*வடக்கே ஒரு தொடர் வண்டியின் ஒரு பெட்டியில் தலை நரைத்த ஒரு முதியவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார்..
*அடுத்து வந்த ஒரு நிறுத்தத்தில் 10-15 இளைஞர் பட்டாளம் ஏறியது..மீண்டும் வண்டி வேகம் எடுத்து ஓட தொடங்கியது..
*இளைஞர்கள் என்றாலே,கூத்தும் கும்மாளமும்தானே.அதிலும் இன்றைய இளைஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்..
*அவர்களின் ஒருவன்,டேய்! நாம வண்டியின் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவோமா..!?
*ஓஓ, நிறுத்தலாம்டா!!
*வண்டி நின்றதும் TTE வந்து விசாரிப்பாரே..அபராதம் போடுவாரே!
*அதையெல்லாம் சமாளிக்கலாம்டா! நீ இழுடா!! இவன் கிடக்கிறான்.
*அதில் ஒருவன் மட்டும் (என்னை மாதிரி பயந்தாங்கொள்ளின்னு வச்சுகங்களேன்) எதற்கும் அபராத தொகையை ரெடியா வச்சுக்கலாம்..
*இதுவும் நல்ல யோசனைதான்..யார் யார்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு..எடுங்கடா..
..எல்லாருமா சேர்ந்து 1500/- ரூபாய் சேர்த்து ஒருவனிடம் கொடுத்துட்டு...யோவ்,பெருசு உன்கிட்டே இருக்கிறதையும் கொடு..
...என்கிட்ட பணம் ஏதும் இல்லையேப்பா என்று அந்த முதியவர் சொல்ல...அதற்குள் ஒருவன்
...டேய்! இந்த பெருசு பணம் தரமாட்டேங்கிறார்டா..பேசாம இந்த பெருசை மாட்டி விட்டுறுவோம்,இவர்தான் சங்கிலியை இழுத்தார் என்று...
*அருமையான ஐடியாடா..நமக்கு ஜாலிக்கு ஜாலியுமாச்சு..பணமும் மிச்சம்.இந்த பெருசு என்ன செய்வார்னு பார்ப்போம்..
#ஒருவன் சங்கிலியை பிடித்து இழுக்க,தொடர் வண்டி நின்றது..
..சிறிது நேரத்தில் அங்கே வந்த TTE, யார் சங்கிலியை இழுத்தது..ஏன் இழுத்தீர்கள்!!?
**அதோ அந்த பெரியவர்தான் சங்கிலியை இழுத்தார்..நாங்களும் எவ்வளவோ சொன்னோம்..ஏன் இழுக்கிறீர்கள் என்று கேட்டோம் என்று கோரஸாக அந்த இளைஞர்கள் சொன்னதும்..
*TTE, என்னாச்சு பெரியவரே! ஏன் வண்டியை நிறுத்துனீர்கள்..தகுந்த காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் அபராதம் கட்ட வேண்டும் என்று தெரியாதா..
#அந்த பெரியவர் சொன்ன பதில்தான் இந்த கதையின் Climax...
**நான் என்ன செய்வது சார்..நானோ கூலி வேலை செய்கிறவன்..கஷ்டப்பட்டு சம்பாதித்த என்னுடைய பணம் 1500/- ஐ இந்த பசங்க எல்லோருமாக சேர்ந்து என்னிடமிருந்து பிடுங்கி கொண்டார்கள்...ஊர் வந்ததும் இறங்கி என் பேரப்பிள்ளைகளுக்கு #தீபாவளிக்கு_துணிமணி எடுக்கனும்..அதற்காகத்தான் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்..நீங்க வேணா பாருங்க சார், அதோ அந்த பையன் பாக்கெட்டில் 1500 ரூபாய் இருக்கும்..
**மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்...
"உன்னையறிந்தால், நீ உன்னை அறிந்தால்..."
#அப்புறம் என்ன! அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும் அங்கிருந்த RPF அந்த இளைஞர்களை கொத்தாக அள்ளிக் கொண்டு போக..தொடர் வண்டி அந்த " நரை முடி முதியவருடன்" தன் பயணத்தை தொடர்ந்தது..!! (தன் சட்டை பையில் 1500 பணத்துடன் அந்த "பெருசு")
#100 இளைஞர்களை என்னிடம் அனுப்புங்கள் நான் உலகத்தை மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர்..
#வருங்கால_இந்தியா இன்றைய இளைஞர்களிடம் உள்ளது..கனவு காணுங்கள் என்றார் Dr.APJ ..
#ஆனால் இளைஞர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள்..எந்த பாதையில் செல்கிறார்கள்...பெரியவர்களை குறிப்பாக பெற்றோர்களை மதிக்கிறார்களா...!!?
சிந்திக்க வேண்டிய விஷயம்!!
*நரை என்பது வெறுமனே வெண்மை முடி அல்லவே! அது அனுபவம் சார்,அனுபவம்!!
No comments:
Post a Comment