பஞ்சு அருணாசலம் தன் வீட்டு பங்சன் வரவேற்பு இன்னிசை நிகழ்ச்சிக்கு சங்கர்-கணேஷ் அவர்களை அழைத்திருந்தார்!
வரவேற்பு நாளன்று சங்கர்-கணேஷ் அவர்களை எதிர் பார்த்து வாசலிலே பார்த்துக் கொண்டு இருந்தவர் கடைசியில் ஏமாந்து போனார்.
ஆம் அவர்கள் கடைசி வரை சொன்ன படி நிகழ்ச்சிக்கு வரவில்லை!
காரணம்,அவர்கள் அப்போது இசையமைப்பாளர் விஸ்வநாதன்- இராமமூர்த்தி அவர்களிடம் உதவியாளர்களாக இருந்தனர்.ஏற்கனவே பஞ்சு அருணாசலத்தின் மீது ஏதோ காரணத்திற்காக கோபமாக இருந்ந விஸ்வநாதன்,சங்கர்-கணேஷ் அவர்களை தடுத்து விடுகிறார்.
இந்த அவமானம் பஞ்சு அருணாசலத்திற்கு மனதில் தீராத வடுவாக பதிந்து விடுகிறது!
இசையமைப்பாளர் விஸ்வநாதனோடு தீராத கோபத்தில் இருந்த பஞ்சு அருணாசலம்,வைராக்கியதோடு பல தடைகளை கடந்து இளையராஜாவை அறிமுகப்படுத்துகிறார்!
அதன் பிறகு விஸ்வநாதன் அவர்களுக்கு இறங்கு முகமாகிறது.
0
புது புது அர்த்தங்கள் படத்தில் இசைஞானி இளையராஜா -க்கும்,பாலசந்தர் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வருகிறது.
ஏதோ ஒரு விசயத்தில் இளையராஜா பிடிவாதமாக இருந்ததால் அவர் மீதான பாலசந்தரின் கோபம்,
தன் தயாரிப்பான ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகப்படுத்துகிறார்!
அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏறுமுகம்தான்!
சிங்கார வேலன் படப்பிடிப்பில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கும் கவுண்டமணியிடம்,ஒருவர்"இந்த படத்தில் உங்களுடன் செந்தில் இல்லையா"என கேட்கிறார்!
"அதான் சிவப்பு செந்திலுடன் நடிக்கிறேனே"என கமலை சிகப்பு செந்தில் என கிண்டலடித்ததை காதில் வாங்கிய கமல்,கவுண்டமணி மீது பயங்கர கோபமாகிறார்.
இந்த கோபத்தின் வெளிப்படாக சின்ன,சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்த வடிவேலுக்கு,தனது தேவர் மகன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கிறார்.
அதன் பிறகு வடிவேலுக்கு படி படியாக ஏறுமுகம்தான்!
வாழ்வில் வெற்றியாளராக உச்சத்தில் இருக்கும்போது திடீரென சறுக்கலை ஒருவர் சந்திக்கிறார் என்றால்,அதற்கு ஏதாவது ஒரு வகையில் அவரே காரணமாக இருப்பார்.
இதைத்தான் பெரியவர்கள் இப்படி சொல்வார்கள்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா..,
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் ுப்பிரமணியன்.