Total Pageviews

Friday, May 1, 2026

இயக்குனர் மகேந்திரன்!


இயக்குனர் மகேந்திரன் எப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளைத் தந்தவர் என்பது நமக்குத் தெரியும். வசனகர்த்தாவாக இருந்த காலகட்டத்தில பக்கம் பக்கமாக வசனம் எழுதிய அவர் ஒரு இயக்குனர் ஆனதற்குப் பின்னால திரைமொழி என்பது வசனம் அல்ல என்பதை சரியாகப் புரிந்து கொண்டார். அதே நேரம் மிகச்சரியாக தன்னோட படங்கள்ல திரைமொழியைக் கையாண்டார்.

அப்படி அவர் உருவாக்கிய படங்கள் தான் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், கூத்தாடும் கூத்துக்கள் போன்ற படங்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையைத் தாண்டி படைப்புகளை விமர்சனம் செய்யும் விமர்சகராகவும் ஒரு காலகட்டத்துல மகேந்திரன் இருந்தார்.

அப்படி விமர்சனக் கலையிலே அவர் மிகச்சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் இயக்குனர் பிஎன்.ரெட்டி. அவரிடம் தான் அதற்குரிய பாடங்களைப் படித்தார் மகேந்திரன். இவரது பேராசிரியரான ரங்கன் பிஎன்.ரெட்டியின் மிகப்பெரிய விசிறி. அதன் காரணமாகவே அவருடன் நல்ல ஒரு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையிலே மகேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் பிஎன்.ரெட்டியைப் பார்க்கும்படிச் சொன்னார் ரங்கன்.

அந்தக் கடிதத்துடன் பிஎன்.ரெட்டியைப் போய் பார்த்தபோது, வயதில் இளையவராக இருந்தாலும் அப்படி ஒரு மரியாதையைக் கொடுத்து உபசரித்ததோடு மட்டும் இல்லாமல், தன்னோட தயாரிப்புகளில் உருவான பல படங்களை எனக்காகப் போட்டுக் காட்டச் சொன்னார் பிஎன்.ரெட்டி. அந்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. படங்களைப் போட்டுக் காமிச்ச உடனே நான் அவரது அலுவலகத்துக்குப் போவேன். அங்கு 12 மணி வரை அந்தப் படத்தைப் பற்றிப் பேசுவேன். நான் பார்த்த படங்களில் பல காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டது?

எதனால் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது என்பது பற்றியும் பல விளக்கங்களை பிஎன்.ரெட்டி என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் திரையுலகில் நன்றாக செயல்படவும், விமர்சனங்களை ஓரளவுக்கு நன்றாக எழுதவும் காரணமாக அமைந்ததுன்னா அன்றைக்கு பிஎன்.ரெட்டி எனக்கு எடுத்த பாடங்கள் தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் மகேந்திரன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment