Total Pageviews

Wednesday, September 2, 2026

1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா!

 Startup Iceland - Building a vibrant, sustainable and antifragile entrepreneurial ecosystem in Iceland - My Grandfather – Padma Shree M.K.Radha

எம்.கே.ராதா ’சதி லீலாவதி’யில் கதாநாயகன். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1936ல் ரொம்ப சின்ன கதாபாத்திரம்.

சதி லீலாவதி கதாநாயகியையே தான் எம்.கே.ராதா திருமணம் செய்து கொண்டார். எம்.கே.ராதாவின் அப்பா கந்தசாமி முதலியார் தான் சதி லீலாவதி தயாரிப்பாளர், இயக்குனர்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, தங்கவேலு ஆகியோரும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.

எம்.கே.ராதா கதாநாயகனாய் நடித்த ’சந்திரலேகா’(1948) மிகுந்த பொருட்செலவில் ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ரஞ்சன் வில்லன்.

அபூர்வ சகோதரர்கள் 1949ல் வந்தது. எம்.கே.ராதாவுக்கு இரட்டை வேடம்.

1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா.

சாத்வீகமான நடிகர். கோபத்தைக் கூட அடக்கமாக வெளிப்படுத்திய நடிகர்.

பின்னால் சில படங்களில் கதாநாயகர்களுக்கு அப்பா ரோல் செய்தார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்.கே. ராதாவை பார்க்கப் போயிருந்த எம்.ஆர்.ராதா சொன்னார்: ”அடப் பாவி! எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிற நான் நல்லா இருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நீ நோயாளியாகி விட்டாயே!”

எம்.ஜி.ஆருக்கு எம்.கே.ராதாவின் மீது மிகுந்த மரியாதை.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது ஒரு நாள் கோட்டைக்கு போகும் போது திடீரென்று எம்.கே.ராதா வீட்டிற்கு காரை செலுத்தச் சொல்கிறார்.

”அண்ணே! எப்படி இருக்கீங்க” எம்.ஜி.ஆர் ஆரத்தழுவிக்கொள்கிறார்.

முதியவர் ராதா மிகவும் நெகிழ்ந்து போகிறார்.

கிளம்பத் தயாராகும் எம்.ஜி.ஆரைப் பார்த்து “ தம்பி! ராமு! எங்க வீட்டுல சாப்பிட்டு விட்டுப் போகலாமே!”

எம்.ஜி.ஆர் தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறார்:

“ உங்க வீட்டு சாப்பாடு இன்னும் என் வயித்துல இருக்குண்ணே!”

”ராமு..”எம்.கே.ராதா உடைந்து போய் விம்முகிறார்

அந்த அளவுக்கு எம் ஜி ஆர் அவர்களின் மேல் பாசம் வைத்து இருந்தார்.

இன்று இவருடைய நினைவு நாள்!

Prashanth

Srinivas


ரஜினி மற்றும் கமலை விட,விஜயகாந்த்,அதிகமான மெகா ஹிட்திரைப்படங்களை கொடுத்தார் என்பது உண்மையா?

 

ரஜினி மற்றும் கமலை விட விஜயகாந்த் அதிகமான மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் என்பது உண்மையா?

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் உண்மை.அந்த காலகட்டம் 1984 முதல் 1994 வரை என்று உறுதியாக கூறலாம்.

ஒருபுறம் கமலின் நடிப்பு,வித்தியாசமான படைப்புகள் மறுபுறம் ரஜினியின் ஸ்டைலில் அட்டகாசமான படங்கள் என்று ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவை ஆண்ட தருணம் அது.

அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த இரு ஆளுமைகளையும் மீறி தன் பாணியிலான கமர்சியல் படங்களில் கம்பீரமான வசனத்தாலும் ஆக்ரோஷமான கதாபாத்திரங்களினாலும் மக்களை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

முக்கியமாக இவரின் படங்கள் பி மற்றும் சி செண்டர்களில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் படங்களை விட வசூலில் சக்கை போடு போட்டது.

1984-இல் மட்டும் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து கொண்டிருந்தார்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 1984-ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் அசுர ஆட்டம் 1994-ஆம் ஆண்டு வரை வெளுத்து வாங்கியது.

அதன்பின் 1995 முதல் 2010 வரை சறுக்கல் இருந்த போதும் சில படங்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்தது.ஆனாலும் இவரை ரசித்த ரசிகர் கூட்டம் கடேசி வரை இவருடன் நிலைத்து நின்றது தான் ஆச்சர்யமாக இருந்தது.

சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கேப்டன் 1984 முதல் 1994 வரை மாஸ் ஹீரோவாய் உயர்ந்து மக்களின் மனதில் இடம்பெற காரணமாக இருந்த படங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.

1984(நூறாவது நாள்,வைதேகி காத்திருந்தாள்)

1985(நானே ராஜா நானே மந்திரி)

1986(அம்மன் கோவில் கிழக்காலே,ஊமை விழிகள்)

1987(கூலிக்காரன்,உழவன் மகன்)

1988(பூந்தோட்ட காவல்காரன்,செந்தூர பூவே)

1989(பாட்டுக்கு ஒரு தலைவன்,பொன்மனச்செல்வன்)

1990(புலன் விசாரணை,சத்ரியன்)

1991(கேப்டன் பிரபாகரன் (100-வது படம்),மாநகர காவல்)

1992(சின்ன கவுண்டர்)

1994(சேதுபதி ஐ பி எஸ்,என் ஆசை மச்சான்)

இதன் பிறகு மிக பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்றால் வானதைப்போல,வல்லரசு,ரமணா மற்றும் சிலவற்றை சொல்லலாம்.

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் ஒரு முன்னணி நடிகர் கேப்டனை பற்றி 1998-ஆம் வருடம் ஒரு நேர்காணலில் சொன்ன சில வார்த்தைகள் .

"தமிழ்நாட்டை பொறுத்த வரை கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் மாஸ் ஆடியன்ஸ் என ரசிகர்களில் 2 வகை இருக்காங்க அதுல மாஸ் ஆடியன்ஸ் ஒரு நடிகனை நடிகனா ஒத்துக்கணும் அது ரொம்ப ரொம்ப முக்கியம். அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி ஒரு பெரிய ஹீரோ அண்ணன் விஜயகாந்த் அவர்கள்.

அவரை வைச்சு எங்கப்பா ஒரு படம் எடுக்கும் போது அதுல அவரோட தம்பியா என்னை நடிக்க வைச்சாங்க.திரை அரங்கிற்கு விஜயகாந்த் சாரை பார்க்க வருபவர்கள் என்னையும் கவனிப்பார்கள் என்ற நோக்கத்துடன் தான் அந்த படம் எடுக்கப்பட்டது

முக்கியமாக இந்த காரணத்துக்காக தான் அந்த படம் பண்ணினோம் அந்த படமும் வெற்றி அடைஞ்சது அதுக்கு அப்புறம் நாங்க நினைச்சதெல்லாம் நடந்தது"

இவருடன் சேர்ந்து நாம் நடித்தால் மக்களுக்கு நம் முகம் பரிச்சயமாகி நமக்கு நல்ல எதிர்காலம் திரைத்துறையில் உண்டாகும் என்று ஒருவர் நினைக்கும் அளவுக்கு கேப்டன் இருந்திருக்கிறார் என்றால் அந்த நேரத்தில் கேப்டன் தன் திரைபடங்களால் மக்களை எந்தளவுக்கு கவர்ந்திருப்பார் மற்றும் முன்னணி நாயகனாக இருந்திருப்பார் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.

நன்றி:கூகிள்(படங்கள்)

இந்து மத கோட்பாடுகள் மிகவும் பிடித்த விட்டதால், இந்துவாக மாறிய லிவிங்ஸ்டன் !

 

🌹இந்துவாக மாறிய லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். பின் 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்

🌹இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நடிகர் லிவிங்ஸ்டன் கடந்த 1982ம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி, விரலுக்கேத்த வீக்கம், சுந்தரபுருஷன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமடைந்தார்... தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் லிவிங்ஸ்டன் சீரியல்களிலும் நடித்து வருகிறார்...

🌹கிறிஸ்டியனாக இருந்த நான் இந்து மத கோட்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்த விட்டதால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்துவிட்டேன்' என்றார்

🌹தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!..

 

🌹தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!..

🌹பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.

🌹மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.

🌹கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி அவரை வளர்த்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். எனவேதான், அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் எப்போதும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.

🌹நிறைய தானங்கள் செய்ததாலும், ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றதாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டது. ஒருசமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தனது வீட்டை விற்பது என என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.

🌹இந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவு செய்யப்பட்டு வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போது மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால் ‘மார்வாடியிடமே வீட்டை விற்றுவிடுங்கள்’ என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

🌹ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில் விருப்பமில்லை. ‘நான் பல வருடங்களாக வசிக்கும் வீடு இது. இந்த பக்கம் வரும்போது நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமே என நினைத்தால் மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு விற்றால் ‘நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுகுள்ள போகவும் மனசு கூசாது’ என சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே விற்றாராம் என்.எஸ் கிருஷ்ணன் அவர்கள்.

Prashanth

Srinivas

நடிகர் மோகன் சர்மா !

 

கவனிப்பார் யாரும் இல்லாததால் நடிகர் மோகன் சர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமாகியிருப்பது குறித்த செய்தி...

புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை வாங்கியவர். ஃபிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். இத்தனை பெருமைக்குரிய மோகன் சர்மா தற்போது த‌ன்னுடைய 80வது வயதில் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார்.

என்ன நடந்தது?

அவரிடமே பேசினோம்.

''சினிமாவுல பரபரப்பா இயங்கிட்டிருந்த காலத்துல சென்னையில போயஸ் கார்டன் பகுதியில எனக்கு வீடு இருந்தது. நான் தயாரித்து இயக்கிய 'நம்ம கிராமம்' படத்துல நடிச்ச நடிகை சுகுமாரிக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சப்ப மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவங்களைக் கூப்பிட்டு பாராட்டினாங்க. அந்தப் படத்தை அவங்க பார்க்க விரும்பறதாச் சொல்ல, படத்தைப் போட்டு காமிச்சோம்.

கேரளாவின் பாலக்காடு பகுதிகளில் அந்தக்காலத்துல பிராமண சமுகத்தில் பெண் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சாடிய கதை. 'படம் என்னை ரொம்பவே பாதிச்சது'ன்னு சொன்ன அவங்க, படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்கு வாங்கச் சொல்றேன்'னும் சொன்னாங்க. ஆனா அது நடக்கறதுக்குள்ள அவங்களும் இறந்துட்டாங்க.

தமிழ்நாடு அரசு விருது மட்டுமல்லாம கேரள அரசின் விருதும் அந்தப் படத்துக்கு கிடைச்சது.

முதல் இன்னிங்ஸ் சினிமான்னா அடுத்து சீரியல் பக்கம் வந்தேன். அங்கயும் நிறைய சீரியல் பண்ணினேன். சினிமா, சீரியல் ரெண்டும் என்னை பிசியா வச்சிருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரலை.

வெளியில சொல்ல முடியாத துயரத்தையெல்லாம் சந்திச்சேன். ஒரு கட்டத்துல போயஸ் கார்டன் வீட்டை வித்த போதும்... அதுலயும் சில வில்லங்கங்கள் வந்து செய்தி மீடியாவுக்கு வந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே.

நாளாக ஆக உடலும் மனசும் ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. கையில காசு இல்லை. நோய் நொடினு வந்தா பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு.

இந்தச் சூழல்லதான் முன்னாடி ரோட்டரி கிளப்களில் ஆக்டிவா இருந்த போது தொடர்பிலிருந்த சில நல்ல உள்ளங்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிற இந்த முதியோர் இல்லத்தைக் காட்டி இங்க வந்து சேர்த்து விட்டாங்க.

ஜெயின் சமூகத்தினர் நடத்துகிற இந்த இல்லத்தில் இப்போதைக்கு தங்க இடமும் சாப்பாடும் இலவசமா தந்திடுறாங்க. ஆனாக்கூட வயோதிக பிரச்னைகளால் எடுக்கிற மருந்து மாத்திரைகள் வாங்க என்கிட்ட பணம் இல்லை.

நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்.

ஃபிலிம் சேம்பர்ல நான் பொறுப்புல இருந்தபோது வயதான காலத்துல இந்த மாதிரி யாராவது நோய் நொடின்னு கஷ்டப்பட்டா அஞ்சு லட்ச ரூபாய் வழங்கலாம்னு ஒரு தீர்மானம் போட்டிருந்தேன்.

அதைச் சுட்டிக்காட்டி சேம்பருக்கு கடிதம் எழுதி உதவக் கேட்டேன். ஆனா அந்த தீர்மானம் திருத்தப்பட்டு விட்டதா தகவல் வந்திருக்கு.

அதாவது இறந்தா அதன் பிறகு அந்தப் பணத்தை வழங்குவாங்களாம்.

'ஏன்ப்பா ஆதரவில்லாம கஷ்டப்படுகிறவனுக்கு அந்தச் சமயத்துல உதவாம, அவன் இறந்த பிறகு யார்கிட்ட போய் அந்தப் பணத்தைக் கொடுப்பீங்க'னு கேட்டா பதில் இல்லை.

என் வயோதிக நாள்கள் இன்னும் என்ன வேதனையையெல்லாம் தரப்போகுதோனு நினைச்சாலே பயமா இருக்கு'' என நா தழுதழுக்க முடித்த மோகன் சர்மா,

``விருது வாங்கிய என்னுடைய 'நம்ம கிராமம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினா மிச்சமிருக்கிற காலத்துக்கு எனக்கு மருந்து மாத்திரை வாங்க அது உதவும். சினிமா உலகத்துல யாராவது இந்த விஷயத்துல எனக்கு உதவினா அவங்களை மறக்கவே மாட்டேன்'' என்றபடி கண் கலங்குகிறார்.

நன்றி: விகடன்

தனியா வாழறவங்களுக்கு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைக்கிறது இவரது வாழ்க்கை.

நன்றி . விகடன!

அன்னக்கிளி சுஜாதா !

 

அன்னக்கிளி படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றியபோது என் காதுக்குள் -இந்தப் படம் நல்லா போகக்கூடாது சார். போனா திரும்பத் திரும்ப என்னைப் பல படங்களுக்கு ‘புக்’ பண்ணுவாங்க. தொடர்ந்து நான் நடிக்கணும். இதே சித்ரவதையை அனுபவிக்கணும். வேண்டாம் சார்! இந்தப் படம் ஓட வேண்டாம்!’ என்று கண்ணீருடன் சொன்னார்.

அது மட்டுமல்ல, தமிழகமெங்கும் நடந்த தியேட்டர் ‘விசிட்’களில் அவர் கலந்துகொள்ளவே இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அந்தப் படத்தின் கதாநாயகி எரிமலையின் உச்சியில் அமர்ந்திருந்தால் எப்படிப் பொங்குவாளோ, அப்படி பொங்கி, ‘சார்! என்னோட கடந்த காலத்தை கேக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு ஒரு குருவிக்காரனோ, கிளி ஜோசியரோ சொன்னா, பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நடிப்புக்குக் கும்பிடு போட்டுட்டு போயிடுவேன் சார். பணம் காய்க்கும் மரமா என்னை அப்பா அம்மா பயன்படுத்தறாங்க. என் உடம்புக்கு சரியில்லாமப் போனாலும், கால்ஷீட் குடுத்திடறாங்க. எனக்குப் பிடிக்காத கேரக்டரா இருந்தாலும் பணத்துக்காக நடிக்கச் சொல்றாங்க. எனக்குன்னு தனி அக்கவுண்ட் பேங்க்ல கிடையாது. மார்க்கெட் இருக்கிற வரைக்கும் என்னை சாறாப் புழிஞ்சு எடுத்திட்டு, சாகடிக்கப் போறாங்க. என் விருப்பு, வெறுப்பு பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை. இந்த டார்ச்சர் தாங்காம தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட பல தடவை தோணிச்சு!’ என்று சொன்னபோது, எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

நடிகர் சிவகுமார்! 

என்னமோ போடா மாதவா’! உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...

 

  • அண்ணா நகர் முதல் தெரு 1988 - ல் நடிகர் சத்யராஜ், பிரபு, அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான காலத்தால் அழியாததொரு தமிழ் திரைப்படம்.
  • இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கத்தில், சந்திரபோஸ் இசையமைப்பில் வெளியான இப்படம், மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற 'காந்திநகர் 2வது தெரு' படத்தின் ரீமேக்.

கதைக்களம்:

  • வேலை கிடைக்காமல் சிரமப்படும் சிவராமன் (சத்யராஜ்), தன் நண்பன் மாதவனைத் (ஜனகராஜ்) தேடி சென்னைக்கு வருகிறான்.
  • ‘தன் வீட்டில் அவன் நிரந்தரமாகத் தங்கி விடுவானோ’ என்று அச்சப்படும் மாதவன், நண்பனை வெளியில் கிளப்புவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்.
  • கடைசியில் தன் அலுவலகம் அமைந்திருக்கும் காலனியில் ‘காவலாளி’ வேலை வாங்கித் தருகிறான்.
  • ‘கூர்க்கா’வாக மாறி ஒருவழியாக வேலையில் நிலைபெறும் சிவராமனுக்கு ஓர் அதிர்ச்சி. அவனுடைய முன்னாள் காதலியான லதா (ராதா), அங்குக் குடிவருகிறாள்.
  • ஒரு பிரச்னையால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். இவனைத் தெரிந்தது போலவே லதா காட்டிக் கொள்ளாததால் சிவராமன் மனம் உடைந்து போகிறான்.
  • அவனுடைய வேலையில் வேறு பிரச்னைகளும் சேர்கின்றன. மாறுவேடம் கலைகிறது. எனவே அந்த இடத்திலிருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்கிறான்.
  • இறுதியில் லதாவும் சிவராமனும் சேர்ந்தார்களா என்பதே திரைக்கதை.
  • மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு,என்ன கதை சொல்ல சொன்னா என பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
  • இதில் சத்யராஜ் மற்றும் ஜனகராஜ் ஆகியோரின் கூட்டணி மிகவும் பேசப்பட்டது.
  • “ஏண்டா மாதவா... உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...” என்று தன்னைத்தானே தற்புகழ்ச்சியுடன் ஜனகராஜ் பேசிக் கொள்ளும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
  • 1988 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியான இப்படம், திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் (சூப்பர்ஹிட்) பெற்றது.