வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !
பதினாறு வயதினிலேயே சூட்டிங் ...
அப்போது, 4 வகையான உணவு வருமாம்.
முதல் தரம் கமலுக்கானது,
இரண்டாவது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கானது,
மூன்றாவது தரம் ஸ்ரீதேவி உடையது.
மற்றவர்களுக்கு 4வது தர சாப்பாடு. தரம் என்பது, உணவு வகைகளை பொருத்தது.
ரஜினி தினமும் சூட்டிங் வருவாராம்; தொடர்ந்து 10 நாட்கள் அவருக்கு காட்சியே தரவில்லை.
உண்மையில் அப்போது ரஜினியின் நிலையும் அது தான்
கமல், ஸ்ரீதேவிக்கு அப்போதெல்லாம்
இலட்சங்களில் சம்பளம்,
ரஜினிக்கு அந்த படத்தில் மூன்று ஆயிரம் சம்பளம்
மற்றவர்களை போல அவரை அழைத்து வர அங்கு காரெல்லாம் வராது. அவராக எதையாவது பிடித்து சூட்டிங் ஸ்பாட் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் கடந்து மதியம் ஒருநாள் உணவுக்காக புரொடக்ஷனில் அமர்ந்துள்ளார்.
அவருடன் மேலும் பல துணை நடிகர்களும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அப்போது அசைவ உணவு கொண்டு வந்ததை அறிந்த ரஜினி, பரிமாறுபவர்களிடம், ‛முட்டை இருந்தா தாங்க...’ என்று கேட்டுள்ளார்.
‛இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது...’ என கிண்டலாக பதிலளித்து, மறுத்து கடந்திருக்கிறார் அங்கு பரிமாறிய நபர். ரஜினி கேட்ட ஒரு முட்டையை அவர் தர மறுத்திருக்கிறார்.
காலங்கள் கடந்தது. ரஜினி...
பெரிய ஹீரோ என்பதை கடந்து,
சூப்பர் ஸ்டாராக நிற்கிறார். பிறகு ஒருபடத்தில் சூட்டிங்கில் 16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அதே பரிமாறிய நபர், முதல் தர உணவை ரஜினிக்கு பரிமாறியுள்ளார். அந்த நபரை அடையாளம் கண்ட ரஜினி, ‛முட்டை இருக்கிறதா...’ என்று கேட்டுள்ளார். அந்த நபரோ... ‛இதோ... இப்போ கொண்டு வர்றேன்...’ என ஓட முயற்சித்துள்ளார்.
உடனே அவரை அழைத்த ரஜினி, ‛கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா...’ என கிண்டலடிக்க, எதிரில் இருந்த நபருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. ரஜினி பழசை மறக்கவும் இல்லை;
தன்னை ஒதுக்கப்பட்ட இடத்தில் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி யால்
பதிலடி கொடுத்தவர் ரஜினி
இன்றும் ஷுட்டிங் கில் சகமனிதனாக
அனைவருடனும் அமர்ந்து சாப்பிடுவது,
எல்லோரும் சாப்பிட்டார்களா என கேட்பார்
என்று அவருடன் பணியாற்றிவர்கள் சொல்ல கேட்டேன்
தான் கடந்த வந்த பாதை எதையும் மறக்காததால் தான் அவர் இன்றைக்கு இவ்வளவு முன்னேறவும் முடிந்தது.
யாரையும் எப்போதும் இவன் இப்படி தான் என்று
கணிக்க கூடாது என்பது நான் வாழ்க்கையில் கற்ற பாடம் என்று சொல்கிறார்.
உண்மை அது தானே!
முகநூல் பதிவு-பிரசாந்த்!