Total Pageviews

Monday, June 25, 2012

உழைப்பு, நல்லெண்ணம், அன்பு போன்றவற்றினால் வெற்றி பெறலாம்


புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.
கண்ணதாசன்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம்
மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம்
பணமிருப்பதில்லை
பணம் படைத்த  வீட்டினிலெ
வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத  மனிதருக்கு
சொந்தமெல்லம் துன்பம்

பருவம் வந்த ஆனைவருமே
காதல் கொழ்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை

கனவு கானும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள்
அவளை பார்த்து சிரிப்பாள்
அவள் மனதில் யார் வருவார்
யாரை பார்த்து அழைப்பாள்?

இந்தப்பாடலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எல்லாம் எவ்வளவு நிதர்சானமான உண்மை.

வெற்றி பெற புத்தி மட்டுமே தேவை என்பதுதான் தவறு. வெற்றியில் இன்னும் பலவற்றின் பங்குகள் இருக்கின்றன. புத்தி இல்லாமல் கூட உழைப்பு, நல்லெண்ணம், அன்பு போன்றவற்றினால் வெற்றி பெறலாம் என்றுதான் அதற்கு சரியான பொருள். இதற்கு புத்தியில்லாதவன் மட்டுமே ஜெயிக்கிறான் என்று அர்த்தம் எடுப்பது தவறு. புத்தியில்லாதவனும் வெற்றி பெறுகிறான். புத்தி உள்ளவனும் வெற்றி பெறுகிறான் என்றுதான் பொருள்.

வெற்றி படைத்தான் அப்படின்னு சொல்லலை.. வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்கிறார்கள். அதாவது வெற்றி என்பது சூழலால் கொடுக்கப்படுவது.

வெற்றி பெறுவதையே நாம் எல்லோரும் விரும்புகிறோம். வாழ்க்கைப் பாதையில் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் யுத்த களங்கள் எத்தனை .. எத்தனை! எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி கிட்டுவதில்லை. எல்லோரும் வெற்றி பெற்ற மனிதர்களாக வீதி உலா வருவதில்லை. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பார்கள். தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்றும் சொல்வார்கள். யதார்த்த உலகத்தில், எத்தனையோ திறமையான மனிதர்கள் பிரபலம் அடைய முடியாமல், அவர்களின் திறமை வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே வாழ்ந்து மறைந்துவிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் அவர்களைப் பார்க்கிலும் குறைவான திறமை உள்ளவர்களும் கூட பிரபலம் அடைந்து வெற்றியாளர்களாக வெளி உலகத்துக்குத் தெரிய வருகிறார்கள். இதை நாம் என்னவென்று சொல்வது? இதைத்தான் சிலர் அதிர்ஷ்டம் என்கிறார்கள். சிலர் நேரம் என்கிறார்கள். சிலர் விதி என்கிறார்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் கவியுள்ளத்தில் விளைந்த இந்த வரிகள் வெற்றி குறித்து என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

எத்தனை அழகான, எத்தனை ஆழமான வரிகள்! இந்த வரிகளைப் பாடும் போதும், பிறர் பாடக் கேட்க்கும் போதும், சந்திரபாபு அவர்களின் குரலில் திரைப் பாடலாகக் கேட்கும் போதும் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது.

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

எத்தனை யதார்த்தமான வரிகள்! நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனுபவித்துவரும் விஷயங்கள்தான். நம்முடைய வீடுகளில் நாம் தினம் தினம் காண்பதுதான். இத்தோடு நிறுத்தாமல் இந்த உலகத்தில் நமது வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளின் நிச்சயமற்ற தன்மையை கவியரசர் கீழ்கண்ட வரிகளில் படம் பிடிக்கிறார்.

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை.

அன்னை திரைப்படத்தில் ஆர். சுதர்சனம் அவர்களின் இசையில் திரு சந்திரபாபு அவர்களின் நடிப்பிலும் குரலிலும் படமாகியுக்கும் கண்ணதாசன் அவர்களின் கவியுள்ளம் எனது மறக்க முடியாத பாடம்.
 

No comments:

Post a Comment