Total Pageviews

Tuesday, December 30, 2025

பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது.

 

ஒரு காலகட்டத்திலே பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது பிரபல நடிகை சரோஜாதேவியின் கனவாக இருந்தது. அந்தக் கனவை ஒரு விமானப் பயணம் நிறைவேற்றி வைக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஒருமுறை பெங்களூருவுல இருந்து டெல்லிக்குப் பயணம் செய்த போது அவருக்குப் பக்கத்து சீட்ல ஸ்ரீபாலி என்பவர் அமர்ந்து இருந்தார்.

அவர் ராஜீவ்காந்தியின் பர்சனல் பிஏ. அவருடன் பேசிக் கொண்டு இருந்தபோது ராஜீவ் காந்தியை சந்திக்க வேண்டும் என்பது என்னோட தணியாத ஆசை. அவரை சந்திக்கத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்செயலாகச் சொன்னார் சரோஜாதேவி. மறுநாள் காலையிலே அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு ஒரு செய்தி வந்தது. ராஜீவ்காந்தி அவர்களை நீங்கள் 12 மணிக்கு சந்திக்கலாம்.

தயாராக இருங்கள் என்று. உடனே சரோஜாதேவி அவசரம் அவசரமாக மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு ராஜீவ்காந்தியின் இல்லத்துக்குச் சென்றார். புன்னகையோடு அவரை வரவேற்ற ராஜீவ் காந்தி ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேலாக அவரோடு பேசிக் கொண்டு இருந்தார். அப்போ சரோஜாதேவியைப் பார்த்து மாண்டியால காங்கிரஸ் சார்பா நீங்க போட்டி இடுறீங்களான்னு கேட்டார்.

அதற்கு என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு அரசியல்ல அவ்வளவு நாட்டம் இல்ல. ஆனா எனது கணவருக்கு அதுல ஈடுபாடு இருந்தது. நான் அரசியல்ல ஈடுபடணும்னு தீவிரமாக விரும்பினார். இப்ப அவர் இல்லாத சூழல்ல அரசியல்ல ஈடுபட எனக்கு சுத்தமாக ஆசை இல்லைன்னு சொன்னார் சரோஜாதேவி. புகழ், பதவி, செல்வாக்கு என அத்தனை இருந்தும் ராஜீவ்காந்தி அத்தனை எளிமையாக பழகியது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

நான் சந்தித்த மனிதர்கள்ல அவர் ஒரு மாமனிதர் என்று ஒரு பத்திரிகையிலே பதிவு செய்துள்ளார் சரோஜாதேவி.

No comments:

Post a Comment