- இயக்குனர் துரை இயக்கத்தில் 1978 - ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரம் ஜென்மங்கள்'
- விஜயகுமார், லதா, மனோரமா, வி.கே.ராமசாமி, பத்மப்ரியா, ரஜினிகாந்த் என பலர் நடித்துள்ளனர்.
- இது 1976-ல் வெளியான 'யக்ஷகானம்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்.
திரைக்கதை
- காதலியின் ஆவி மனைவியின் உடலுக்குள் புகுந்து பழி வாங்குவதும், காதலனை அடையத் துடிப்பதுமே கதைக்களம்.
வெற்றி
- இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்பகால வண்ணப் படங்களில் ஒன்று. இதில் அவரது ஸ்டைலான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது
- 'ஆயிரம் ஜென்மங்கள்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம்.
- திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி இத்திரைப்படம் சாதனை படைத்தது.
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் எஸ். ஜானகி பாடிய "வெண்மேகமே..."மற்றும் ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம் பாடிய "கண்ணன் முகம் காண போன்ற பாடல்கள் வானொலிகளில் நேயர் விருப்பப் பாடல்களாக ஒலித்து படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தன
- இப்படத்தின் கதையைத் தழுவி, சில மாற்றங்களுடன் நகைச்சுவையைக் கலந்து 2014 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி. இயக்கிய 'அரண்மனை' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment