மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர்கள் பலர் தமிழ் திரையுலகில் இருக்கின்றனர்.
- அந்த வரிசையில் 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 56 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகை "நல்லெண்ணெய்" சித்ராவை பற்றிய பதிவிது.
"நல்லெண்ணெய்" சித்ரா
- கேரளாவில் உள்ள கொச்சியை சேர்ந்தவர் சித்ரா.இவர் சிறு வயதிலேயே நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார்.
- இதனை அடுத்து அவர் தனது 10வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
- அதன் பிறகு அவர் பல மலையாள திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் படிப்பையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருந்தார்.
- தவறான நபர்களின் வழிகாட்டுதலால் இவரின் இளம் வயதில் 18+ திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
- இந்த நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்த் அறிமுகமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் ரஜினியின் கடிதத்தை ஸ்ரீவித்யாவிடம் கொடுக்கும் சிறுமியாக நடித்திருந்தார்.
- அதன்பின் "ரசிகன் ஒரு ரசிகை" என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும் "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
- அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படத்தில் சுகாசினியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார்.
- ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இந்த காட்சிகளில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
- இந்த நிலையில் தான் அவர் "நல்லெண்ணெய்" விளம்பரம் ஒன்றில் நடித்தார்.அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு "நல்லெண்ணெய்" சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது.
- இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
- குறிப்பாக "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் உடன் சித்ரா நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மறைந்த நகைச்சுவை நடிகரான மனோபாலா இயக்கியிருந்தார்.
- அதே போல் பிரபு நடித்த ’என் தங்கச்சி படிச்சவ’, ராம்கி நடித்த ’வெள்ளைய தேவன்’ ஆகிய படங்களில் நடித்த சித்ரா அதன்பின் ‘சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார்.
கூடுதல் தகவல்:
- நடிகை சித்ரா கடந்த 1990-ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
- திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக வாழ்ந்து வந்தார். இருப்பினும் அவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
- எதிர்பாராதவிதமாக கடந்த 2021-ஆம் ஆண்டு சித்ரா மாரடைப்பால் காலமானார்.
நன்றி:கூகிள்(படங்கள்)