Total Pageviews

Saturday, December 28, 2024

முதல் மரியாதை !

 

🌹முதல் மரியாதை!

தன்னை வளர்த்த மாமனின் கெளரவம் கருதி, அவர் காலில் விழுந்து கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மாமனின் மகளான ‘பொன்னாத்தா’வை திருமணம் செய்து கொள்கிறார் மலைச்சாமி.

விருப்பமற்ற இல்லற வாழ்க்கையின் மனப்புழுக்கத்தை பல வருடங்களாக சகிச்த்துக் கொண்டிருப்பவர். பெறாத மகளாக இருந்தாலும் அவள் மீது உண்மையான தகப்பனை விடவும் அதிக பாசத்தைக் கொட்டுபவர்.

🌹‘உள்ளே அழுகறேன்… வெளியே சிரிக்கறேன்’ என்கிற கதையாக விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவரின் பாலைவன வாழ்க்கையில் இளம் தென்றலாய் நுழைகிறாள்

🌹 ‘குயில்’. வழக்கமான கிராமத்துக் குசும்புகளுடன் ஆரம்பிக்கும் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் களங்கமற்ற அன்பாகவும் குற்றமற்ற நேசமாகவும் மாறுகிறது. ஊராரின் எதிர்ப்பிற்கும் அவதூறுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் இவர்களின் உறவு ஒரு காவியத் துயரத்துடன் நிறைவடைவதை உருக்கத்துடன் சித்திரித்திருந்தார் பாரதிராஜா.

🌹கணவனை எப்போதும் கரித்துக் கொட்டும் ‘சிடுசிடு’ மனைவியின் பாத்திரத்தில் நடிக்க வடிவுக்கரசி

🌹சிவாஜி முதல் நாள் படப்பிடிப்பிற்குத் தயாராகி வரும்போது தன்னுடைய வழக்கப்படி ‘பெரிய விக், மீசை’ என்று சினிமாவிற்கான தோரணையுடன் வந்தததைப் பார்த்து திகைத்துப் போன பாரதிராஜா

🌹 “ஐயா... நீங்க இயல்பான தோற்றத்தில் வந்தால் போதும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்ல

🌹 “அப்படியா சொல்ற... சரிப்பா” என்று சிவாஜி உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தத் திரைப்படம் என்றல்ல, தனது எல்லாத் திரைப்படங்களிலும் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதுதான் சிவாஜியின் வழக்கம்.

🌹குயில்’ பாத்திரம் என்பது

ராதாவிற்கு

ஊர்ப் பெரியவரான சிவாஜியிடம் துடுக்குத்தனமாக பேசுவதாகட்டும், மறைந்திருந்து எசப்பாட்டு பாடுவதாகட்டும், அவரின் சொந்தக்கதையை அறிந்து வருந்துவதாகட்டும், அதுவே பிறகு பாசமாகவும் நேசமாகவும் மலர்வதாகட்டும்,

🌹 “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகட்டும். ‘குயில்’ பாத்திரத்திற்குள் அற்புதமாக கூடு புகுந்தார் ராதா. .

இந்தத் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை

மலேசியா வாசுதேவனின் குரல் சிவாஜிக்கு மிகப் பொருத்தமாக அமைந்தது என்பதை ‘முதல் மரியாதை’ பாடல்கள் மீண்டும் நிரூபித்தன.

🌹 ‘பூங்காற்று திரும்புமா’ பாடலில் உள்ள ஏக்கம், அதற்கு முரணாக

🌹 ‘ஹே... குருவி. சிட்டுக்குருவி’ பாடலில் உள்ள உற்சாகம் என்று அசத்தியிருந்தார்

மலேசியா.

இன்னொரு பக்கம் ஜானகியம்மாவின் ராஜாங்கம்.

🌹 ‘அந்த நெலாவத்தான் கையில பிடிச்சேன்' என்று ரொமான்ஸில் பின்னியெடுத்தவர்,

🌹‘வெட்டிவேரு வாசத்தில்’ நம்மை உருக்கியெடுத்துவிட்டார்.

🌹 ராதா சமைக்கும் மீனை வெட்டி வீறாப்புடன் முதலில் மறுத்துவிட்டு பிறகு ‘உனக்கு வயித்த வலிக்கும். அதான் சாப்பிடறேன்’ என்று குழந்தைத்தன்மையுடன் சிவாஜி சொல்லும் காட்சி அற்புதமானது.

🌹 “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று கேட்கும் ராதாவின் கன்னத்தில் அறைந்து விட்டு

🌹“பச்சைப் புள்ளன்னு நெனச்சு பழகினது தப்பாப் போச்சு” என்று பாவனையாகக் கோபப்படும் சிவாஜி,

கடைசிக்காட்சியில் தன் காதலை ஒப்புக் கொள்வது உருக்கமானது.

🌹“என் புருஷனை நீ வெச்சிருக்கியா சொல்லுடி” என்று துடைப்பைக் கட்டையால் ராதாவை வடிவுக்கரசி அடிப்பதும், ஊராரின் அவதூறு தாங்காமல்

🌹 “ஆமாம். நான் அவளை வெச்சிருக்கேன்” என்று பஞ்சாயத்தின் நடுவில் சிவாஜி வாக்குமூலம் தருவதும் அந்த வார்த்தைகளை மலர் தூவல்களாக ராதா கற்பனை செய்து கொள்வதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

ஸ்ரீநிவாஸ்....

No comments:

Post a Comment