என்னமோ போடா மாதவா’! உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...
- அண்ணா நகர் முதல் தெரு 1988 - ல் நடிகர் சத்யராஜ், பிரபு, அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான காலத்தால் அழியாததொரு தமிழ் திரைப்படம்.
- இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கத்தில், சந்திரபோஸ் இசையமைப்பில் வெளியான இப்படம், மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற 'காந்திநகர் 2வது தெரு' படத்தின் ரீமேக்.
கதைக்களம்:
- வேலை கிடைக்காமல் சிரமப்படும் சிவராமன் (சத்யராஜ்), தன் நண்பன் மாதவனைத் (ஜனகராஜ்) தேடி சென்னைக்கு வருகிறான்.
- ‘தன் வீட்டில் அவன் நிரந்தரமாகத் தங்கி விடுவானோ’ என்று அச்சப்படும் மாதவன், நண்பனை வெளியில் கிளப்புவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்.
- கடைசியில் தன் அலுவலகம் அமைந்திருக்கும் காலனியில் ‘காவலாளி’ வேலை வாங்கித் தருகிறான்.
- ‘கூர்க்கா’வாக மாறி ஒருவழியாக வேலையில் நிலைபெறும் சிவராமனுக்கு ஓர் அதிர்ச்சி. அவனுடைய முன்னாள் காதலியான லதா (ராதா), அங்குக் குடிவருகிறாள்.
- ஒரு பிரச்னையால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். இவனைத் தெரிந்தது போலவே லதா காட்டிக் கொள்ளாததால் சிவராமன் மனம் உடைந்து போகிறான்.
- அவனுடைய வேலையில் வேறு பிரச்னைகளும் சேர்கின்றன. மாறுவேடம் கலைகிறது. எனவே அந்த இடத்திலிருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்கிறான்.
- இறுதியில் லதாவும் சிவராமனும் சேர்ந்தார்களா என்பதே திரைக்கதை.
- மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு,என்ன கதை சொல்ல சொன்னா என பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
- இதில் சத்யராஜ் மற்றும் ஜனகராஜ் ஆகியோரின் கூட்டணி மிகவும் பேசப்பட்டது.
- “ஏண்டா மாதவா... உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...” என்று தன்னைத்தானே தற்புகழ்ச்சியுடன் ஜனகராஜ் பேசிக் கொள்ளும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
- 1988 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியான இப்படம், திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் (சூப்பர்ஹிட்) பெற்றது.
No comments:
Post a Comment