Total Pageviews

Thursday, December 19, 2024

பாலச்சந்தர் - இளையராஜா பிரிந்தது ஏன்?

 படமும் பாடலும் பெரிய ஹிட் : ஆனாலும் கூட்டணி முறிவு ; பாலச்சந்தர் - இளையராஜா பிரிந்தது ஏன்?

1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 4 படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்டதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை?

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரை அனுகவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் சிவாஜி நடிப்பில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியான இந்த படம் நெகடீவ் விமர்சனங்களை பெற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர், நாகேஷ் நாயகனாக நடிக்க ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் அவருக்கு பிடித்த நடிகரும் நாகேஷ்தான்.

ஆரம்பத்தில் தனது படங்களுக்கு, தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி.குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக்கொண்ட பாலச்சந்தர், அடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1970-களின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பை பெற்று வந்த காலக்கட்டங்களிலும், பாலச்சந்தர் எம்.எஸ்.வியுடன் பணியாற்றி பல வெற்றிகளை குவித்து வந்தார்.

1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இளையராஜாவை அணுகியுள்ளார். இசை தொடர்பான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்றும் இந்த பாடல்கள் கேட்டு ரசிக்கும் வகையில் புதுமையாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு தான். சிந்து பைரவியை தொடர்ந்து, மனதில் உறுதி வேண்டும், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, கடைசியாக கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியான 1989-ம் ஆண்டு இளையராஜா 32 படங்களுக்கு இசையமைத்துள்ளார். புதுப்புது அர்த்தங்கள் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், படத்தில் பின்னணி இசையை முடித்து தருமாறு கே.பாலச்சந்தர் இளையராஜாவிடம் கூறியுள்ளார். இப்போது நேரம் இல்லை. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இளையராஜா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில், கங்கை அமரனை வைத்து பண்ணலாமா என்று இளையராஜா கேட்டபோது கே.பாலச்சந்தர் மறுத்துள்ளார்.

இளையராஜா இந்த படத்திற்கு பின்னணி இசைய அமைக்க தாமதம் செய்வதை அறிந்த கே.பாலச்சந்தர், நீங்கள் ஏற்கனவே போட்ட பின்னணி இசை உள்ளது அதை இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்க, இளையராஜாவும் அப்போது சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த படத்திற்கு பின்னணி இசை சேர்க்கப்பட்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாடல்களும், பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அப்போது புதுப்புது அர்த்தங்கள் படம் வெளியாகிவிட்டது என்று இளையராஜாவிடம் தகவல் கிடைத்துள்ளது.

நான் பின்னணி இசை அமைக்காமல் எப்படி வெளியானது என்று இளையராஜா கேட்க, நடந்ததை பாலச்சந்தர் தரபு கூறியுள்ளனர். அதை ஏற்றுக்கொள்ளாத இளையராஜா, படத்தின் காட்சிகளை பார்த்து நான் அமைக்காத இசை ஏதோ ஒரு நினைவில் இசைமைத்தது என் பெயரில் படத்தில் வந்துகொண்டு இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இனி பாலச்சந்தர் படங்களுக்கும், அவர் தயாரிக்கும் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

தேன் மொழி

No comments:

Post a Comment