Total Pageviews

Sunday, December 29, 2024

இப்படிக் கூட உதவி செய்யலாம் நடிகர் - ஜெய்சங்கர் !

 

அந்த நடிகருக்கு இப்படியும் கூட ஒரு முகம் உண்டு என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் !

அந்த நடிகர் தனது வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவாராம்.

முழு செலவையும் அவரே ஏற்று நடத்தி வைக்கும் அந்த விருந்தை அவரே முன் நின்று பரிமாறுவதுதானே முறை ?

அதுதான் இல்லை !

ஒவ்வொரு விருந்துக்கும் யாராவது ஒரு பிரபலத்தை அழைத்து வந்து அவர்கள் கையால் அந்த அனாதைக் குழந்தைகளுக்கு விருந்து பரிமாற வைத்து அதைப் பார்த்து மகிழ்வாராம் அந்த நடிகர்.

அந்த நடிகர் - ஜெய்சங்கர் !

சரி, ஏன் இப்படிச் செய்தார் ஜெய்சங்கர் ?

புரிந்து கொள்ள முடியாத ஒரு நண்பர் இந்தக் கேள்வியை ஜெய்சங்கரிடமே கேட்டு விட்டாராம்.

“ஏங்க ஜெய், விருந்துக்கான எல்லா செலவையும் நீங்க பண்றீங்க. அதை பரிமாறி புண்ணியம் தேடிக் கொள்வது மட்டும் யாரோ ஒரு பிரபலமா ?”

ஜெய்சங்கர் புன்னகைத்தாராம்.

நண்பர் விடவில்லை : “சிரிக்காதீங்க ஜெய், ஒண்ணு நீங்க பரிமாறுங்க. அல்லது உங்க மனைவி குழந்தைகளை விட்டு பரிமாற சொல்லுங்க. யாரோ ஒரு மூணாவது மனிதர்...”

நண்பரின் பேச்சை இடைமறித்த ஜெய்சங்கர் சிரித்தபடி சொன்னாராம் இப்படி :

“கொஞ்சம் பொறுங்க. நான் கூப்பிட்டுட்டு வர்ற பிரபலங்களை கவனிச்சு இருக்கீங்களா ? அவங்க யாருமே இந்த மாதிரி அனாதை இல்லங்களுக்கெல்லாம் போய் உதவி செய்யற பழக்கம் இல்லாதவங்க. அதுக்கான நேரம் இல்லாதவங்க. அது பற்றின விவரம் தெரியாதவங்களாக கூட இருக்கலாம் .

அதனால இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி அவங்களை நான் கூப்பிடறேன். இந்த மாதிரியும் இடம் இருக்கு. இப்படிக் கூட உதவி செய்யலாம் என்று அறிமுகப்படுத்துகிறேன். அவ்வளவுதான் ! இப்படி வர்ற பத்து பேர்ல ஒரே ஒருத்தர் மனசில இந்த உதவி பதிஞ்சா கூடப் போதுமே ! எதிர்காலத்தில அவங்களும் கூட இதுமாதிரி உதவிகளைச் செய்ய முயற்சி செய்யலாம் இல்லையா ? அதுக்காகத்தான் இப்படி கூப்பிடறேன்!"

ஜெய்சங்கரின் இந்தப் பதிலைக் கேட்ட நண்பர் மௌனமாகிப் போனாராம்.

(2000 ஜூன் 3 ): நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம் .

Saturday, December 28, 2024

இளையராஜா !

 

1990-ம் ஆண்டு.

தான் முதன்முதலாக இயக்கும் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று ஒருவர் வந்து நிற்கிறார். வந்தவரை பார்த்தது ராஜாவிற்கு அதிர்ச்சி. இவர் ப்ரொடியூசர், டிஸ்ட்ரிப்யூட்டர் ஆச்சே, இவர் எதுக்கு திடீர்னு டைரக்ட் பண்றேன்னு வராரு என்று சந்தேகத்தில் பார்க்கிறார்.

ஆனால் பஞ்சு அய்யாவின் ரெகமண்டேஷன் என்பதால் ராஜாவும் ஒப்புக் கொள்கிறார். தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அந்த நபர் தான் திரு.கேயார் அவர்கள். தமிழில் அவர் இயக்கியமுதல் படமான ஈரமான ரோஜாவே படத்திற்கு இசையமைக்க ஒரு வழியாக ராஜாவை சம்மதிக்க வைத்து விட்டார்.

கம்போசிங்கிற்கு எங்காவது வெளியூர் செல்லலாம் என்கிற போது ராஜாவே கொச்சினுக்கு போகலாம் என்று சொல்லியிருக்கிறார். அதுவும் ரயிலில் தான் செல்ல வேண்டும் என்று சொல்ல, கேயாரும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். ராஜாவும், அவரது மனைவியுடன் வர, கடைசி நேரத்தில் ஒருவருக்கு மட்டும் டெக்கெட் கன்பார்ம் ஆகவில்லை. டி டி ஆர் ராஜாவைப் பார்த்துவிட்டு, நீங்க எங்க வேணா உக்காருங்க சார், என்று அனுமதி கொடுத்து விடுகிறார்.

அடுத்த நாள் காலை கொச்சின் வந்து இறங்கியாகிற்று. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை. காலை 7.30 மணிக்கு கேயாருக்கு அழைப்பு வருகிறது. இவர் போனால் அங்கே குளித்து முடித்து ரெடியாகி, வெள்ளை உடையில் தயாராக இருக்கிறார் ராஜா. "கம்போசிங் ஆரம்பிக்கலாமா" என்று கேட்கவும் கேயாருக்கு அதிர்ச்சி. "இப்பத்தானே வந்துருக்கோம், கொஞ்ச ரெஸ்ட் எடுங்க, டிபன் சாப்பிடுங்க, சுத்திப் பார்க்க போவோம், அப்புறமா வந்து கம்போசிங் வச்சுக்கலாம்" என்று கேயார் சொல்லவும், அதெல்லாம் வேணாம்யா, முதல்ல வந்த வேலையை முடிப்போம் என்று வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குனர் கேயார் ஒவ்வொரு சிச்சுவேஷனாக சொல்ல அரைமணிக்குள் 6 பாடல்கள் ரெடி. இதே பயணத்தில் இன்னும் இரண்டு படத்திற்கான கம்போசிங் செய்ய இயக்குனர்களை வரவழைத்திருக்கிறார் இளையராஜா. கேயார் வேலை முடிந்ததும் அவர்களை அழைக்க, சிவாஜி ப்ரொடக்‌ஷன் சார்பில் பிரபு, குஷ்பூ நடிக்க தயாரான படம் "மை டியர் மார்த்தாண்டன்". அவரும் சிச்சுவேஷன் சொல்ல அந்தப் படத்திற்கு 9 பாடல்கள் ரெடி.

அதற்கடுத்து ராஜாவின் நீண்ட நாள் நண்பர் பாரதிராஜாவுடன் இணையும் படம் " நாடோடி தென்றல்". அதற்கு 6 பாடல்கள் என மொத்தமாக 21 பாடல்களுக்கான ட்யூன்கள் ரெடி. இவை அனைத்து காலை 10 மணிக்குள் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தான் சுற்றிப் பார்க்க கிளம்பி இருக்கிறார் ராஜா.

உடன் வந்த கேயார் "ஏங்க சென்னைல இருந்தா     7மணிக்கு ஸ்டுடியோல வேலையை ஆரம்பக்கிறிங்க. வெளியூர் வந்தாலும் அதே             7 மணிக்கு வேலை செய்யறதுக்கு, பேசாம சென்னைலேயே இருந்திருக்கலாமே" என்று ராஜாவிடம் கேட்டிருக்கிறார். "எனக்கும் நாலு இடத்தைப் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, அதுக்குத் தான் வரோம். வேலையையும் முடிச்சுட்டா நிம்மதியா இருக்கலாம்ல" என்று சொன்னபடி வேட்டியை தூக்கிவிட்டபடி கடலைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார் ராஜா..

மை டியர் மார்த்தாண்டன் படம் தான் முதலில் வந்தது. அதற்கடுத்து ஈரமான ரோஜாவே, நாடோடி தென்றல் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து 1992-ல் தான் வெளிவந்தது. 3 படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அன்றிலிருந்து இன்று வரை மனிதர் மாறவே இல்லை. மே மாதம் நான் சிம்பொனி எழுதி விட்டேன் என்றார், இப்போது ஜனவரியில் சிம்பொனி வெளியாகும் என்கிறார். 1990-2024 34 வருடங்கள் ஓடியிருந்தாலும், ராஜாவுக்கு 80 வயதாகியிருந்தாலும் அவர் வேலை செய்வது இன்னும் நிற்கவில்லை. இன்னும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

முதல் மரியாதை !

 

🌹முதல் மரியாதை!

தன்னை வளர்த்த மாமனின் கெளரவம் கருதி, அவர் காலில் விழுந்து கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மாமனின் மகளான ‘பொன்னாத்தா’வை திருமணம் செய்து கொள்கிறார் மலைச்சாமி.

விருப்பமற்ற இல்லற வாழ்க்கையின் மனப்புழுக்கத்தை பல வருடங்களாக சகிச்த்துக் கொண்டிருப்பவர். பெறாத மகளாக இருந்தாலும் அவள் மீது உண்மையான தகப்பனை விடவும் அதிக பாசத்தைக் கொட்டுபவர்.

🌹‘உள்ளே அழுகறேன்… வெளியே சிரிக்கறேன்’ என்கிற கதையாக விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவரின் பாலைவன வாழ்க்கையில் இளம் தென்றலாய் நுழைகிறாள்

🌹 ‘குயில்’. வழக்கமான கிராமத்துக் குசும்புகளுடன் ஆரம்பிக்கும் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் களங்கமற்ற அன்பாகவும் குற்றமற்ற நேசமாகவும் மாறுகிறது. ஊராரின் எதிர்ப்பிற்கும் அவதூறுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் இவர்களின் உறவு ஒரு காவியத் துயரத்துடன் நிறைவடைவதை உருக்கத்துடன் சித்திரித்திருந்தார் பாரதிராஜா.

🌹கணவனை எப்போதும் கரித்துக் கொட்டும் ‘சிடுசிடு’ மனைவியின் பாத்திரத்தில் நடிக்க வடிவுக்கரசி

🌹சிவாஜி முதல் நாள் படப்பிடிப்பிற்குத் தயாராகி வரும்போது தன்னுடைய வழக்கப்படி ‘பெரிய விக், மீசை’ என்று சினிமாவிற்கான தோரணையுடன் வந்தததைப் பார்த்து திகைத்துப் போன பாரதிராஜா

🌹 “ஐயா... நீங்க இயல்பான தோற்றத்தில் வந்தால் போதும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்ல

🌹 “அப்படியா சொல்ற... சரிப்பா” என்று சிவாஜி உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தத் திரைப்படம் என்றல்ல, தனது எல்லாத் திரைப்படங்களிலும் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதுதான் சிவாஜியின் வழக்கம்.

🌹குயில்’ பாத்திரம் என்பது

ராதாவிற்கு

ஊர்ப் பெரியவரான சிவாஜியிடம் துடுக்குத்தனமாக பேசுவதாகட்டும், மறைந்திருந்து எசப்பாட்டு பாடுவதாகட்டும், அவரின் சொந்தக்கதையை அறிந்து வருந்துவதாகட்டும், அதுவே பிறகு பாசமாகவும் நேசமாகவும் மலர்வதாகட்டும்,

🌹 “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகட்டும். ‘குயில்’ பாத்திரத்திற்குள் அற்புதமாக கூடு புகுந்தார் ராதா. .

இந்தத் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை

மலேசியா வாசுதேவனின் குரல் சிவாஜிக்கு மிகப் பொருத்தமாக அமைந்தது என்பதை ‘முதல் மரியாதை’ பாடல்கள் மீண்டும் நிரூபித்தன.

🌹 ‘பூங்காற்று திரும்புமா’ பாடலில் உள்ள ஏக்கம், அதற்கு முரணாக

🌹 ‘ஹே... குருவி. சிட்டுக்குருவி’ பாடலில் உள்ள உற்சாகம் என்று அசத்தியிருந்தார்

மலேசியா.

இன்னொரு பக்கம் ஜானகியம்மாவின் ராஜாங்கம்.

🌹 ‘அந்த நெலாவத்தான் கையில பிடிச்சேன்' என்று ரொமான்ஸில் பின்னியெடுத்தவர்,

🌹‘வெட்டிவேரு வாசத்தில்’ நம்மை உருக்கியெடுத்துவிட்டார்.

🌹 ராதா சமைக்கும் மீனை வெட்டி வீறாப்புடன் முதலில் மறுத்துவிட்டு பிறகு ‘உனக்கு வயித்த வலிக்கும். அதான் சாப்பிடறேன்’ என்று குழந்தைத்தன்மையுடன் சிவாஜி சொல்லும் காட்சி அற்புதமானது.

🌹 “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று கேட்கும் ராதாவின் கன்னத்தில் அறைந்து விட்டு

🌹“பச்சைப் புள்ளன்னு நெனச்சு பழகினது தப்பாப் போச்சு” என்று பாவனையாகக் கோபப்படும் சிவாஜி,

கடைசிக்காட்சியில் தன் காதலை ஒப்புக் கொள்வது உருக்கமானது.

🌹“என் புருஷனை நீ வெச்சிருக்கியா சொல்லுடி” என்று துடைப்பைக் கட்டையால் ராதாவை வடிவுக்கரசி அடிப்பதும், ஊராரின் அவதூறு தாங்காமல்

🌹 “ஆமாம். நான் அவளை வெச்சிருக்கேன்” என்று பஞ்சாயத்தின் நடுவில் சிவாஜி வாக்குமூலம் தருவதும் அந்த வார்த்தைகளை மலர் தூவல்களாக ராதா கற்பனை செய்து கொள்வதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

ஸ்ரீநிவாஸ்....

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன் !

 

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த டாப் 10 படங்களில் ஒன்று 'நெற்றிக் கண்'. இந்த படத்தின் கதையை விசு எழுதியிருந்தார். இந்த கதையில் சிறப்பு என்னவென்றால், அதற்கு முன் வந்த படங்கள் அனைத்திலும் அப்பா நல்லவராக இருப்பார், மகன் தீயவனாக இருப்பான். அப்பா, மகனை திருத்துவது மாதிரி இருக்கும். ஆனால் இந்த கதையில் அப்பா பெண் பித்தராக இருப்பார். மகன் அவரை திருத்துவதாக மாற்றி எழுதப்பட்ட கதை.

இந்த கதை விசு நாடகத்திற்காக எழுதியது. பாலச்சந்தரிடம் படித்து பார்க்க கொடுத்தார். கதையை படித்த கே.பாலச்சந்தர் இதை படமாகவே தயாரிக்கலாம் என்று கூறி உடனே எஸ்.பி.முத்துராமனை வரச் செய்து இந்த கதையை நீங்களே இயக்குங்கள், ரஜினி நடிக்கட்டும் என்றார். கதையை படித்து பார்த்த எஸ்.பி.முத்துராமன் “இந்த படத்தை நான் இயக்க மாட்டேன். வேறு யாரையாவது இயக்க சொல்லுங்கள், அல்லது ரஜினிக்கு பதிலாக வேறு யாராவது நடித்தால் நான் இயக்குகிறேன். ரஜினியை ஒரு போதும் பெண்பித்தராக என்னால் காட்ட முடியாது. நான் தடுமாறி விடுவேன்” என்று கூறிவிட்டார்.

உடனே ரஜினியை அழைத்த பாலச்சந்தர் அவருக்கு கதை சொன்னார். “ரஜினியும் சூப்பரா இருக்கே. எனக்கு நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாகவே நடிப்பது நான் ரெடி” என்று கூறிவிட்டார். ஒரு வழியாக எஸ்.பி.முத்துராமனை சம்மதிக்க வைத்து படத்தை உருவாக்கினார்கள்.

இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடம் என்பதால் ஒளிப்பதிவாளர் பாபு அப்போது அறிமுகமாகி இருந்த 'மாஸ்க் ஷாட்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் படத்தை எடுத்தார். 90 மாஸ்க் ஷாட்கள் படத்தில் இடம் பெற்றது. இரட்டை வேட தொழில்நுட்பத்தில் அது ஒரு மைல் கல்லாக இருந்தது. படத்தின் மகன் சந்தோஷ் கேரக்டரை விட தந்தை சக்ரவர்த்தி கேரக்டர்தான் பேசப்பட்டது.

தேன் மொழி

நரை என்பது வெறுமனே வெண்மை முடி அல்லவே! அது அனுபவம் சார்,அனுபவம்!!

 

*வடக்கே ஒரு தொடர் வண்டியின் ஒரு பெட்டியில் தலை நரைத்த ஒரு முதியவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார்..

*அடுத்து வந்த ஒரு நிறுத்தத்தில் 10-15 இளைஞர் பட்டாளம் ஏறியது..மீண்டும் வண்டி வேகம் எடுத்து ஓட தொடங்கியது..

*இளைஞர்கள் என்றாலே,கூத்தும் கும்மாளமும்தானே.அதிலும் இன்றைய இளைஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்..

*அவர்களின் ஒருவன்,டேய்! நாம வண்டியின் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவோமா..!?

*ஓஓ, நிறுத்தலாம்டா!!

*வண்டி நின்றதும் TTE வந்து விசாரிப்பாரே..அபராதம் போடுவாரே!

*அதையெல்லாம் சமாளிக்கலாம்டா! நீ இழுடா!! இவன் கிடக்கிறான்.

*அதில் ஒருவன் மட்டும் (என்னை மாதிரி பயந்தாங்கொள்ளின்னு வச்சுகங்களேன்) எதற்கும் அபராத தொகையை ரெடியா வச்சுக்கலாம்..

*இதுவும் நல்ல யோசனைதான்..யார் யார்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு..எடுங்கடா..

..எல்லாருமா சேர்ந்து 1500/- ரூபாய் சேர்த்து ஒருவனிடம் கொடுத்துட்டு...யோவ்,பெருசு உன்கிட்டே இருக்கிறதையும் கொடு..

...என்கிட்ட பணம் ஏதும் இல்லையேப்பா என்று அந்த முதியவர் சொல்ல...அதற்குள் ஒருவன்

...டேய்! இந்த பெருசு பணம் தரமாட்டேங்கிறார்டா..பேசாம இந்த பெருசை மாட்டி விட்டுறுவோம்,இவர்தான் சங்கிலியை இழுத்தார் என்று...

*அருமையான ஐடியாடா..நமக்கு ஜாலிக்கு ஜாலியுமாச்சு..பணமும் மிச்சம்.இந்த பெருசு என்ன செய்வார்னு பார்ப்போம்..

#ஒருவன் சங்கிலியை பிடித்து இழுக்க,தொடர் வண்டி நின்றது..

..சிறிது நேரத்தில் அங்கே வந்த TTE, யார் சங்கிலியை இழுத்தது..ஏன் இழுத்தீர்கள்!!?

**அதோ அந்த பெரியவர்தான் சங்கிலியை இழுத்தார்..நாங்களும் எவ்வளவோ சொன்னோம்..ஏன் இழுக்கிறீர்கள் என்று கேட்டோம் என்று கோரஸாக அந்த இளைஞர்கள் சொன்னதும்..

*TTE, என்னாச்சு பெரியவரே! ஏன் வண்டியை நிறுத்துனீர்கள்..தகுந்த காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் அபராதம் கட்ட வேண்டும் என்று தெரியாதா..

#அந்த பெரியவர் சொன்ன பதில்தான் இந்த கதையின் Climax...

**நான் என்ன செய்வது சார்..நானோ கூலி வேலை செய்கிறவன்..கஷ்டப்பட்டு சம்பாதித்த என்னுடைய பணம் 1500/- ஐ இந்த பசங்க எல்லோருமாக சேர்ந்து என்னிடமிருந்து பிடுங்கி கொண்டார்கள்...ஊர் வந்ததும் இறங்கி என் பேரப்பிள்ளைகளுக்கு #தீபாவளிக்கு_துணிமணி எடுக்கனும்..அதற்காகத்தான் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்..நீங்க வேணா பாருங்க சார், அதோ அந்த பையன் பாக்கெட்டில் 1500 ரூபாய் இருக்கும்..

**மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்...

"உன்னையறிந்தால், நீ உன்னை அறிந்தால்..."

#அப்புறம் என்ன! அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும் அங்கிருந்த RPF அந்த இளைஞர்களை கொத்தாக அள்ளிக் கொண்டு போக..தொடர் வண்டி அந்த " நரை முடி முதியவருடன்" தன் பயணத்தை தொடர்ந்தது..!! (தன் சட்டை பையில் 1500 பணத்துடன் அந்த "பெருசு")

#100 இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள் நான் உலகத்தை மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர்..

#வருங்கால_இந்தியா இன்றைய இளைஞர்களிடம் உள்ளது..கனவு காணுங்கள் என்றார் Dr.APJ ..

#ஆனால் இளைஞர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்..எந்த பாதையில் செல்கிறார்கள்...பெரியவர்களை குறிப்பாக பெற்றோர்களை மதிக்கிறார்களா...!!?

சிந்திக்க வேண்டிய விஷயம்!!

*நரை என்பது வெறுமனே வெண்மை முடி அல்லவே! அது அனுபவம் சார்,அனுபவம்!!

1995 ஆம் ஆண்டு சென்னை தூரதர்ஷனுக்கு ரஜினி அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

 

என்னைக் கவர்ந்த அரசியல் தலைவர்”

ரஜினி அன்று கொடுத்த பேட்டி

*

1995 ஆம் ஆண்டு சென்னை தூரதர்ஷனுக்கு ரஜினி அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

***

கேள்வி : நீங்க ஆன்மீகவாதியா? காந்தியவாதியா?

ரஜினி பதில்: இரண்டுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்லைங்க.

கே : உங்களைக் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?

ப : சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வான்யூ

கே : உங்களுடைய கருத்தை என்றைக்காவது மாற்றியதுண்டா?

ப : நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி

கே : தங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார்?

ப : கமல்ஹாசன்

கே : மனிதன் முட்டாளாக ஆவது எப்போது?

ப : தன் மீது நம்பிக்கை வைக்காமல், மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது

கே : பணம் வரும்போது மனிதன் எதை மறைக்கிறான்?

ப : உண்மையை மறைக்கிறான். பணத்தை மறைக்கிறான்?

கே : சோ, உங்களை அடிக்கடி பாராட்டிப் பேசுகிறாரே?

ப : அதாங்க எனக்குப் பயமா இருக்கு. நான் அரசியலுக்கு வரலீங்க. அதனால தான் பாராட்டிப் பேசிக்கிட்டு இருக்கார். வந்துட்டேன்னு வைச்சுக்குங்க. பீஸ் பீஸா கிழிச்சுடுவாரு. 

உண்மையாகவே சோ சார் சிறந்த அறிவாளி. மிகச்சிறந்த மனிதர். என்னுடைய நல்ல நண்பர்

கே : நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றிச் சில வார்த்தைகள்?

ப : என்னை ‘ஸ்டைல் கிங்’னு சொல்லுவாங்க. நான் ‘ஸ்டைல் கிங்’னா, சிவாஜி சார் ‘ஸ்டைல் சக்கரவர்த்தி’.

Sunday, December 22, 2024

தமிழில் வந்த இனிய இந்தி பாடல் இது. மகேந்திரன் இயக்கிய நண்டு !

 மகேந்திரன் இயக்கிய அருமையான திரைப்படங்களில் ஒன்று நண்டு. திரைப்படத்தில் சுரேஷ் அஸ்வினி நடித்திருந்தனர் சுரேஷ் என்பவர் புதுமுகம். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கதாநாயகன் சுரேஷ் ஒரு பொறியாளர். தாய் மீது மிகுந்த பாசம் கொண்டார் ஆனால் தந்தையின் போக்கு அவருக்கு பிடிக்கவில்லை அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். அதனால் சென்னைக்கு வருகிறார் சுரேஷ். சுரேஷ் ஒரு ஆஸ்துமா நோயாளி வேறு. சுரேஷ் இங்கு வந்த பிறகு அஸ்வினியுடன் பழக்கம் ஏற்படுகிறது அதன் நட்பாகி திருமணத்தில் முடிகிறது. இந்த நேரத்தில் சுரேஷுக்கு ஆஸ்துமா நோயின் வீரியம் அதிகமாகிறது இதனால் என்னென்ன துன்பங்கள் ஏற்படுகிறது என்பதுதான் கதை.

மிக அழுத்தமான சம்பவங்களுடன் சுவாரஸ்யமாக இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மகேந்திரன்.

படத்தின் பல காட்சிகள் மக்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இளையராஜா இசையில் மஞ்சள் வெயில் என்ற பாடலும், அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா பாடலும், கேய் சகுன் குச் கெகன சகுன் என்ற இந்தி பாடல் மிகவும் அழகாக அருமையாக இருந்தது.

.இப்பாடலை பிபி ஸ்ரீனிவாஸ் எழுதியிருந்தார் தமிழில் வந்த இனிய இந்தி பாடல் இது. படமும் ரசிகர்களால் மறக்க முடியாத படம்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் 1981 ஏப்ரல் தமிழ் புத்தாண்டுக்கு வெளிவருவதாக இருந்து மூன்று நாட்கள் கழித்து வெளியான திரைப்படம் இது.