அதிமுக உருவானதற்கு முதல் காரணம் சைதை துரைசாமி அவர்கள் தான்,
திமுகவில் எம்ஜிஆர் இருந்தபோது அவரது செல்வாக்கு மீது பொறாமை கொண்ட கருணாநிதி எம்ஜிஆரை அழிக்க கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்தினர், இதை எம்ஜிஆர் உணரவில்லை
எம்ஜிஆர் ஜீவ நாடியாக இருந்த எம்ஜிஆர் நற்பணி மன்றத்தை தனது மகன் மு.க.முத்து ரசிகர் மன்றமாக மாற்றிட எல்லாவகையிலும் கருணாநிதி செயல்பட்டார், இதையும் எம்ஜிஆர் உணரவில்லை
காரணம் அந்தளவுக்கு அப்போது கருணாநிதியை முழுமையாக எம்ஜிஆர் நம்பி இருந்த நேரம் அது
கருணாநிதி செய்யும் துரோகத்தை முதன் முதலில் எம்ஜிஆரிடம் சொன்னவர் சைதை துரைசாமி அவர்கள்தான் ஆனால் கருணாநிதி செய்த துரோகத்தை சைதயார் சொன்னபோது எம்ஜிஆர் தனது உயிருக்கு உயிராக இருந்த கருணாநிதி மீது குறை சொல்கிறாரே என்று சைதை மீது கோபம் அடைந்தார்...
பிறகு ஒவ்வொரு சம்பவமாக சைதை துரைசாமி சொல்லி எம்ஜிஆருக்கு கருணாநிதி செய்துவரும் சதிகளை புரியவைத்தார்..
திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்கிய போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஒரு பிரச்சார மேடையில் எலுமிச்சை பழ மாலை போட போவதுபோல் போய் எலுமிச்சை பழத்தை கருணாநிதி தலையில் தேய்த்து பைத்தியம் தெளியட்டும் என்று முழங்கினார்
முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் எலுமிச்சை பழத்தை தேய்த்தால் என்ன நடக்கும் காவலர்களும் கட்சி குண்டர்களாலும் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி செத்துட்டார் துரைசாமி என்று நினைக்கும் அளவுக்கு அவரது உடல் அசைவின்றி கிடந்தது
காவல் துறை பிடியில் இருந்த சைதை துரைசாமி உடலை மீட்டு ஆஸ்பத்திரியில் எம்ஜிஆர் சேர்த்தார்
அப்போதுதான் உண்மையில் கருணாநிதி கொடூர குணம் எம்ஜிஆருக்கு புரிகிறது
இந்த நேரத்தில்தான் எம்ஜிஆர் கருணாநிதியை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும் என்று வைராக்கியம் உண்டானது
இப்படி சைதை துரைசாமி அவர்களால்தான் எம்ஜிஆர் அதிமுகவை துவங்கினார்...
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு எம்ஜிஆர் கூட அமைச்சராக இருந்த பலபேர் திமுகவில் இணைந்தபோதும், அதிமுகவில் ஜெயலிதா உரிய அங்கீகாரம் தராதபோதும், எடப்பாடி ஒதுக்கியபோதும் இன்றுவரை வைராக்கியமாக திமுக அறிவாலயம் பக்கம் போகாத உத்தமர் எம்ஜிஆர் உண்மையான விசுவாசி சைதை துரைசாமி ஒருவர் மட்டுமே...
ஸ்டாலினை எதிர்த்திட தவிர்க்க முடியாத நேரத்தில் சென்னை மேயராக சைதை துரைசாமி அவர்களை ஜெ முன்னிருத்தினார் நிறுத்தினார்
சென்னை மேயர் ஆன சைதை துரைசாமி அவர்கள்
அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் செல்வதற்கு அரசியல்வாதிகள் வெகுவாக ஆர்வம் காட்டுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்,
இதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக தெளிவு படுத்தினார்.
அதாவது, ‘சொந்த செலவில் செல்வதற்கு அனுமதி வேண்டும், அரசு பணத்தை செலவழித்துச் செல்வதற்கு நான் விரும்பவில்லை’ என்று தெளிவுபடுத்தினார்.
இந்த விஷயம் அன்றைய முதல்வர் ஜெவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், ‘’மேயர் பதவிக்கு வந்ததும் அரசு கார், உதவியாளர்கள், பெட்ரோல் செலவு என எதுவுமே வேண்டாம் என்று தெரிவித்தார். அதன்படியே நடந்துகொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் பிடிவாதமாக இருப்பார் எனவே, அவர் விருப்பப்படியே இருக்கட்டும்’ என்று அனுமதி கொடுத்து பாராட்டினார்.
சொந்தப் பணத்தில் அரசு முறை சுற்றுப்பயணம் செய்யும் முதல் மேயர் என்று இதனை அதிகாரிகளும் ஆச்சர்யமாகப் பாராட்டினார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழியைக் கடைபிடித்த மேயர் சைதை துரைசாமி, கடைசி வரையிலும் மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவு வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் சொந்த ஊரான கேரளாவில் உள்ள அவரது பூர்வீக வீட்டை 35 வருடங்கள் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா பத்தாண்டுகளாக அதிமுகவை வைத்து இருக்கும் எடப்பாடி, எம்ஜிஆரால் அமைச்சராக எம்எல்ஏ எம்பி யாக கல்லூரி தாளாளராக உருவான எவருமே யாரும் கண்டுகொள்ளாதபோது சைதை துரைசாமி அவர்கள் மட்டுமே எம்ஜிஆர் பூர்வீக வீட்டை புனரமைப்பு செய்து கட்டி மியூசியமாக மாற்றி உள்ளார்...
ஊழலை எதிர்த்து உருவான அதிமுகவில் கண்ட ஊழல்வாதிகள் எல்லாம் அமைச்சராக அமர்ந்த போது
சைதை துரைசாமி கடைசிவரை அதிமுக அமைச்சராக வாய்ப்பு கிடைக்கவில்லை சிலருக்கு தங்களது தகுதியே தடையாக இருக்கும் என்பார்கள் அது சைதை துரைசாமி அவர்களுக்கு நிஜமான வார்த்தை
அதிகார மிக்க பதவிகள் கிடைக்காத போதும் சைதை துரைசாமி தனது தனிப்பட்ட முயற்சியால் மனிதநேய அறக்கட்டளையால் 1000க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் அதிகாரிகளை தனது சொந்த செலவில் உருவாக்கியுள்ளார்
அதோடு மற்ற TNBSC group Exam வழியாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கி உள்ளார்
இந்த சாதனையை இந்தியாவில் எந்த அரசியல் தலைவர்களும் செய்யாத சாதனையாகும்
எம்ஜிஆருக்கு அதிமுகவின் உண்மையான வாரிசு சைதை துரைசாமி தான், இவர் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக அமர நூறு சதவீதம் பொருத்தமானவர்..
ஆனால் ஊழலை ஒழிக்க எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இன்று ஊழல்வாதிகள் கையில் சிக்கி சீரழிந்து அழிந்து வருவதை பார்க்கும்போது எம்ஜிஆர் அவர்களை உயிர்க்கு உயிராக இதய தெய்வமாக நேசித்த எங்களுக்கு இரத்த கண்ணீர் வருகிறது...
சிவ பரமசிவம்!

No comments:
Post a Comment