வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.......
எம்.ஜி.ஆர்
இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு
வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி
எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார்....
அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார். ......
இந்த வாத்தியார் பாடம் போதுமே!...அந்த மஹான் எப்பேர்ப்பட்ட மன பக்குவம் கண்டிருந்தால் இந்த வார்த்தைகள் வெளி வரும்.....
No comments:
Post a Comment