Total Pageviews

Monday, December 5, 2011

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள்



1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 .அதிவேகம்

3. வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால

4. போதிய. தூக்கம்  ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்

5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால்

6 . தரமற்ற வாகனங்கள் ஓட்டுவதால்

7. குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன

8. சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவத - அலட்சியம்

9.பொதுமக்கள் விழிப்புணர்வுன்  இல்லாதது /   சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும

10. சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.

தமிழ் இலக்கங்கள்

ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்
இறங்குமுக இலக்கங்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள

Friday, December 2, 2011

மனிதநேயத்தை வளர விடுங்கள்.



உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன கொடுத்தோம் ?

மனித எண்ணிக்கைகள் தான் அதிகமே தவிர, மனித நேயத்தில் இல்லை. இன்று வாகன விபத்துக்கள் நடப்பது மிக சகஜமான விஷயமாகிவிட்டது.  அதிலும் விபத்தில் பெரும் பாலும் இறப்பது இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போது அவனிடம் இருக்கும் செயின், பணம், பொருள் எல்லாம் திருட நினைக்கிறார்களே தவிர அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவ நினைப்பதில்லை. அப்படியெ மருத்துவமனையில் சேர்த்தலும் போலீஸ், கோர்ட் எல்லாம் செல்ல வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். உதவுவதற்கு அஞ்சுகின்றனர், திருடுவதற்கு அஞ்சுவதில்லை. இப்படி நம் நாட்டில் மனித நேயம் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதத்தில் எத்தனை உயிரை இழந்து இருக்கிறோம். பத்து நிமிடம் முன்னாடி வந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர் கூறும் போது நாம் யாரை நோந்துக் கொள்வது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பற்றி கவலை படமுடியாத அவசர உலகத்தில் இருக்கிறோம்.

ஹைவேயில் லாரியை வேகமாக ஓட்டி ஒரு மனிதர் மீது இடித்து விடுகிறான். சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர மருத்துவமனையில் சேர்ப்பவர்கள்  மிக குறைவானவர்கள் தன். அந்த வண்டி ஓட்டுனர் கூட அபராதம் மட்டும் கட்டிவிட்டு வெளiயே வந்துவிடுவான். இறந்தவர் குடும்பத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை மதிக்காமல் தான் வண்டியை ஓட்டி செல்கிறான்.

மனிதர்களை பாதுகாக்கும் சட்டங்களை விட மான்களை பாதுகாக்கும் சட்டங்கள் சரியாகவே இயங்குகின்றன. காரணம், மானின் தோளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மனிதனின் தோளுக்கும், உயிருக்கும் மதிப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மிஞ்சி இருக்கும் மனி நேயம்
இப்பொது பிச்சையாக மாறும் நேரம்

 - என்று கருதி கை, கால் இருப்பவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். பேரூந்து நிலையம், பொது இடம் போன்ற இடத்தில் நின்று பேசுபவர்களiடம் அம்மா தாயே.. குழந்தைக்கு பசிக்குதுமா... தர்ம பிரபுவே... இப்படி எத்தனை வார்த்தைகளை சேகரித்து வைத்து இருக்கும் மனிதநேயத்தை காசாக மாற்றுவது தான் இவர்களது முதல் வேலை. நம் நாட்டில மனிதநேயத்தை காசாக மாற்ற பல வித்தைகளை கற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்க்கத் தான் யாருமில்லை.உதவி செய்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் தான் மனித நேயங்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன. உதவி செய்வது போல் ஏமாற்றுபவர்களை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால் இரக்கப்பட்டு உதவி செய்ய செல்லும் போது நம்மை ஏமாற்றும் அனுபவமே மிகவும் கசப்பாக இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்குகிறோம். நம் நாட்டில் பாதி மனிதநேயங்கள் செத்ததற்கு மிகப் பெரிய காரணம் உதவி செய்ய வந்தவர்களை ஏமாற்றி லாபம் அடைவது தான்.

மிக இக்கட்டான நேரத்தில் பணம் வேண்டும் என்று காலில் விழாத குறையாக விழுந்து கெஞ்சுவார்கள். பணம் கொடுத்த பிறகு அவர்களிடம் பணம் வாங்க நம்மை அலைக்கடிப்பார்கள். கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம் கொடுத்தால் திரும்பி வருமோ என்ற அச்சம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது.

இன்று உதவி செய்யச் சென்றாலும் அதில் வரும் ஆபத்துகளை மனதில் வைத்தே செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.  எந்த அச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயத்தை வளர விடுங்கள். இனியாவது மனிதனை மனிதனாய் வாழவிடுங்கள்.

Saturday, November 26, 2011

புனிதன் - மனித தர்மம்



ருவன் வாழ் நாளில் பெரும் பகுதியை முறை தவறி கழித்து விட்டு திடிரென புனிதனாகி விட முடியுமா? அப்படி புனிதன் ஆனால் செய்த பாவத்திலிருந்து விடுதலை பெற முடியுமா?

முறையானது என்பதையும் முறைதவறியது என்பதையும் நாம் உடலை வைத்தே கணக்கு போடுகிறாம்.

ஒரு மனிதன் செய்யும் செயல்களுக்கு உடலும் ஒரு காரணம் என்றாலும் உடல் மட்டுமே முழு பொறுப்பாளி ஆகாதுமனதிற்கும், புத்திக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

இயற்கையாகவே நல்ல சுபாவம் உள்ள ஒரு குழந்தை திருடர்கள் மத்தியில் வாழ்ந்தாலும் அதன் சுய தன்மை என்றாவது ஒரு நாள் வெளிப்படும்.


அப்படி ளிப்படுவதற்கு சற்று கால தாமதம் ஆனாலும் கூட அது நடந்தே தீரும்.

சுபாவத்திலேயே கெட்ட தன்மை இருந்தால் அவன் மகாத்மாக்களோடு வாழ்ந்தால் கூட ஒரு நாள் நிஜ சொரூபம் வெளிப்பட்டு விடும்.
ஒரு மனிதனின் குணாதிசயம் அவனது சுற்று புறத்தை மட்டுமே
மையமாக கொண்டு அமைவதில்லை.

இது தான் இப்படி தான் என கூற முடியாத இயற்கை சுபாவத்தை பொறுத்தே அமைகிறது.

நல்ல பெற்றோருக்கு பிறந்த குழந்தை காமூகனாக திரிவதும் உண்டு.
கொலைக்காரனுக்கு பிறந்தவன் அகிம்சா மூர்த்தியாக அமைவதும் உண்டு.
எனவே ஒருவனை பிறப்பை வைத்தும், குலத்தை வைத்தும் எடை போட கூடாது.

ஒரு குப்பை மேட்டில் திடிரென தீப்பிடித்து கொண்டது என சொல்லலாம்.
ஆனால் அந்த தீ திடிரென பிடிப்பது இல்லைகுப்பையின் கனன்று கொண்டியிருக்கும் சிறு நெருப்பு பொறி பெரு நெருப்பாக மாறிவிடும்

அதே போல தான் ஒரு மனிதனின் குணம் மாறுதல்.

ஒரு நாள் இரவு விடிந்தவுடன் எவனுமஉத்தமனாகி விட முடியாது.

உத்தமன் ஆவதற்கான அறிகுறிகள் அவனிடம் ஆரம்ப காலம் முதலே இருந்திருக்கும்.

உள்ளுக்குள் இருந்த நெருப்பை திடிரென வீசும் காற்று பெரிதாக்கி விடுவது போல் சில சம்பவங்கள் மனித தன்மையை மாற்றுகின்றன.

அதனால் எழுபது வயது வரை திருடனாக இருந்தவன் எழுபத்தியோராவது வயதில் திருந்தி விடுவது அதிசயம் இல்லை.
அதற்காக அவன் அதற்கு முன்னால் செய்த தவறுதலுக்கு விதி தத்துவப்படி தண்டனை பெறாமல் தப்பிக்க இயலாது

அதற்காக  அப்படி திருந்துபவனை ஏற்றுக் கொள்ளாமல் சந்தேகப்படுவதும் புறக்கணிப்பதும் மனித தர்மம் அல்ல.

மனித நேயம் என்றால்



1. உண்மையாக நடந்து கொள்வார்.

2.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.

3.
உதவி கேட்பவர்களைக் கைவிட  மாட்டார்.

4.செய்ய முடியாதவற்றைச் செய்ய முடியும் என் நம்ப வைக்க மாட்டார்.

5.நடிக்க  மாட்டார்.

6.பிறரைக் குறைகூறி தன் முக்கியதுவத்தை அதிகரித்துக் கொள்ள மாட்டார்.

7.தவறுகளை ஒப்புக் கொள்வார்; திருத்திக் கொள்வார்.

8.தகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வார்.

9.விளம்பரம் தேடிக் கொள்ள மாட்டார்.

10.பிறரின் சிறிய செயலையும் புகழ்ந்து பேசுவார்; பாராட்டுவார்.


சினத்தின் பிடியிலிருந்து  மீள விரும்புவோர் கீழ்க்காணும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 1) ஆய்வும் நுண்ணறியும்

2) உறுதி கொள்ளுதல்

3) மன்னிப்புக் கோருதல்

4) பிறர் பிழை பொருத்தல்

5) விழிப்புணர்வும் நிதானமும்

6) பக்தியும் தர்ம உபதேசங்களும் மிகவும் உதவும

7) இடைவிடாத முயற்சி