எவன் ஒருவன் தனது அறிவை சமயோசிதமாகப் பயன்படுத்துகிறானோ அவனே வாழ்வில் வெற்றி அடைவான். இது எழுதப்படாத நியதி. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர் பிரபல தமிழ்த் திரைப் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர்.
இவர் தம் படங்களில் தொடர்ந்து எம்ஜிஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து வந்தார்.
அவரைத் தவிர எம்ஜிஆருக்குப் பொருத்தமான வேறு ஜோடி அமையவில்லை. என்ன செய்வது என்று பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்போதுதான் தேவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பார்த்தார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி அவரை ஈர்த்தது. ஜெயலலிதா தான் எம்ஜிஆருக்கு சரியான ஜோடி என முடி வெடுத்தார் தேவர். அந்தப் படத்திற்கான படப் பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும்போதே ஜெயலலிதாவை தனது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் தேவர்.
அவர் புத்திசாலித்தனமாகத் தான் செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆயிரத்தில் ஒருவன் படம் ஜூலை மாதம் வெளியானது என்றால் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த கன்னித்தாய் படம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வெளி யானது.அந்தப் படத்தைத் தொடர்ந்து எறக்குறைய அரை டஜன் படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். மேற்கண்ட தகவலை பிர பல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து ள்ளார்.
No comments:
Post a Comment