்றவர்களின் தட்டுகளை எட்டிப்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டு, உங்கள் தட்டில் உள்ள உணவை அன்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் விதி உள்ளது.*

*இன்னும், நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக நினைத்தால், நீங்களும் உங்கள் பள்ளிக்குச் சென்று, பத்தாம் வகுப்பின் பதிவேட்டைக் கொண்டு வரவும்,.......*

🙏 வாழ்க வளமுடன் 🙏

பாலச்சந்தர் - இளையராஜா பிரிந்தது ஏன்?

 படமும் பாடலும் பெரிய ஹிட் : ஆனாலும் கூட்டணி முறிவு ; பாலச்சந்தர் - இளையராஜா பிரிந்தது ஏன்?

1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 4 படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்டதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை?

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரை அனுகவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் சிவாஜி நடிப்பில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியான இந்த படம் நெகடீவ் விமர்சனங்களை பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர், நாகேஷ் நாயகனாக நடிக்க ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிடித்த நடிகரும் நாகேஷ்தான்.

ஆரம்பத்தில் தனது படங்களுக்கு, தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்ட பாலச்சந்தர், அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலக்கட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார்.

1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகியுள்ளார். இசை தொடர்பான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் இந்த பாடல்கள் கேட்டு ரசிக்கும் வகையில் புதுமையாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு தான். சிந்து பைரவியை தொடர்ந்து, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, கடைசியாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியான 1989-ம் ஆண்டு இளையராஜா 32 படங்களுக்கு இசையமைத்துள்ளார். புதுப்புது அர்த்தங்கள் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், படத்தில் பின்னணி இசையை முடித்து தருமாறு கே.பாலச்சந்தர் இளையராஜாவிடம் கூறியுள்ளார். இப்போது நேரம் இல்லை. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இளையராஜா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், கங்கை அமரனை வைத்து பண்ணலாமா என்று இளையராஜா கேட்டபோது கே.பாலச்சந்தர் மறுத்துள்ளார்.

இளையராஜா இந்த படத்திற்கு பின்னணி இசைய அமைக்க தாமதம் செய்வதை அறிந்த கே.பாலச்சந்தர், நீங்கள் ஏற்கனவே போட்ட பின்னணி இசை உள்ளது அதை இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்க, இளையராஜாவும் அப்போது சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த படத்திற்கு பின்னணி இசை சேர்க்கப்பட்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும், பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அப்போது புதுப்புது அர்த்தங்கள் படம் வெளியாகிவிட்டது என்று இளையராஜாவிடம் தகவல் கிடைத்துள்ளது.

நான் பின்னணி இசை அமைக்காமல் எப்படி வெளியானது என்று இளையராஜா கேட்க, நடந்ததை பாலச்சந்தர் தரபு கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத இளையராஜா, படத்தின் காட்சிகளை பார்த்து நான் அமைக்காத இசை ஏதோ ஒரு நினைவில் இசைமைத்தது என் பெயரில் படத்தில் வந்துகொண்டு இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இனி பாலச்சந்தர் படங்களுக்கும், அவர் தயாரிக்கும் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

தேன் மொழி

மாமா ! எல்லாம் சிறப்பா இருந்தது! ஆனா ஒரே ஒரு குறை தான் !

 

மாமா ! எல்லாம் சிறப்பா இருந்தது! ஆனா ஒரே ஒரு குறை தான் !

மாமா இந்த ஊர்ல வயசு பொண்ணுங்களே இல்லையா மாமா...?

இருக்காங்களே மாப்பிள்ளை ஏன் கேக்குறீங்க மாப்ள...?

இருக்காங்களா ஒருத்தியக் கூட பாக்க முடியலையே ஏன் மாமா...?

இந்த ஊர்ல எல்லா பொண்ணுங்களும் அடக்க ஒடுக்கமா வளர்ந்திருக்காங்க மாப்ள... வீட்டு வாசல தாண்டி வெளிய வரமாட்டாளுக ...!

சரி மாமா அது கெடக்கட்டும்... அப்புறம் இந்த கத்திரிக்கா மாங்கா போட்ட சாம்பார் சூப்பர்...

தேங்ஸ் மாப்ள...

கோஸ் கேரட் பொரியலும் சூப்பர் மாமா...

எல்லாம் உங்கக்கா கை பக்குவம் மாப்ள...

ரசத்துக்கும் அந்த அப்பளத்துக்கும் காம்பினேசன் செம மாமா...

மறுபடியும் ஒரு தேங்க்ஸ் மாப்ள...

அப்புறம் மாமா ஒரே ஒரு குறை...

என்ன குறை மாப்ள...!?

எல்லாம் சைவமா போட்டுட்டீங்க... கோழி அடிச்சி விருந்து வச்சிருந்திருக்கலாம்...!

என்ன பண்றது மாப்ள... எங்களுக்கும் ஆசைதான் ஆனா இந்த ஊர் கோழிங்களும் அடக்க ஒடுக்கமாவே வளருதுங்களா அதுனால அடிக்க முடியல...!

என்னது... அடக்க ஓடுக்காமவா...!?

ஆமா மாப்ள... வளக்கிறவனோட வீட்டு வாசல கொல்லையை தாண்டி அதுங்க மேய மாட்டேங்குதுங்க.. தாண்டிச்சி அன்னைக்கு நம்ம வீட்ல பிரியாணிதான்!

‘தாய் சொல்லைத் தட்டாதே !

 

திரையுலகில் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட ஆளுமைமிக்க நடிகராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர் ஒன்றை சொன்னால் அதுவே இறுதி. அதேநேரம், மற்றவர்கள் சொல்லும் கருத்தில் நியாயம் இருந்தால் அதை எம்.ஜி.ஆர் ஏற்றும் கொள்வார். ரஜினி, விஜய் என அதிக வசூலை பெறும் நடிகர்கள் இப்போது இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் முன்னோடி எம்.ஜி.ஆர்.தான்.

1960களில் சூப்பர்ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து வந்தவர். 30 வருடங்கள் சினிமாவில் நடித்துவிட்டு அதன்பின் பின் கஷ்டப்பட்டு சினிமாவில் வாய்ப்பு வாங்கி நடித்திருக்கிறார். அதுவும் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

ராஜகுமாரி திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறியவர். ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆர் படாத கஷ்டம் இல்லை. பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ராஜகுமாரி படம் ஹிட் அடிக்கவே அவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. துவக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான்.

எனவே, வாள் வீச்சி சண்டைகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். எம்.ஜி.ஆருக்கும் அது நன்றாகவே தெரியும் என்பதால் மிகவும் அற்புதமாக அந்த காட்சிகளில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாண்டோ சின்னப்ப தேவர்.

சிறு வயதிலேயே எம்.ஜி.ஆரின் நண்பராக இருந்தவர் இவர். எம்.ஜி.ஆரை வைத்து 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் இவர். ஆனால், சில காரணங்களால் எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு 3 வருடங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

அப்போது தாய் சொல்லைத் தட்டாதே என்கிற படத்தை துவங்கினார் தேவர். அந்த படத்தில் ஜெமினி கணேசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 2 பாடல்களையும் மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் செய்தார் தேவர். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் அவரை பார்த்ததும் ‘என்ன படத்துக்கான ரிக்கார்டிங் அண்ணே?’ என அவரிடம் கேட்க, ‘தாய் சொல்லைத் தட்டாதே படம் தெய்வமே’ என தேவர் சொல்ல ‘படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார்?’ என எம்.ஜி.ஆர் கேட்க, ‘அது இன்னும் முடிவாகவில்லை’ என தேவர் சொல்லி இருக்கிறார்.

உடனே எம்.ஜி.ஆர் ‘நான் இந்த படத்தில் நடிக்கட்டுமாண்ணே’ என கேட்க, பழம் நழுவி பாலில் விழுந்த சந்தோஷத்தில் ‘அதுக்கென்ன.. உங்களுக்கு இல்லாததா?.. நீங்க தாராளமா நடிங்க’ என சொல்லி இருக்கிறார் தேவர். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பின் தேவரும், எம்.ஜி.ஆரும் மீண்டும் நண்பர்களாக மாறினார்கள்.

'பொட்டு வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி, 'சுமதி என் சுந்தரி' திரைப்படத்தில்!

 

சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி

அதில் எஸ்.பி.பி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு.

'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது பிரபு ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஒலித்திருக்கிறது.

பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம்,

"பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு."

மறுபடியும் பாடல்.

கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது.

"பிரபு..."

"என்னப்பா ?"

"இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு."

மீண்டும்... மீண்டும்... மீண்டும்...

பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். "மொத்தம் 50 தடவைக்கு மேலே 'ஆயிரம் நிலவே வா' பாடலை ரசித்து கேட்டார் அப்பா.

அதற்கு பிறகு என்னிடம் கேட்டார். ''இந்தப் பாட்டை பாடியது யாருப்பா ?"

பிரபு சொல்லியிருக்கிறார்.

"புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் வந்திருக்காருப்பா. அவர்தான் இதைப் பாடி இருக்கார்."

சிவாஜி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே, "பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விச்சு கிட்ட (MSV) இது விஷயமா உடனே பேசணும்."

அப்படித்தான் சிவாஜிக்கு 'பொட்டு

வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி, 'சுமதி என் சுந்தரி'

திரைப்படத்தில்.

இந்த செய்தியை அந்த பேட்டியில் சொன்ன பிரபு, இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.

"எஸ்பி.பி அண்ணனை பொறுத்தவரை நிறைவான குணங்கள் நிறைய அவர்கிட்ட உண்டு. பல தடவை நான் அதை பார்த்திருக்கிறேன்.

அவரைப் பாராட்டி நான் ஏதாவது பேச ஆரம்பித்தால், நம்மை தடுத்து நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் நம்மை பாராட்டி இப்படி பேச ஆரம்பிப்பார் எஸ்பிபி அண்ணன்."

"பிரபுவோட நடிப்பு எல்லோருக்கும்

ரொம்ப பிடிக்கும்.

'என்னவென்று சொல்வதம்மா' பாட்டை ராஜகுமாரன் படத்துக்காக நான் பாடியிருந்தேன். அந்த பாட்டுக்கு பிரமாதமான எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் பிரபு. அதனாலதான் அந்த பாட்டு ஹிட் ஆச்சு" என்று சொல்வாராம் எஸ்பிபி.

இதைக் கேட்டவுடனே நெகிழ்ந்து போய், பேச்சு வராமல் நிற்பாராம் பிரபு.

அதற்குள் எஸ்பிபி பக்கத்தில் இருப்பவர்களை நோக்கி, "டூயட் படம் பாத்திருக்கீங்களா ?

அதுல பிரபு சாக்சபோன் வாசிக்கிற அழகிருக்கே... பியூட்டிஃபுல்."

இதை உண்மையாகவே கண்களை மூடி மெய்மறந்து சொல்வாராம் எஸ்பிபி.

இதையெல்லாம் அந்தப் பேட்டியில் சொன்ன பிரபு, நெகிழ்ந்து போய் இப்படி சொல்கிறார்.

"நாமும் கவனிக்காத, மற்றவர்களும் நம்மிடம் சொல்லாத எத்தனையோ சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையெல்லாம் பெரிதாக பாராட்டுவார் எஸ்பிபி.

அதனால்தான் எல்லோரும் அவரை இன்னமும் அவங்க மனசில வைத்து கொண்டாடுறாங்க."

இப்படி சொல்லி அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பிரபு.

இதில் மிகப்பெரிய பாடம் ஒன்று ஒளிந்திருக்கிறது.

மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் தேட ஆரம்பித்தால்,

நெகட்டிவான விஷயங்களைப் பற்றி நினைக்க கூட நமக்கு நேரம் இருக்காது.

எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை.

நல்ல நல்ல பாடங்களையும் கூட

நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்.

முகநூல் பதிவு-பிரசாந்த் 🥀🌹

இயக்குனர் ஸ்ரீதரை, யாராலும் மறக்க முடியாது!!

 💜மனைவி என்பவள் தெய்வமாகலாம்!

இயக்குனர் ஸ்ரீதரை,

யாராலும் மறக்க முடியாது!!

திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.

கல்யாணப் பரிசு

தேன் நிலவு

நெஞ்சில் ஓர் ஆலயம்

நெஞ்சம் மறப்பதில்லை

காதலிக்க நேரமில்லை

சுமை தாங்கி

வெண்ணிற ஆடை

சிவந்த மண்

உரிமைக்குரல்

இளமை ஊஞ்சலாடுகிறது

.

எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...! ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்... ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் .. அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு கண்ணாக கவனித்துக் கொண்டவர் தேவசேனா ..

யார் இந்த தேவசேனா..?

இவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி..! மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும்போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்..! உடனே தேவசேனா , ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார்... கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்...!

இவர் கேட்கும் இரக்க தொனியில்

எவராக இருந்தாலும் அடுத்த நிமிடமே ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து விடுவார்களாம் !

கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து , அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா...!

.

சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப் பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்..!

.

ஆனால் , ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்...!

.

இப்படியாக ... பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா , கட்டுக்கு அடங்காத கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள்தான்...!

அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும்தான்...!

" மனைவி என்பவள்

தெய்வமாகலாம்.."

.

ஆம் .. ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்கிறேனே..!

.

"மனைவி என்பவள் தெய்வமாகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனைவி என்பவள் தெய்வமாகலாம்!

Tuesday, November 12, 2024

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் !

 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.

வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.

தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.

வாசலில் நின்று பார்த்த என். எஸ்.கிருஷ்ணன் வழிமறித்து,

“இங்கே வாடா, தம்பீ…’ என்று அழைத்ததும்,

மிகவும் சாதுவாக அவர் முன் வந்து நின்றான் பையன்.

“தம்பி, பையில் என்ன இருக்கு?’ என்று கேட்டார்.

“ஒண்ணுமில்லையே!’ என் றான்.

“காட்டு, பார்க்கலாம்!’ என்று அவன் சட்டைப் பையில் கை விட்டார்.

பூட்டு..!

கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

“ஏண்டா, எடுத்தே?’ என்றார்.

“பசி, பழைய சாமான் கடையில்

போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும்.

சாப்பிடலாம்ன்னு எடுத்தேன்!’ என்று உள்ளதைச் சொன்னான்.

அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு இல்லாததை பார்த்து விட்டார்.

தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன் பையனுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.

அவன் தான் எடுத்திருப்பான்,

என். எஸ்.கே.,பிடித்துக் கொண்டார் என்ற எண்ணத்தில் ஆத்திரத்தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த வீட்டுக்காரர்.

என்.எஸ்.கே.,யை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன்.

எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என். எஸ். கே., சிரித்தபடி,

“வாங்க… வாங்க… பூட்டைத் தேடறீ ங்களா?

ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான்.

தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன்.

“இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான்.

அதுக்காக ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்…’ என்றவர்,

பையனிடம்,

“டேய், தம்பி கொடுப் பாரு;

போயி வாங்கிட்டுப் போ!’ என்றார்.

பாவம்!

அவனுக்கு பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.