இளமைப் பருவம் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.
இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
இல்லறம் எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இதற்கிடையே ஜானகி அம்மையாரை திரைப்படத்தில் கதாநாயகியாக சந்தித்தார். மூன்று படங்கள்தான் ஜானகியுடன் நடித்திருந்தாலும் காதல் பிறந்தது. எனவே ஜானகி தன் கணவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
ஜானகி அம்மையாருக்கு மகன் ஒருவனும் இருந்தான். இருந்தும் எம்.ஜி.ஆர். தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.
வளர்ப்பு குழந்தைகள் லதா ராஜேந்திரன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், ஜானகி சிவராமன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் ஆவார்கள். விஜயன் என்பர் வளர்ப்பு மகனாவார்.
கல்வி உதவி எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.
செல்லப் பிராணிகள் எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.
சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.
சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாக துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். திரைப்பட வாழ்க்கை
எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை 1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை எம்.ஜி.ஆர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் 1962-ல் நடந்த தி.மு.க கூட்டத்தில் இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.
1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விசயத்திலும் கோபப்படமாட்டார்.
மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விசயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.
அது ரொம்ப பெரிய விசயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.
வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விசயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபாலனுக்கும் உண்டு.
அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.
நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம். இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.
அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.
ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை கட்டி பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.
அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.
இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.
இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.
அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்,
பெயர்.................................:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்,
நாம் அறிந்த பெயர்......:(இராமச்சந்திரன்)MGR.
பிறப்பு.................................: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி (இலங்கை)
இறப்பு................................:டிசம்பர் 24, 1987,
மனைவிகள் .................: மூவர்: 1.தங்கமணி, 2. சதானந்தவதி, 3. வி. என். ஜானகி,
பிள்ளைகள்....................:கிடையாது,
தந்தை பெயர்.........................................................:திரு. கோபாலமேணன்
தாயார் பெயர்........................................................ திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர்................................................... திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர்.................................................கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு
கலை அனுபவம்...................................................7 வயது முதல்
நாடக அனுபவம்...................................................1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை................................................சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி
திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம்........................................................காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம்..........................................................ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் .....................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972
தமிழக முதல்வரானது,..........................1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்