Total Pageviews

Friday, December 26, 2025

TVS பேருந்துகள்

 

TVS பேருந்துகள்:

மதுரையில் மட்டும் அல்ல; நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உள்ளூர் பேருந்துகள் இவர்கள் தான் நடத்தினார்கள். பெயிண்ட் அடிக்காத அலுமினியம் தகடு கொண்ட பேருந்துகள்.

01. பேருந்துகள் மிதமான வேகத்தில் தான் செல்லும்.

02. சரியான நேரத்தில் நிறுத்தத்திற்கு வரும். அப்போது சொல்லுவார்கள். டிவிஎஸ் பேருந்து வந்து விட்டது என்றால் மணி 09.00 என்று கடிகாரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளலாம் என்று.

03. தூத்துக்குடியில் 3ம் நம்பர் பேருந்து நகரத்தை ஒரு சுற்று சுற்றி கிளம்பிய இடத்திற்கு வரும். நான் அதில் சிறுவயதில் என்னுடைய உறவினர்களோடு அமர்ந்து கொள்ளுவேன். கட்டணம் 3 பைசா. (வருடம் 1963)

04. பெட்டியில் டிக்கெட்டை அவர்கள் பயணம் முடிந்தவுடன் போடச்சொல்லுவதற்கு காரணம் - நகரத்தை குப்பையாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காக தான்.

(காலப்போக்கில் தான் நானும் தெரிந்து கொண்டேன் )

05. TVS பேருந்துகளில் ஸ்டாண்டிங் ஏத்த மாட்டாங்க. புருஷன் பொண்டாட்டியா போனா கூட,ஒரு சீட் காலி இருந்தா ஒருத்தர மட்டும் தான் ஏத்துவாங்க. அடுத்த ஆளு நடந்து தான் ஊருக்கு போகனும்.

06. எல்லோரும் வரிசையில் நின்று தான் பஸ்ஸில் ஏற வேண்டும். அன்றைய நாளில் பஸ் பயணம் சுகமானது. இன்று மதுரையில் கூட்டத்தில் வலுவுள்ளவன் தான் பஸ்ஸினுள் நுழைய முடியும்.

07. TVS bus Very Neat. and decent.

08. மக்கள் சேவை ,தொழிலாளர் நலன்,பாதுகாப்பு போன்ற பல விஷயங்களில் கண்டிப்பாக இருந்தார்கள். கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நேரம் தவற மாட்டார்கள். 

காலை 05:05க்கு மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து 50ஆண்டுகளுக்கு முன்பு செய்த பயணம் இன்றும் நினைவிருக்கிறது.

இவை அனைத்தும் என் பக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்தவர்களிடம்

சேகரித்த பதிவுகள்.சம்பந்தபட்ட உரிமையாளர்களுக்கு என் நன்றிகள் 🙏🙏

Classic TNSTC

No comments:

Post a Comment