Total Pageviews

Friday, March 28, 2025

ஒரு மனிதன் வாழ்வது முக்கியமல்ல..திருப்தியுடன் நிறைவாக வாழ்வது எப்படி!

 

இன்று எனது காரை சர்வீஸ் செய்ய கொடுத்து இருந்தேன்.திடிரென அவசரமாக ஊருக்கு கிளம்ப‌ வேண்டிய சூழல். ஆபிஸ் வேலை நீண்டு கொண்டே இருந்தது , வேலை முடிந்து திரும்பி பார்க்கையில் மணி இரவு 11.15..OLA Auto போட்டால் கேன்சல் செய்துகொண்டே இருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் வெளியே‌ வந்து ஆட்டோவிற்காக காத்திருந்த போது கோயம்பேட்டிற்கு ஒரு ஆட்டோகார புண்ணியவான் நுங்கம்பாக்கத்தில் இருந்து 500ரூ கேட்டார். யாரும் 400ரூபாய்க்கு குறைவாக வரவில்லை. சரி பார்க்கலாம் என்று நின்று கொண்டு இருந்தபோது மெதுவாக ஒரு ஆட்டோ வந்து என் அருகில் நின்றது .

ஒரு 70வயதுள்ள முதியவர் எங்கு போகணும் என்று கேட்க , நான் கோயம்பேடு என்று கூற...அவர் சரி தம்பி மீட்டர் போடறேன், இரவு நேரம்ங்கறதால 1- 1/2மீட்டர் என்று கூற..நான் ஸ்தம்பித்து நின்றேன். சென்னையில் முதல் முதலாக ஒரு ஆட்டோ ட்ரைவரே இப்படி கேட்டது எனக்கு இதுவே முதல் முறை.

அவர் யூனிபார்ம்ல இல்லாததால் என்ன தாத்தா, எங்க யூனிபார்ம்...இந்த நேரத்துல இந்த வயசுல வண்டி ஓட்டுறீங்க என்று கேட்க..

தம்பி வரும்போது ஏதோ ஞாபகமறதில வீட்ல இருந்து 10 மணிக்கு கிளம்பும்போது போட மறந்துட்டேன் என்று கூற எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பிறகு சொன்னார். தம்பி 46 வருஷமா ஆட்டோ ஓட்டறேன். சென்னைல மூல முடுக்கு வரை தெரியும் தைரியமாக வாங்க என்று கூற நான் சிரித்தேன்.

பிறகு என்னத்த தாத்தா படுத்து ஓய்வு எடுத்து தூங்க வேண்டிய வயசுல இப்படி இன்னும் உழைக்கிறீங்கனு நான் கேட்க.

எனக்கு ஒரே புள்ள தம்பி.. ஆட்டோ ஓட்டி தான் படிக்க வெச்சேன். நல்லா படிச்சான். நல்ல வேலை கிடைச்சது ஒரு கல்யாணத்த பண்ணிட்டா நம்ம கடமை முடிஞ்சது, பிறகு நம்பள பாத்துப்பான்னு நினைச்சேன். கல்யாணம் ஆகி 18 வருஷம் கழிச்சு பொறந்த புள்ள அவன். இப்ப வரைக்கும் அவ்வளவு உசுரு அவன் மேல எனக்கு. அவனுக்கு கல்யாணம் ஆன பொறவு எதுவும் சரியில்ல. சரி நீ நிம்மதியா இருடான்னு தனியாக போகசொல்லிட்டேன்.. விருப்பமே இல்லாமல்தான் போனான். அப்பப்ப வந்து எங்கள பார்ப்பான்.

அதுக்குள்ள என் மனைவிக்கும் முடியல. பகல் பூரா அவங்க கூட இருந்து அவங்கள பார்த்துப்பேன். பகல்ல அவ்வளவு வெக்கயா இருக்கும். இந்த டிராபிக்ல என்னால வண்டி ஓட்ட முடியாது. கண்ணு கொஞ்சம் நல்லா இருக்கு. அதனால் ராத்திரி 9 மணில இருந்து காலைல 4 மணி வரைக்கும் ஆட்டோ ஓட்டிட்டு வீட்டுக்கு போய்டுவேன். சொந்த ஆட்டோ தம்பி இது ..என் முழு 45 வருட உழைப்பு .ஒரு நாளைக்கு 600ரூபாய் நிக்கும். எனக்கும் என் பொண்டாட்டிக்கும் அதுவே போதும்.இத்தன வயசுக்கு மேல எனக்கு எதுக்கு தம்பி அளவுக்கு மீறி பணம்‌வேணும். ஒரு நாள் 600ரூ வருதா சரி சூப்பர். இல்ல ஒரு நாள் ரூ300 தான் வருதா. ஆண்டவன் இன்னைக்கு இவ்ளோதான் படி அளந்திருக்கான். நாளைக்குபத்தி இன்னைக்கே எதுக்கு யோசிக்கணும் என பேசிக்கொண்டே சென்றார்.

ஏன் உங்க பையன் உங்களுக்கு எதுவும் ? என நான் கேட்க..

அவன் மவராசன் தம்பி..!! எப்பவுமே என் ராசா...!! இப்பவரைக்கும் அவன் கொடுத்தாலும் கொடுக்கலனாலும் தங்கமான புள்ள அவன் என்று மகனை விட்டு கொடுக்காமல் பேசினார்..!!

நான் நிஜமாகவே பிரம்மித்தேன். எப்படி தாத்தா உங்களால் இப்படி இருக்கமுடியுதுன்னு நான் கேட்க.

தவமா நான் கோவில் கோவிலாக ஏறி இறங்கி பெத்த புள்ள அது. அவன நான் முதன் முதலா கையில் வாங்கும் போது..ஆண்டவா ..!! இந்த கொழந்தைக்கு எந்த கஷ்டமும் வரமால் சந்தோஷமாக இருக்கணும். அவனுக்கு வர்ற கஷ்டத்தையெல்லாம் எனக்கு கொடுன்னுதான் வேண்டிகிட்டேன். நான் மட்டும் இல்ல ...எல்லா தாய் தகப்பனோட வேண்டுதலும் அதுவாக மட்டும் தான் இருக்கும்.

ஆனா இந்த பாழும் மனசு இருக்கே அவன் வளர வளர நாம செஞ்சத அவன் திருப்பி நமக்கு செய்யணும்னு எதிர்பார்க்கும்...அங்க தான் பிரச்சனையே ..எப்பவுமே அவன நான் பார்க்கும்‌போது முதல் முதலா அவன கையில் வாங்கியதும் அந்த வேண்டுதலும் நியாபகம் வரும். இப்ப வரைக்கும் ஒரு துளி வருத்தம் கூட எனக்கு அவன் கிட்ட இல்ல .எனக்கு எப்பவுமே என் ராசா அவன் என்று கூற விக்கித்து நின்றேன்.

வாழ்க்கையின் பெரிய பாடத்தை மீண்டும் அவரிடம் இன்று படித்தேன். பற்றற்ற தன்மை என்று பலர் சொல்லி செயல்படுத்த முடியாத மிகப்பெரிய விடயத்தை எதையும் படிக்காத ஒரு எளிய மனிதர் எனக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.

கோயம்பேடு அதற்குள் வந்துவிட மீட்டரில் 130 ரூபாய் காட்டியது. நான் இறங்கும் போது 1-1/2மீட்டர் காசாக ரூ200 கொடுக்க..தம்பி இந்தாங்க மீதி 5 ரூபாயை கொடுத்தார். நான் நெகிழ்ந்து விட்டேன்.

உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளட்டுமா என்று நான் கேட்க..தம்பி என் வாழ்க்கைல இப்படி கேட்ட முதல் ஆள் நீங்கதான. இப்ப ஆட்டோவில் வர்றவங்க எல்லாம் யாரும் வாயை திறந்து எங்ககிட்ட பேசறது கூட இல்ல. மோபைல்போன நோண்டிகிட்டே வருவாங்க. சக மனுஷனா கூட எங்கள பார்க்கமாட்டாங்க. நீங்க ரொம்ப நல்லா பேசிக்கிட்டு வந்தீங்க. ஆண்டவன் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும் என நெகிழ்ந்து கூறினார்

கடைசியாக தாத்தா உங்க பேரு என்ன என்று நான் கேட்க.. என் பேரு ராசேந்திரன் ❤️❤️என் மவன் பேரு ராசராசன் ❤️❤️என்று சொல்லும் போது அவ்வளவு பெருமிதம் , அவ்வளவு திருப்தி அவருக்கு.

ஒரு மனிதன் வாழ்வது முக்கியமல்ல..திருப்தியுடன் நிறைவாக எப்படி எதுவுமே இல்லையென்றாலும் கூட வாழ வேண்டும் என்ற வாழ்வின் பேருண்மையை அந்த எளிய மனிதர் சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றார்.

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்'' !

 

துபாயில் பணியாற்றி வந்த நண்பர் ஒருவர், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தாராம்

அவர் ஊரில் அந்த ஹோட்டல் ரொம்ப பாப்புலர்.

அந்த ஹோட்டலுக்கு டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.

அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன.

சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன.

அதனை பார்த்த அவர்,

அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.

அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள்.

சிறுவனிடம் என்ன வேண்டுமென்று நண்பர் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன்.

உடனே அது போல மேலும் இரு பிளேட்டை நண்பர் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் சிறுமி அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து உணவை மிகவும் ருசித்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் நண்பரை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.

பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.

அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதுவரை நண்பர் அந்த குழந்தைகள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை...

பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார்.

ஹோட்டல் ஓனர் பில்லுக்கு பதிலாக ஒரு கவரை கொடுத்து அனுப்பினார்.

அதனை பார்த்ததும் அவரது கண்கள் குளமாகின.

பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்...

''மனிதாபிமானத்துக்கு பில் போட

எங்களிடம் இயந்திரம் இல்லை.

உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''

என்று இருந்ததாம்.

எங்கேயோ படித்தது !

அன்பு வாழட்டும் இந்த உலகில்!

"கமலஹாசன்" இரண்டும் கெட்டான் வயதில் "கமல்" இருக்கும் போது நடந்தது இது !

                                                                                                                                                                    யார் இந்தப் பையன் ?"

என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர்.

"இவன் பெயர் கமலஹாசன்" என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி கணேசன். "களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானவன். நடிப்புத் திறமை உள்ளவன். இவனுக்கு நீங்கள் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதற்காகத்தான் உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்."

இரண்டும் கெட்டான் வயதில் கமல் இருக்கும் போது நடந்தது இது.

ஸ்ரீதர் தன் அருகில் நின்ற கமலஹாசனை மேலும் கீழுமாக பார்த்தார்.

இளம் மீசை. ஏக்கமான பார்வையோடு ஸ்ரீதர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தார் கமலஹாசன். அவரை சிறிது நேரம் உற்று நோக்கிய பின் ஜெமினி கணேசனை நோக்கி திரும்பி இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

"அப்புறம் பார்க்கலாமே, இப்போது இவனுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது."

ஸ்ரீதர் இப்படி சொன்னவுடன் கமலஹாசனின் முகம் பரிதாபமாக மாறியது. கண்கள் இரண்டிலும் மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அருகில் நின்ற ஜெமினி கணேசன் கமலின் தோள்களில் தட்டிக் கொடுத்தார். "சரி. வாப்பா போகலாம்."

கமல் தழுதழுத்த குரலில் ஜெமினியிடம் சொன்னார் :

"நான் வீட்டுக்கு போகிறேன். அப்படியே என் சொந்த ஊருக்கும் போய் விடுகிறேன்."

புன்னகைத்தார் ஜெமினி. "ஏன் ? அதற்குள் நம்பிக்கை இழந்து விட்டாயா?"

கமல் நிமிர்ந்து ஜெமினியின் முகத்தை பார்த்தார். "உண்மையை சொல்லுங்கள். எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னமும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்களா ?"

"ஏன் இப்படிக் கேட்கிறாய் ?"

"இல்லை. எனக்கு பிறகு நடிக்க வந்த மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் எல்லோரும் சிவாஜியோடும் எம்ஜிஆரோடும் சேர்ந்து நடித்து, இப்போது தனியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒருவன் மட்டும் இப்படி வாய்ப்புக்கள் கிடைக்காமல் ஏதாவது ஒரு படத்தில் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் நடிப்பதற்கு ஏற்ற திறமை என்னிடம் இல்லை என்றுதானே அர்த்தம் ?"

கமல் கேட்டது நியாயமான கேள்விதான். ஏனென்றால் 1972 இல் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குறத்தி மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு முக்கியமான வேடம்.

மாஸ்டர் ஸ்ரீதர் நடிக்கும் அதே காட்சியில் ஒரு ஓரத்தில் நின்று 'ராஜா வாழ்க' என்று கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் சாதாரண கேரக்டர் கமலஹாசனுக்கு.

அந்த விரக்தியில்தான் ஜெமினியை நோக்கி அப்படி ஒரு கேள்வியை கேட்டார் கமல்.

ஆனால் கமலின் இந்த கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாத ஜெமினி,

கமலை அழைத்துக் கொண்டு, காரை ஓட்டிக் கொண்டு நேராக போன இடம் இயக்குநர் கே பாலச்சந்தர் வீடு.

ஸ்ரீதரிடம் சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே பாலசந்தரிடமும் சொன்னார் ஜெமினி.

பாலச்சந்தர் கமலஹாசன் முகத்தை உற்றுப் பார்த்தார். படபடவென துடிக்கும் இதயத்தோடு பாலச்சந்தரின் பதிலுக்காக காத்திருந்தார் கமல்.

பதில் கிடைத்தது.

வாய்ப்பும் கிடைத்தது.

அரங்கேற்றம் படத்தில் கமலஹாசனுக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தார் பாலச்சந்தர்.

300 ரூபாய் சம்பளம்.

ஜெமினி கணேசன் கமலஹாசனை தன் அருகில் அழைத்தார். "300 ரூபாய்தானே தருகிறார்கள் என்று உன் முழு திறமையையும் காட்டாமல் விட்டு விடாதே. நீ யார் என்பதை நிரூபித்துக் காட்ட இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒருபோதும் உனக்கு கிடைக்காது. நிச்சயம் நீ மிகப்பெரும் நடிகனாக வருவாய். மிகப் பெரும் புகழ் பெறுவாய். சரி. நான் போய் வருகிறேன்."

இப்படிச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார் ஜெமினி.

அரங்கேற்றம் வெளிவந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

தொடர்ந்து தம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு வெகு விரைவிலேயே சினிமா உலகத்தின் அத்தனை சிகரங்களையும் தொட்டார்.

அனைத்து சிம்மாசனங்களிலும் அமர்ந்தார் கமல்.

அந்த நேரத்தில்தான் ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஸ்டூடியோவில் தற்செயலாக ஜெமினி கணேசனை பார்த்தார்.

அருகில் ஓடினார். ஜெமினி கணேசன் சிரித்தபடி கேட்டார்: "என்னப்பா கமல், எப்படி இருக்கிறாய் ?"

கமல் பதில் சொல்வதற்கு முன் சின்னஞ் சிறு புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டார் ஜெமினி. "ஆமாம். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் ?"

யாரை குறிப்பிட்டு கேட்கிறார் என தெரியாமல் கமல் குழம்பிப் போய் நிற்க, சிரித்தபடி கேட்டார் ஜெமினி. "கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சொன்னாயே. உன்னோடு அறிமுகமான மாஸ்டர் சேகர், பிரபாகர், ஸ்ரீதர் எல்லோரும் ஓஹோ என்று ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.

இப்பொழுது கொஞ்சம் திரும்பி பார். நீ குறிப்பிட்ட அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்."

ஜெமினி கணேசன் சொன்னது உண்மைதான். கமலைத் தவிர அவரோடு அறிமுகமான வேறு எந்த குழந்தை நட்சத்திரமும், இப்போது திரை உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லவே இல்லை.

கமல் கண்கள் கலங்க ஜெமினி கணேசன் கைகளைப் பற்றிக் கொண்டார்.

கமலுக்கு ஜெமினி கை கொடுத்து உதவியதைப் போல,

நமக்கு இக்கட்டான நேரங்கள் ஏற்படும்போது, இந்த பிரபஞ்சம் யாரோ ஒருவரை எங்கிருந்தோ அனுப்பி வைத்து அற்புதங்களை நிகழ்த்துகிறது.

கடமையைச் செய்து கொண்டு பொறுமையோடு காத்திருந்தால்,

வெற்றி நிச்சயம் !

ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு !

 கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..

ரஜினிகாந்த - கமலஹாசன் ஓர் ஒப்பீடு !

 கமல் ஹாயாக ஹோட்டல் அறையில் படுத்து தூங்கிய போது, அந்த அறை வாசலில் தரையில் படுத்து தூங்கியவர் ரஜினி. கமலுக்கு ஷுட்டிங் இடத்தில் இளநீர் கொடுத்த போது ரஜினிக்கும் காந்திமதிக்கும் சிறிய மசால் வடை கொடுத்தார்கள்.

ரஜினி எதிர்பார்த்தார், கமல் பெரிய நடிக்கிராக வருவார் என்று. ஆனால், கமல் ஒரு போதும் நினைத்து பார்த்திருக்க வில்லை, தன்னை 2 வது இடத்துக்கு தள்ளி ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவார் என்று.

கமல் படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த ரஜினி கமலுக்கே போட்டியாக வந்து வீழ்த்தியவர். ஒரு கட்டத்தில் ரஜினி 5 மொழிகளில் முன்னணி நடிகராக இருந்தார். கமல் 4 மொழிகளில் முண்ணனி நடிகராக இருந்தார். கமல் போகும் இடம் எல்லாம் ரஜினி பின்னாலே போய் அவரை முந்துவார். இதெல்லாம் ரஜினி ஸ்டைல். கமல் ஆஸ்கர் நாயகன், ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுனு சொல்லுவாங்க. 16 வயதினிலே சாப்பானியாக யார் வேணா நடிக்கலாம்., ஆனால், பரட்டையாக ரஜினி தவிர மற்றவர் நடித்தால் எடுபடாது.மூன்று முடிச்சு படத்திலும் கமலை ஓரம் கட்டி நடிப்பில் ரஜினி அசத்தியிருப்பார். அதே போல் ஹிந்தியில் கிராப்தர் படம் பார்த்தால் தெரியும். ஹிரோ கமலை, அமிதாப்பும் ரஜினியும் டம்மியாக்கி இருப்பார்கள்.

நாயகன், தேவர் மகன், இந்தியன் கமலை ரஜினிக்கும் மேல் கொண்டு சென்றது. இந்திய சினிமாவின் ஒப்பற்ற திரைக்கதை கமல் எழுதிய தேவர் மகன் தான். இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் ரஜினியின் நடிப்பை மற்ற நடிகர்களால் கொண்டு வரவே முடியாது. 10 வருடங்களாக கமல் மார்க்கட்டில் பின் தங்கி விட்டார். ரஜினி ஹிந்தி பாடத்தை காப்பி அடிப்பார். கமல் இங்கிலிஷ் படத்தை காப்பி அடிப்பார்.

கமல் பல்துறை வித்தகர். ரஜினி மார்க்கட்டில் நம்பர் 1. ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர மோடியே பல முறை முயன்றார் . மூப்பனாரும், பா. சிதம்பரமும் ரஜினியை காங்கிரசில் சேர்க்க முயற்சி செய்தனர். கமலை எந்த கட்சியும் கூப்பிட வில்லை.. பாஜகவும் தன் கட்சியில் கமலை இணைக்க ஆர்வம் காட்டவில்லை.

திறமை அடிப்படையில் பார்த்தால் கமல் 150%, ரஜினி 60% தான். ஆனால், ரஜினிக்கு வெற்றி பெரும் வித்தை தெரியும். கமலுக்கு அந்த வித்தை தெரியாது. தொழில் நுட்ப ரீதியில் தமிழ் சினிமாவை முன்னேற்றியதில் கமல் பங்கு அதிகம். சொல்லப் போனால் இன்றைய பல நுட்பங்களை தமிழில் முதலில் பயன் படுத்தியதே கமல் தான். ரஜினிக்கு எந்த பங்கும் இல்லை.

இறுதியாக பார்த்தால் ரஜினி - கமல் இல்லை என்றால் தமிழ் சினிமா வளர்ந்து இருக்காது. தமிழை இந்தியா முழுக்க பரப்பியவர்கள் இவர்களே. இந்தியா முழுவதும் அறிந்த இரு தமிழ் நடிகர்களும் இவர்களே. அதிலும் அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்கள். ரஜினி - கமல் இடத்தினை விஜய், அஜீத்தினால் பிடிக்கவே முடியாது..

ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக்கண்டு பிரமித்துப்போகிறார்!

 

நிறைய பேர் கேட்கிறார்கள்...

கமல் ஏன் இவருக்கு உதவவில்லை?...ரஜினி ஏன் அவருக்கு உதவ வில்லை?

உதவி செய்பவர்கள் ஒரு ரகம். உதவி ஏற்பவர்கள் ஒரு ரகம்.

'துடிக்கும் கரங்கள்' என்றொரு ரஜினி படம். இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம். 1982 டிசம்பர் 12ல் அதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது.

தயாரிப்பாளரான இயக்குனர் ஸ்ரீதருக்கு ரஜினியின் பிறந்த நாள் வருவது தெரிந்ததும் தடபுடல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டார். ரஜினி "வேண்டாம் சார். சிம்பிளா உங்க வாழ்த்து மட்டும் போதும்" எனச்சொல்லியும் ஸ்ரீதர் கேட்கவில்லை. பிறந்தநாள் ஆனதால் மனைவி லதாவும் குழந்தைகளோடு வந்துவிட்டார் ஊட்டிக்கு. ஸ்ரீதர் யூனிட்டில் உள்ள ஒரு ஆள் விடாமல் அழைத்து ரஜினி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். ரஜினியே ஸ்ரீதரின் ஏற்பாடுகளை பார்த்து அசந்து விட்டார். லதாரஜினிக்கும் சர்ப்ரைஸ்..

பல வருடங்களுக்குப்பிறகு ரஜினி சில நலிந்து போன தயாரிப்பாளர்களுக்காக 'அருணாச்சலம்' எடுக்கிறார். அதில் இயக்குனர் ஸ்ரீதரையும் சேர்க்க அவர் வீட்டிற்கே செல்கிறார் ரஜினி.

விஷயத்தை சொன்னதும் ஸ்ரீதர் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். "சார்...இந்தப்படத்தில் எட்டு பேரை சேர்த்திருக்கிறேன். அதில் உங்களையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ள ஆசை..."

ரஜினி இப்படிச்சொல்லக் காரணம் அப்போது ஸ்ரீதர் லெதர் தொழிற்சாலை தொழில் நடத்தி பெரும் நஷ்டத்தில் இருப்பது ரஜினிக்கு தெரிந்ததால்.

"வேண்டாம் ரஜினி. நான் அந்தளவுக்கு கஷ்டப்படவில்லை. இதை வேறு யாருக்காவது கொடுங்க...நன்றி..." என ஸ்ரீதர் ரஜினியிடம் மறுத்து விடுகிறார். அமைதியாக இருந்த ரஜினி "ஓகே சார்...கிளம்புகிறேன்..." எனக்கிளம்ப...

"ரஜினி...ஒரு நிமிஷம்....எனக்கு உதவி செய்யணும்னு நீங்க நினைச்சா இந்தப்படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை எனக்குக்கொடுங்க...அதுக்கு சம்பளம் கொடுங்க...வாங்கிக்கொள்கிறேன்..இனாமா வேண்டாம்..."

கேட்ட ரஜினி ஸ்ரீதரின் எண்ண ஓட்டங்களைக்கண்டு பிரமித்துப்போகிறார்.

உண்மையில் ஸ்ரீதர் கஷ்டத்தில் இல்லையென்றால் வசனம் எழுதும் வாய்ப்பையும் சம்பளத்தையும் கேட்டிருக்க மாட்டார். அவருக்கு தேவை இருந்தும் மறுத்து விட்டார். Great man...

இப்படித்தான் உதவுவோர் ஒரு ரகமென்றால் உதவியை ஏற்பவர் ஒரு ரகம். எல்லோரும் எல்லோரிடமும் கையேந்தி விடுவதில்லை. அதனால் கையேந்துபவர் கேவலமானவர்கள் என்பதுமில்லை. நமக்கு தெரியாமல் நாம் கமல், ரஜினி ஏன் உதவவில்லை என பழிக்க வேண்டும்?.

நாம் பார்க்கும் வானத்துக்கு அப்புறமும் நாம் பார்க்காத ஒரு வானம் இருக்கத்தான் செய்கிறது.

Thursday, March 20, 2025

பசங்க திரைப்படம் ஜெயப்பிரகாஷ்!

 பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து கலக்கியவர் ஜெயப்பிரகாஷ். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகும். ஆரம்பத்தில் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீனுடன் சேர்ந்து பொற்காலம், கோபாலா கோபாலா என எண்ணற்ற படங்களை இணைந்து தயாரித்தவர் பின்பு சிஜே பிலிம்ஸ் என்ற பெயரில் தற்போதைய ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுடன் இணைந்து தவசி உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.இவர் முதன் முதலில் நடித்த படம் தொண்டன் என்ற திரைப்படம். இருப்பினும் இவரை எல்லோருக்கும் அடையாளப்படுத்தியது பசங்க திரைப்படம்தான் அதுதான் இவரை அடையாளப்படுத்தியது.