Total Pageviews

Saturday, August 29, 2026

அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்! !

 

🌹அபூர்வ ராகங்கள்

படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!

🌹சிவாஜி ராவ் திரைப்படக் கல்லூரி மாணவராக இருக்கும்போது கல்லூரிக்கு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தர் வர, அவரிடம் சில நிமிங்கள் பேசும் வாய்ப்பு சிவாஜி ராவுக்கு கிடைத்தது. சிவாஜி ராவிடம் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த பாலச்சந்தர் அப்போது அவர் இயக்கி வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க வைத்தார். சிவாஜி ராவ் என்கிற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார்.

🌹கதைப்படி ஸ்ரீவித்யாவை விட்டு பிரிந்து சென்ற அவர் ஸ்ரீவித்யாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக புற்றுநோயுடன் திரும்பி வருவார். முதல் நாள் படப்பிடிப்பு. அதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் சிவாஜி ராவ் தூங்கவே இல்லை. விடுதி அறையில் தன்னிடம் தங்கியிருந்தவரிடம் காலை 5 மணிக்கு என்னை அழைத்து செல்ல கார் வரும். 4 மணிக்கு என்னை எழுப்பி விடுங்கள் என சொல்லிவிட்டார்.

🌹அவருக்கு தூக்கமே இல்லை. முதல்நாள் முதல் காட்சியில் பேச வேண்டிய ‘நான் பைரவியோட புருஷன்’ என்கிற வசனத்தை பலமுறை சொல்லிப்பார்த்துகொண்டே இருந்தார். எப்போது தூங்கினார் என அவருக்கே தெரியவில்லை. 4.30 மணிக்கு நண்பர்கள் எழுப்பிவிட குளித்துவிட்டு ரெடியாகி மொட்டை மாடியில் நின்றுகொண்டு கார் வருகிறா என்று பார்த்துகொண்டே இருந்தார் சிவாஜி ராவ். ஆனால், வரவில்லை.

🌹சுமார் 6 மணிக்கு கார் வந்தது. வேகமாக கீழே இறங்கி அதில் ஏறிய கார் படப்பிடிப்பு தளத்திற்கு போனது. அங்கு வந்த கமலிடம் ‘ஐ யம் சிவாஜி ராவ் ஃபிரம் பெங்களூர். நீங்கள் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தேன் சிறப்பாக நடித்திருந்தீர்கள்’ என ஆங்கிலத்தில் சொன்னார் சிவாஜி ராவ். புன்னகையுடன் கடந்து சென்றார் கமல்ஹாசன். அதுதான் ரஜினி கமலிடம் முதல் முறையாக பேசியது.

🌹இப்போது ரஜினிக்கு முதல் ஷாட். ‘நான் பைரவியோட புருஷன்’ என வசனம் பேச வேண்டும். ஆனால், ரஜினிக்கு வரவில்லை. அருகில் இருந்த நாகேஷோ அவரை நடிக்க விடாமல் கலாய்த்துக்கொண்டே இருந்தார். நாகேஷை சும்மா இருக்கும்படி அடக்கிவிட்டு ரஜினியை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். ரஜினிக்கு கூட்டத்தை பார்த்து எந்த பயமோ, பதட்டமோ இல்லை. பாலச்சந்தை பார்த்துதான் அவருக்கு பயம். ஒருவழியாக நடித்தார்.

🌹அதன்பின் படம் முடிந்து டப்பிங் வேலை நடந்தது. தனக்கு வேறு நடிகர் குரல் கொடுப்பார் என ரஜினி நினைத்த நிலையில் ரஜினியே பேசட்டும் என பாலச்சந்தர் சொல்லிவிட்டார். எடிட்டிங் அறையில் தன்னை முதன் முதலாக திரையில் பார்க்கிறார் சிவாஜி ராவ். இதற்குத்தானே தவம் கிடந்தார். ஆனால், பாலச்சந்தர் அங்கே இருந்ததால் டப்பிங் பேசவரவில்லை‌.

🌹அவரின் உதவியாளர்களிடம் ‘அவர் இருந்தால் எனக்கு பேசவரவில்லை’ என சொல்ல பாலச்சந்தர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் தான் நடித்த காட்சிகள் முழுவதுக்கும் டப்பிங் பேசி முடித்தார் சிவாஜி ராவ். அதன்பின் அவர்கள், மூன்று முடிச்சி என தொடர்ந்து சிவாஜி ராவை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். இப்படித்தான் ரஜினி என்கிற நடிகர் உருவானார்.

🌹முதல்நாள் ரஜினியை கிண்டலடித்த நாகேஷ் அதன்பின் ரஜினிக்கு சொல்லி கொடுத்தார். பாலு என்ன சொல்கிறானோ, அவர் எப்படி நடித்து காட்டுகிறானோ.. அதை அப்படியே உள்வாங்கி செய்துவிடு. அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என சொன்னார். ஆனால், ரஜினியோ பாலச்சந்தர் சொல்வதுடன் தனது ஸ்டைலையும் கலந்து பேசி பெரிய நடிகராக வளர்ந்துதான் வரலாறு

🌹Prashanth .

16 வயதினிலே !

 

🌹16 வயதினிலே

🌹பாரதிராஜா ஒருபேட்டியில்

🌹ஸ்ரீதேவி வீடு தேடி கதை சொல்லப் போனேன். '16 வயதினிலே' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன்.

🌹 ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும்வரை அவர் கண்கள்மீது நிலைகுத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியவில்லை.

🌹என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி... அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே 'என்ன சார் சொல்றீங்க...' என்று அதிர்ந்தார், ஶ்ரீதேவி. அடுத்து மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் என்று நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலை அலையாய் தோன்றி மறைந்தன.

🌹அதன்பின் ஒரு வழியாக '16 வயதினிலே' படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

என் முதலாளி ராஜ்கண்ணு '16 வயதினிலே' படத்தை முதலில் கறுப்பு வெள்ளையில் எடுத்தால் போதும் என்று சொன்னார். அதன்பின் நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்தபிறகு வண்ணப்படமாக தயாரிக்க விரும்பினார்.

🌹கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைத்தன. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய்விரித்துப் படுத்துக்கொண்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருப்பார்.

🌹 என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் 'செந்தூரப்பூவே...' பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடித்தபோது மகிழ்ந்துபோனேன்.

🌹அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை.

.

🌹கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சின்ன வீட்டில் படமாக்கப்பட்ட காட்சி. 'மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா...' என்று வசனம் எழுதிய கலைமணி, கமல்ஹாசனோடு பிரமாதமாக நடித்த மயிலு ஸ்ரீதேவி

🌹 '16 வயதினிலே' படத்தை இயக்கும்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அவருக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய்

கொடுத்தோம். மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் '16 வயதினிலே'.

🌹நான் எத்தனையோ நாயகிகளை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறேன், ஶ்ரீதேவிக்கும் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷனை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். யாரோடும் ஒப்பிடமுடியாத அபூர்வமான திறமை கொண்டவர் ஶ்ரீதேவி..

Prashanth

Friday, August 28, 2026

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது…

 

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது… ❤️

அவர்கள் நம்ம வாழ்க்கைக்குள் ஒரு சாதாரண மனிதராகத்தான் வருவார்கள். நமக்கு கஷ்டம் வந்த நேரத்தில் ஒரு கை கொடுப்பார்கள்…

மனம் உடைந்த நேரத்தில் ஒரு வார்த்தையால் நம்மை தூக்கி நிறுத்துவார்கள்…யாருமே இல்லன்னு நினைக்கிற நேரத்தில், “நான் இருக்கேன்”ன்னு நம்ம பக்கத்துல நின்னுடுவாங்க. 🥺❤️

அவர்கள் நம்ம வாழ்க்கையை முழுசா மாற்றணும்னு வருவதில்லை…

ஆனா அவர்கள் வந்த பிறகு, நம்ம வாழ்க்கை கொஞ்சம் அழகாகவும்… கொஞ்சம் நிம்மதியாகவும் மாறிடும்.

சில உறவுகள் ரத்தத்தால் உருவாகாது அன்பால் உருவாகும். ❤️

அப்படிப்பட்ட மனிதர்கள் நம்ம வாழ்க்கையில் கிடைத்தால்…

அவர்களை ஒருபோதும் இழந்துடாதீங்க.

Because some angels don’t have wings…

They simply walk into our lives and make everything better. ❤️‍🩹

 

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது… ❤️

அவர்கள் நம்ம வாழ்க்கைக்குள் ஒரு சாதாரண மனிதராகத்தான் வருவார்கள். நமக்கு கஷ்டம் வந்த நேரத்தில் ஒரு கை கொடுப்பார்கள்…

மனம் உடைந்த நேரத்தில் ஒரு வார்த்தையால் நம்மை தூக்கி நிறுத்துவார்கள்…யாருமே இல்லன்னு நினைக்கிற நேரத்தில், “நான் இருக்கேன்”ன்னு நம்ம பக்கத்துல நின்னுடுவாங்க. 🥺❤️

அவர்கள் நம்ம வாழ்க்கையை முழுசா மாற்றணும்னு வருவதில்லை…

ஆனா அவர்கள் வந்த பிறகு, நம்ம வாழ்க்கை கொஞ்சம் அழகாகவும்… கொஞ்சம் நிம்மதியாகவும் மாறிடும்.

சில உறவுகள் ரத்தத்தால் உருவாகாது அன்பால் உருவாகும். ❤️

அப்படிப்பட்ட மனிதர்கள் நம்ம வாழ்க்கையில் கிடைத்தால்…

அவர்களை ஒருபோதும் இழந்துடாதீங்க.

Because some angels don’t have wings…

They simply walk into our lives and make everything better. ❤️‍🩹


அரசியலில் முக்கியமாக தேவை

 

அரசியலில் முக்கியமாக தேவை

"அனுபவம் "...

அனுபவம் இல்லாதவர் வர கூடாதா என்பது இல்லை... என் கருத்து உங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

அதற்கு ஒரு சிறு கதை...

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க ஒரு இளைஞர், ஒரு முதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

ஒருநாள் இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட "இது எப்படி சாத்தியம்!

நான் தினம் நீர் ஊற்றி உரம் போட்டு நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது!

நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது" என்று கேட்க !

அதற்கு அவர் சொன்னார் !

"நீ எல்லாத்தையும் அதற்கு கொடுத்ததால், அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்" என்றார்.

பெரியவர்கள் அனுபவத்தில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் பற்றி எடுத்து சொன்னாலோ, கொஞ்சம் கஷ்டமான காரியம் செய்ய வைத்தாலோ "இந்த கிழத்துக்கு வேற வேலையில்லை சும்மா படுத்திக்கிட்டு இருக்குன்னு " சொல்லும் இளசுகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளுங்கள் உருக்கினால் தான் தங்கம் கூட தூய்மையான சொக்கத்தங்கம் ஆகும்...!

உளி தாங்கும் கற்கள் தான் சிலையாகும்...!!!

அரசியலில் நிலைத்து நிற்க என்ன வேண்டுமோ செய்யுங்கள்...

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

 

தெரியாமல் யாராவது ஏமாற்றி விட்டால் அது அவர்கள் தப்பு இல்லை. தெரிந்தும் ஏமாற்றுவதே தப்பு. அவர்களுக்கு ஆதாயம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பொய்யும் புரட்டும் நிறைந்தது தான் வாழ்க்கையா?

அது சரி. ஏமாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு முடிவுதான் என்ன? காலம் சும்மா விடுமா? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே என்ற எம்ஜிஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இதோ ஒரு அருமையான கதை...

பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக் காரத்தனம். கனவுகளை கட்டி இழுக்க நினைத்தாலும்.. எதார்த்தங்களையே அரவணைக்க வைக்கும் வாழ்க்கை. ஒரு நிஜத்தை சந்திக்க பல நிழல்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களைப் பார்த்து, "அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது? என்று கேட்டான்.

இந்தக் கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர் "வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது" என்றான். இரண்டாவது அறிஞர், "மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது" என்று பதிலளித்தார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து "அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்" என்று பதில் அளித்தார்

நான்காவது அறிஞர் "அரசே நம்ம பூமிக்கு வேண்டிய ஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது" என்றான்.

ஐந்தாவது அறிஞர் "வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது" என்றார். இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து "அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்.

அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம் அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்".

ஆகவே. அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்கப் பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளைக் கொடுத்துப் பாராட்டினார். அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார், மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலைப் பாராட்டினர்.

நீதி: காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தைத் தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மாறுவேடம் கச்சிதமாய் போட்டாலும். காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான

குணத்தை வெளிக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே. பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட. உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்.

😇திண்ணை😇

😇திண்ணை😇

ஒரு காலத்துல ஒரு வீட்டோட அழகும், கம்பீரமும் அந்தந்த வீட்டோட திண்ணைய பொருத்ததாதான் இருக்கும்... அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த திண்ணைகள்😇

ஓட்டு வீடுன்னு சொன்னாலே அந்த வீட்டோட திண்ணைகள்தான் முதல்ல நம்ம நினைவுக்கு வரும்... ஆமா வாசல்படிக்கு வெளில தாழ்வாரத்துக்கு மேல பெரிய திண்ணை ஒன்னும் சின்ன திண்ணை ஒன்னுமிருக்கும்... சுத்துக்கட்டு வீடுகள்ல ரெண்டுமே பெரிய திண்ணைகளாதான் இருக்கும்..

வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா காலார கொஞ்சநேரம் திண்ணைலதான் உட்காருவாங்க... வீட்ல உள்ளவங்களும் வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல காத்தாட திண்ணைல உட்கார்ந்துதான் பொழுத போக்குவாங்க..

மழை நேரங்கள்ல திண்ணைல உட்கார்ந்து அந்த குளிர்காத்து மேல பட கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மழைய ரசிக்கறது அவ்ளோ சுகமா இருக்கும்...

சில வீடுகளோட திண்ணைகள்ல தாயம் விளையாட கோடுகள்லாம் கிழிச்சி வச்சிருப்பாங்க... எங்க தாத்தா வீட்டுல சாய்மானம்லாம்(சாஞ்சிக்கற மேடை) இருக்கும்.. தலைவச்சி படுக்க வழு வழுப்பான மேடைலாம் இருக்கும்...

சின்ன வயசுல தாத்தா வீட்டு திண்ணைல அந்த தூணபிடிச்சி சுத்தி விளையாண்டது, மேல ஏறி நின்னுக்கிட்டு ஒரு குச்சிய மைக் போல கைல வச்சிக்கிட்டு பாட்டு பாடினதுலாம் இன்னைக்கும் என் நினைவுல இருக்கு 😍😍

வீடுகளோட திண்ணைகளுக்குதான் அந்த வீட்டோட இன்ப துன்பம் எல்லாமே முழுசா தெரிஞ்சிருக்கும் ஆமா திண்ணைகளும் ஒரு வீட்டோட அங்கங்கள்தான் 😇

காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்

 காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்..

  • கர்நாடகாவின் தலைகாவிரியாக உருவெடுத்து ஒற்றை காவிரியாக வரும் ஆறானது‌ இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது.
  • திருச்சியின் முக்கிய சுற்றுலா தலமாக முக்கொம்பு திகழ்கிறது.
  • முக்கொம்பில் சிறந்த பொழுதுபோக்கு பூங்கா சிறுவர் பூங்கா,செயின்ட் வீல் ராட்டினம், சறுக்கு விளையாட்டு, படகு போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது.
  • அருகில் கரிகாலச்சோழன் புகழை இன்று வரை சுமந்து நிற்கும் கல்லனணை உள்ளது.
  • பூங்காக்களில் உள்ள மரத்தடிகளில் அமர்வதற்கு ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்வது இனிமையாக இருக்கும்.
  • அருகில் உளள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வது அதைவிட சிறப்பு சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீ போன்றவை கிடைக்கும்.
  • காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். நமக்கு காவிரி ஆற்றில் இருந்து மீன் பிடித்து சுடச்சுட வருத்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
  • சுற்றுலா இடம் தேடி எங்கெங்கோ செல்பவர்கள் முக்கொம்பு சுற்றுலா சென்று வந்தால் மனதுக்கு இதமாக இருக்கும்.
  • அப்படியே அருகில் உள்ள கல்லணை,திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்,திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் என இவற்றையும் பார்வையிட்டு மகிழலாம்.

சகுனிங்க நிறைய இருக்காங்க... அதுக்கு கொஞ்சம் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் வேணும்... பொளந்து கட்டிய ரஜினி

 

சகுனிங்க நிறைய இருக்காங்க... அதுக்கு கொஞ்சம் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் வேணும்... பொளந்து கட்டிய ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஜெயிலர் என்ற மாபெரும் பெற்றிக்குப் பிறகு வேட்டையன் படத்தின் மூலம் களம் இறங்குகிறார். படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இதற்கான ஆடியோ லாஞ்ச் நேற்று நடந்தது. இதுல அவர் என்ன பேசினார்னு பார்க்கலாமா...

ஒரு விஷயம் நாம தொடர்ந்து பண்ணினோம்னா அடுத்தடுத்து என்ன என்ன என்ற கேள்விகள் நமக்குள்ள வந்துக்கிட்டே இருக்கும். ஒரு தோல்வியைப் பார்த்தா அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயம் நமக்கு வந்துடும். அதே மாதிரி தான் ஒரு பெரிய வெற்றியைப் பார்த்ததும் அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயமும் எனக்குள்ள வந்துச்சு.

ஏன்னா அடுத்தது வெற்றி பெறலைன்னா ஃபார்ம்ல இல்லன்னு சொல்லிடுவாங்க. அந்த மாதிரி மிகப்பெரிய வெற்றியை நான் ஜெயிலர் படத்துல பார்த்தேன். அதுக்கு அப்புறம் நான் முழுமையா நடிச்ச படம் தான் வேட்டையன். இடையில கெஸ்ட் அப்பியரன்ஸா லால் சலாம் படத்துல நடிச்சேன்.

ஜெயிலர்க்கு அப்புறம் நிறைய கதைகள் கேட்டேன். ஆனா என்ன பண்றதுன்னு தெரியல. ஏன்னா நிறைய பிரஷர். பெரிய வெற்றி கொடுத்தாச்சு. அப்படி வந்தது தான் வேட்டையன் கதை. அதைக் கேட்டேன்.

ஆனா இதைக் கமர்ஷியலா மாற்றிக் கொண்டு வாங்கன்னு சொன்னேன். ஏன்னா கோடிகள்ல நம்மளை நம்பி படம் எடுக்குறாங்க. அவங்களுக்குப் போட்ட காசு திரும்ப கிடைக்கணும். அப்போ த.செ.ஞானவேல் சார் நான் நெல்சன் மாதிரியோ, லோகேஷ் மாதிரியோ கமர்ஷியலா கொடுக்க முடியாது.

ஆனா என் ஸ்டைல்ல கொடுக்குறேன். அது ரசிகர்களுக்கு ரொம்ப திருப்தியா இருக்கும்னு சொன்னாரு. அதைத் தான் நானும் சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் ரெண்டே நாளில் வந்து சொன்னார். முதல்ல கொஞ்சம் கதை சொன்னாரு. இதுக்கு அப்புறம் கமர்ஷியல் வந்துக்கிட்டே இருக்கும்னாரு. சார் கமர்ஷியலை சொல்லல. டப்பு வரணும்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெக்னீஷியன் எல்லாம் ரஜினி சாய்ஸ் தான்னு சுபாஷ்கரனே சொல்லிட்டாராம். அனிருத்துக்கும் ரஜினி டபுள் ஓகே சொன்னாராம். அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் எல்லாமே ரஜினி சாய்ஸ் தானாம். பகத்பாசில் எனக்கு சம்பளம் கூட வேண்டாம். ஒன்றரை மாசம் டைம் கொடுங்கன்னு சொன்னாரு.

எங்கிட்ட வேணாம். நான் அடுத்து கூலி படத்துல வேற கமிட் ஆகிட்டேன். லோகேஷ்கிட்ட கேட்கணும்னு சொன்னேன். அவரும் டைம் எடுத்துக்கோங்க சார்னு சொல்லிட்டாரு. ஏன்னா அவர் இன்னும் கதையை ஒழுங்கா பண்ணல. அதான் டைம் கொடுத்துட்டாருன்னு லோகேஷை கலாய்த்தார் ரஜினி.

என்னைப் பழிவாங்கறதுக்காகவே மஞ்சுவாரியாரைக் கொண்டு வந்தீங்களான்னு ரஜினி கலாய்ச்சாராம். ஏன்னா அவரு தளதளன்னு ரொம்பவே அழகா இருந்தாராம். அமிதாப்பச்சன்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை அழகாக் கத்துக்கிட்டேன்னாரு.

முள்ளும் மலரும் படத்துல வர்ற ‘ரெண்டும் கையும் ரெண்டு காலும் இல்லன்னா கூட இந்தக் காளி பொழைச்சிக்குவான் சார்’னு ரஜினி அதே டயலாக்கைப் பேசிக்காட்டினாரு. ஆடியன்ஸ் மத்தியில பலத்த கைதட்டல்கள். இந்த உலகத்துல சகுனிகள் நிறைய பேர் இருக்காங்க. நல்லவனா இருந்தா பொழைச்சிக்கவே முடியாது.

கொஞ்சம் சாணக்கியத்தனமும், கொஞ்சம் சாமர்;த்தியமும் இருக்கணும். அதனால பார்த்துப் பத்திரமா இருந்துக்கோங்க. இப்படி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் முத்தாய்ப்பாக அட்வைஸ் உடன் விடைபெற்றது அரங்கத்தை அதிர வைத்தது.

13ம் நம்பர் வீடு பேய்ப்படம் !

 

பேய்ப்படங்களைப் பார்ப்பது என்றால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டினால் ஆர்வம் தானே. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பேய்ப்படங்களுக்கு என்று ஒரு மவுசு இருக்கத் தான் செய்கிறது. அப்போது ஜெகன் மோகினி, மாயமோகினின்னு ஆரம்பித்து இப்போது அரண்மனை 1, 2, 3, 4, சந்திரமுகி 1, 2, பேய்மாமா, முனி, காஞ்சனா1, 2, 3, 4 என தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

அந்த வகையில் எப்போதும் பேய்ப்படங்களை மிகவும் பயப்படுபவர்கள் தான் பார்ப்பதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தனியாகப் போய்ப் பார்க்க மாட்டார்கள். ஒரு குரூப்பாகத் தான் போவார்கள். ஏன்னா பயம். அப்படி ஒரு பயம். இன்னும் ஒரு சிலர் குரூப்பாகப் போனாலும் கூட பேய் வரும்போதெல்லாம் பேயை விட மேலாகக் கத்திக் கூப்பாடு போடுவர்.

இது ஏன்னா தங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளத் தான். முக்கியமாக டிவியில் படத்தைப் பார்ப்பதை விட தியேட்டரில் சென்று பேய்ப்படத்தைப் பார்த்தால் தான் ஒரு தனி எபெக்ட் இருக்கும். அதிலும் திடீர் திடீர்னு மியூசிக்கே நம்மை பயமுறுத்தி விடும். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களைக் கதிகலங்கச் செய்த படம் ஒன்று உள்ளது.

அது இப்போது பார்த்தாலும் நமக்குள் ரத்தமே உறைந்து விடும். அப்படி ஒரு பயம் கொண்ட சினிமா தான் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் கூட தனியாக உங்கள் வீட்டு டிவியில் இந்தப் படத்தைப் போட்டுப் பாருங்கள். அப்போது உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால் உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி தான். அப்படி என்ன படம்?

13ம் நம்பர் வீடு தான். மலையாள இயக்குனர் பேபியின் இயக்கத்தில் நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், லலிதா குமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியுமே நமக்குத் திகிலூட்டும் வகையில் தான் இருக்கும். இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

13ம் நம்பர் வீடு படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நமக்குள் அப்படிப்பட்ட ஒரு பயத்தைத் தரும் படம் என்றால் அது இதுதான். அந்த சமயத்தில் இந்தப் படத்தை யார் தனியாக தியேட்டரில் போய் பார்க்கிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு என்று கூட பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

வாலி - எம்ஜிஆர்

 

mgr, vaali

நவரத்தினம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டத்துல அந்த படத்தின் இயக்குனர் ஏபி.நாகராஜனிடம் இருந்து வாலிக்கு ஒரு நாள் அழைப்பு வந்தது. எம்ஜிஆர் உங்களைப் பார்க்கணும்னு விரும்புறாரு. அதனால உடனடியா சத்யா ஸ்டூடியோவுக்கு வாருங்கள் என்றார் ஏபி.நாகராஜன். அந்தக் காலகட்டத்துல வாலி எங்கே போனாலும் பாகவதர் என்று அழைக்கப்படுற நபர் கூடவே போவார்.

வாலியும் அவரை அழைத்துக் கொண்டு சத்யா ஸ்டூடியோவுக்குப் போனார். எம்ஜிஆரின் மேக்கப் அறைக்கு வெளியில் பாகவதரை நிறுத்தி விட்டு, அவரை சந்திப்பதற்கு அறைக்குள் போனார் வாலி. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதற்குள் மதிய உணவு வேளை வந்தது. வாங்க சாப்பிடலாம்னு பக்கத்துல இருந்தவரைக் கூப்பிட்டு இலை போடச் சொன்னாரு எம்ஜிஆர்.

நடுவுல எம்ஜிஆர் இருந்தார். வலது பக்கத்துல லதாவும், இடது பக்கத்துல வாலியும் உட்கார, எம்ஜிஆருடைய உதவியாளர் பரிமாறத் தொடங்கினார். அப்போ திடீர்னு எழுந்தார் வாலி. என்ன எழறீங்கன்னு கேட்டார் எம்ஜிஆர். எங்கூட பாகவதர்னு ஒருத்தர் வந்துருக்காரு. அவரு வெளியே இருக்காரு. காசு கொடுத்து அவரை வெளியே சாப்பிட்டு வந்துட சொல்றேன். அப்படின்னு வாலி சொன்னதுதான் தாமதம். எம்ஜிஆர் உடனே தன்னோட இருப்பிடத்தில் இருந்து எழுந்து விட்டார்.

கதவை திறந்துகிட்டு வெளியே போய் இங்கே பாகவதர்னு வாலி கூட வந்தது யார்? அப்படின்னு கேட்க, அந்த பாகவதர் கூனி குறுகி, நான்தான் பாகவதர் என்றார். உடனே அவரது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்த எம்ஜிஆர், லதாவை எழுந்திருக்கச் சொல்லி அந்த இடத்திலே அவரை அமரச் சொல்லி சாப்பாடு பரிமாறச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த வாலியின் கண்களிலே கண்ணீர். அண்ணே, மனிதர்களில் நான் எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கேன். நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதர் நீங்க தான் என்று எம்ஜிஆரைப் பார்த்து சொன்னார் வாலி. அவர் அப்படி சொன்னதும் எம்ஜிஆர் அதுக்குக் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா? வழக்கம்போல ஒரு புன்னகைதான்.

Tuesday, August 25, 2026

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

RS.Manohar

நாடக நடிகரும், பிரபல சினிமா வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ்.மனோகர் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி நாடக உலகிற்குள் நுழைந்தார் என்று பார்ப்போம்.

பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நடிகர் ஆர்எஸ்.மனோகருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்ததுன்னா அவரது நாடகங்கள் தான். நாடகக் காவலர் என்று போற்றப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் அவருடைய நாடகக் கம்பெனியை ஆரம்பித்ததே ஒரு தனிக்கதை. 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று சென்னையிலே பாகிரதி தெருவில் அமைந்துள்ள தன் வீட்டில் அமர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஆர்எஸ்.மனோகர்.

அப்போது அவர்களுக்குள் ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பித்தால் என்ன என்ற ஒரு எண்ணம் பிறந்தது. நாடகக் கம்பெனியை ஆரம்பிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம். அதை இன்றைக்கே ஆரம்பித்து விடுவோம் என்றார் மனோகர். அன்றைய தினம் தேசிய தலைவரான நேருவின் பிறந்த தினம் என்றதால நாடகக் கம்பெனிக்கு நேஷனல் தியேட்டர் என்று பெயர் வைக்கலாம் என்று நண்பர்கள் எல்லோரும் முடிவு செய்தனர்.

நாடகக் குழு ஆரம்பித்த போது அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நவாப் ராஜமாணிக்கம், டிகே.சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாம் போன்ற மேதைகள் நாடகம் போட்டுக் கொண்டு இருந்த காலகட்டம் அது. இவங்களுக்கு நடுவுல நாம் என்ன செய்யப் போறோம் அப்படிங்கிற அச்சம் எனக்குள்ள இருந்தது. இன்ப நாள், உலகம் சிரிக்கிறது ஆகிய சமூக நாடகங்களை முதலில் அரங்கேற்றினோம்.

இந்த ரெண்டு நாடகங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரறே;பு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் துறையூர் மூர்த்தி லங்கேஸ்வரன் நாடகத்தை எழுதிக் கொண்டு வந்தார். அந்த நாடகத்தைத் தமிழ்நாட்டுல போடுறதுக்கு கொஞ்சம் எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தது. என்றாலும், இலங்கையில் அந்த நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுக்குப் பின், தமிழ்நாட்டிலும் அது தொடர்ந்தது.

அதன் காரணமாகத்தான் ஒரு காலகட்டத்தில என்னுடைய பெயரே லங்கேஸ்வரன் மனோகர் ஆகியது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஆர்எஸ்.மனோகர்.

தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!

தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!

திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட தன்னம்பிக்கைக் கொண்ட மனிதராக இயக்குனர் கே.பாலசந்தர் இருந்தார் என்று பார்க்கலாமா...

சத்யா மூவீஸில் தெய்வத்தாய் என்ற படத்தை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. அந்தப் படத்துக்கான பாடல் கம்போசிங் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது அந்த அறையின் மூலையில் எப்போதும் ஒரு இளைஞர் நின்று கொண்டே இருந்தாராம்.

அதைப் பார்த்துள்ளார் எம்எஸ்.விஸ்வநாதன். ஒருநாள் தெய்வத்தாய் படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் எழுந்து போன பிறகு, தன் அருகில் இருந்த வாலியை அழைத்து யார் அந்த இளைஞன்னு கேட்டுள்ளார். அவர்தான் இந்தப் படத்தோட வசனகர்த்தா என்றார் வாலி.

உடனே அந்த இளைஞரைப் பக்கத்தில் அழைத்த எம்எஸ்வி. நான் உங்களைத் தினமும் பார்க்கிறேன். ஒருநாள் கூட நீங்கதான் இந்தப் படத்தோட வசனகர்த்தான்னு எங்கிட்ட சொல்லவே இல்லையேன்னு கேட்கிறார் எம்எஸ்வி.

பாலசந்தர், நான் யாருன்னு தெரிஞ்சி இந்தப் படத்துல உள்ள வசனங்களை நீங்க ரசிக்கிறதை விட எழுதிய வசனங்களை எல்லாம் ரசித்துப் பார்த்துவிட்டு இந்த வசனங்களை எல்லாம் எழுதினது யார்னு கேட்டு நீங்கத் தெரிஞ்சிக்கணும்னு நான் நினைச்சேன். அதனால்தான் நான் என்னைப்பற்றி உங்ககிட்ட சொல்லலன்னு அப்பவே பாலசந்தர் தன்னம்பிக்கையோட சொன்னாராம்.

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

 

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?மனித உடல் என்பது மிகவும் அதிசயமான ஒரு இயற்கையின் படைப்பாகும். இந்த மனித உடலை நீண்ட காலம் நோய் நொடியின்றி பாதுகாத்து கொள்ள சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் . இன்முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.

மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது.

புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது. செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது.

சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களை வடிகட்டும் திறன் உண்டு. எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உடலுக்கு நோயெதிர்ப்பு திறனைஅதிகரிக்க செய்கிறது. முடி மற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும். கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

நமது உடலில் மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மிகவும் அவசியம். முந்திரி பருப்பில் இவை இரண்டும் அதிகம் உள்ளன. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. எனவே அடிக்கடி முந்திரி சாப்பிடுவது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

ஜெய்சங்கரை மக்கள் கலைஞர்னு சொல்றாங்களே... ஏன்னு இப்ப தெரியுதா!

 ஜெய்சங்கரை மக்கள் கலைஞர்னு சொல்றாங்களே... ஏன்னு இப்ப தெரியுதா?

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அந்தக் காலத்தில் வெள்ளிக்கிழமை ஹீரோன்னு தான் அழைப்பர். அவர் நடித்த ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு சில படங்கள் சாதாரண வெற்றியைப் பெற்றுள்ளன.

பல படங்கள் தோல்வியும் பெற்றுள்ளன. ஆனால் அந்தத் தோல்வியைப் பற்றியோ, வெள்ளிக்கிழமை ஹீரோன்னு தன்னை அழைத்தது பற்றியோ கவலைப்படாமல் ஜெய்சங்கர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படங்களின் விளைவாக யார் யாரெல்லாம் பயன்பெற்றார்கள் என்பதை பூரணமாக ஜெய்சங்கர் அறிந்து கொண்டதுதான்.

தமிழ்சினிமா உலகில் ஜெய்சங்கரைப் போல பல தயாரிப்பாளர்களை உருவாக்கிய நடிகர்களே இல்லை எனலாம். அந்தளவுக்குப் பலரைத் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தவர் ஜெய்சங்கர்.

அப்படிப் பல தயாரிப்பாளர்கள் உருவானதாலதான் பல இயக்குனர்களுக்கு வேலை கிடைத்தது. பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வேலை கிடைத்தது. உடன் நடிக்கும் பல நடிகர்களுக்கும் வேலை கிடைத்தது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ஜெய்சங்கர் படங்களில் நடித்தாரே தவிர, தன்னுடைய படங்கள் எல்லாம் அதிகமான வெற்றியைக் கொடுக்கணும்.

தான் அதிகமாக சம்பளம் வாங்கணும். அப்படிங்கற ஆசை எந்தக் காலத்திலும் ஜெய்சங்கருக்கு இருந்ததில்லை. அதனால்தான் இன்று வரை ஜெய்சங்கர் மக்கள் கலைஞர் என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்…

 நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்…

  • நெய்க்காரப்பட்டி. இந்த ஊரின் பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லம் தான்.
  • தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் இங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லத்துக்கு மவுசு அதிகம்.
  • பழநியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது.
  • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வயல்களிலேயே ஆங்காங்கே அச்சுவெல்ல தயாரிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதனால் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் இயங்குகின்றன.
  • இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அச்சு வெல்லம் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
  • கரும்புகளை சாறு பிழிந்து, அதை நன்கு காய்ச்சுகின்றனர்.
  • பின்னர் காய்ச்சிய குழம்பு போன்ற வெல்லப் பாகுவை மரத்தினால் ஆன அச்சுக்கட்டையில் ஊற்றி சூடு ஆறியதும் காய வைத்து கீழே கொட்டுகின்றனர்.
  • இதன் பின், சுவையான அச்சு வெல்லம் விற்பனைக்கு தயாராகிறது.
  • நெய்க்காரப்பட்டியில் உற்பத்தியாகும் அச்சுவெல்லம், அங்குள்ள சந்தைகளிலேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
  • இதில் தமிழக-கேரள வியாபாரிகள் கலந்து கலந்து கொண்டு போட்டி போட்டு வெல்லத்தை வாங்கி செல்வர்.
  • தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது.
  • நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

 சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

K.Bhagyaraj

திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட பாக்கியராஜ் நேற்று காலை [27.06.2026] காலமானார். இது தமிழ்த்திரையுலகிற்கு மட்டும் அல்லாமல் இந்தியத் திரையுலகிற்கே பேரிழப்பாக இருந்தது. அவரைப் பற்றி சிறு கண்ணோட்டம்...

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயிலை சொந்த ஊராகக் கொண்டவர் பாக்கியராஜ். கலைத்துறையின் மேல் உள்ள ஈர்ப்பால் கல்லூரி காலத்தில் கோவையில் நண்பர்களுடன் நாடகம் நடத்தியவர். சினிமா கனவுகளுடன் தன்னம்பிக்கையோடு சென்னை வந்தார். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தில் வெகுளித்தனமான குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஒரு கை ஓசை படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். மனைவி கணவன் மீதான சந்தேகம் கொண்ட மவுன கீதங்கள் படத்தை இயக்கி மகத்தான வெற்றி அடையச் செய்தார். 1981 முதல் 1986 வரை பாக்கியராஜ் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள், சின்ன வீடு என வரிசையாக வெள்ளிவிழாப்படங்களைக் கொடுத்தார் பாக்கியராஜ்.

அத்தனை படங்களிலும் இன்னசன்ட் ஹீரோவாக நடித்து இருந்ததால் அவரது படங்களைக் காண பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது. இவரது புத்திசாலித்தனமான திரைக்கதை எழுதும் திறனைக் கண்டதால் எம்ஜிஆர் இவரைத் தனது கலையுலக வாரிசு என அறிவித்தார். அத்தனைப் படங்களும் அவரது இன்னசன்ட் காமெடிக்காகவே திரும்ப திரும்ப பார்வையாளர்களை திரையரங்கிற்கு வரவழைத்தன.

படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..

 படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..

  • தமிழ் சினிமாவில் முதன்முதலாக முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடித்து ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
  • தன்னுடைய 14 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
  • கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற இவரை அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது படையப்பா தான்.
  • படையப்பா. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு என்று தனியாக எதிரிகளே இருக்க மாட்டார்கள். திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய புள்ளியாக நீலாம்பரியே இருப்பார். திரைப்படத்தின் மொத்த கதையும் நீலாம்பரியை சுற்றியே பின்னப்பட்டு இருக்கும்.
  • திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வரை பழிவாங்கும் உணர்ச்சி சற்றும் குறையாத ஆக்ரோஷமான பெண்ணாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
  • அதுவரை சாதாரண நடிகையாக இருந்த இவரை மாபெரும் நடிகையாக அடையாளம் காட்டியது அவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தான்.
  • படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் என்று நடிகர் ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
  • 1999 இல் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் இன்று வரை மக்களால் அதிகமாக ரசித்துப் பார்க்கப்படக்கூடிய ஒரு எவர்கிரீன் திரைப்படமாக இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நிச்சயமாக இந்த நீலாம்பரி கேரக்டரை சொல்லலாம்.
  • அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர்.
  • இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.