Total Pageviews

Friday, March 28, 2025

ரஜினிகாந்த - கமலஹாசன் ஓர் ஒப்பீடு !

 கமல் ஹாயாக ஹோட்டல் அறையில் படுத்து தூங்கிய போது, அந்த அறை வாசலில் தரையில் படுத்து தூங்கியவர் ரஜினி. கமலுக்கு ஷுட்டிங் இடத்தில் இளநீர் கொடுத்த போது ரஜினிக்கும் காந்திமதிக்கும் சிறிய மசால் வடை கொடுத்தார்கள்.

ரஜினி எதிர்பார்த்தார், கமல் பெரிய நடிக்கிராக வருவார் என்று. ஆனால், கமல் ஒரு போதும் நினைத்து பார்த்திருக்க வில்லை, தன்னை 2 வது இடத்துக்கு தள்ளி ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவார் என்று.

கமல் படத்தில் துக்கடா கேரக்டரில் நடித்த ரஜினி கமலுக்கே போட்டியாக வந்து வீழ்த்தியவர். ஒரு கட்டத்தில் ரஜினி 5 மொழிகளில் முன்னணி நடிகராக இருந்தார். கமல் 4 மொழிகளில் முண்ணனி நடிகராக இருந்தார். கமல் போகும் இடம் எல்லாம் ரஜினி பின்னாலே போய் அவரை முந்துவார். இதெல்லாம் ரஜினி ஸ்டைல். கமல் ஆஸ்கர் நாயகன், ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுனு சொல்லுவாங்க. 16 வயதினிலே சாப்பானியாக யார் வேணா நடிக்கலாம்., ஆனால், பரட்டையாக ரஜினி தவிர மற்றவர் நடித்தால் எடுபடாது.மூன்று முடிச்சு படத்திலும் கமலை ஓரம் கட்டி நடிப்பில் ரஜினி அசத்தியிருப்பார். அதே போல் ஹிந்தியில் கிராப்தர் படம் பார்த்தால் தெரியும். ஹிரோ கமலை, அமிதாப்பும் ரஜினியும் டம்மியாக்கி இருப்பார்கள்.

நாயகன், தேவர் மகன், இந்தியன் கமலை ரஜினிக்கும் மேல் கொண்டு சென்றது. இந்திய சினிமாவின் ஒப்பற்ற திரைக்கதை கமல் எழுதிய தேவர் மகன் தான். இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் ரஜினியின் நடிப்பை மற்ற நடிகர்களால் கொண்டு வரவே முடியாது. 10 வருடங்களாக கமல் மார்க்கட்டில் பின் தங்கி விட்டார். ரஜினி ஹிந்தி பாடத்தை காப்பி அடிப்பார். கமல் இங்கிலிஷ் படத்தை காப்பி அடிப்பார்.

கமல் பல்துறை வித்தகர். ரஜினி மார்க்கட்டில் நம்பர் 1. ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர மோடியே பல முறை முயன்றார் . மூப்பனாரும், பா. சிதம்பரமும் ரஜினியை காங்கிரசில் சேர்க்க முயற்சி செய்தனர். கமலை எந்த கட்சியும் கூப்பிட வில்லை.. பாஜகவும் தன் கட்சியில் கமலை இணைக்க ஆர்வம் காட்டவில்லை.

திறமை அடிப்படையில் பார்த்தால் கமல் 150%, ரஜினி 60% தான். ஆனால், ரஜினிக்கு வெற்றி பெரும் வித்தை தெரியும். கமலுக்கு அந்த வித்தை தெரியாது. தொழில் நுட்ப ரீதியில் தமிழ் சினிமாவை முன்னேற்றியதில் கமல் பங்கு அதிகம். சொல்லப் போனால் இன்றைய பல நுட்பங்களை தமிழில் முதலில் பயன் படுத்தியதே கமல் தான். ரஜினிக்கு எந்த பங்கும் இல்லை.

இறுதியாக பார்த்தால் ரஜினி - கமல் இல்லை என்றால் தமிழ் சினிமா வளர்ந்து இருக்காது. தமிழை இந்தியா முழுக்க பரப்பியவர்கள் இவர்களே. இந்தியா முழுவதும் அறிந்த இரு தமிழ் நடிகர்களும் இவர்களே. அதிலும் அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்கள். ரஜினி - கமல் இடத்தினை விஜய், அஜீத்தினால் பிடிக்கவே முடியாது..

No comments:

Post a Comment