Total Pageviews

Friday, May 1, 2026

இயக்குனர் மகேந்திரன்!


இயக்குனர் மகேந்திரன் எப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளைத் தந்தவர் என்பது நமக்குத் தெரியும். வசனகர்த்தாவாக இருந்த காலகட்டத்தில பக்கம் பக்கமாக வசனம் எழுதிய அவர் ஒரு இயக்குனர் ஆனதற்குப் பின்னால திரைமொழி என்பது வசனம் அல்ல என்பதை சரியாகப் புரிந்து கொண்டார். அதே நேரம் மிகச்சரியாக தன்னோட படங்கள்ல திரைமொழியைக் கையாண்டார்.

அப்படி அவர் உருவாக்கிய படங்கள் தான் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், கூத்தாடும் கூத்துக்கள் போன்ற படங்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையைத் தாண்டி படைப்புகளை விமர்சனம் செய்யும் விமர்சகராகவும் ஒரு காலகட்டத்துல மகேந்திரன் இருந்தார்.

அப்படி விமர்சனக் கலையிலே அவர் மிகச்சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் இயக்குனர் பிஎன்.ரெட்டி. அவரிடம் தான் அதற்குரிய பாடங்களைப் படித்தார் மகேந்திரன். இவரது பேராசிரியரான ரங்கன் பிஎன்.ரெட்டியின் மிகப்பெரிய விசிறி. அதன் காரணமாகவே அவருடன் நல்ல ஒரு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையிலே மகேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் பிஎன்.ரெட்டியைப் பார்க்கும்படிச் சொன்னார் ரங்கன்.

அந்தக் கடிதத்துடன் பிஎன்.ரெட்டியைப் போய் பார்த்தபோது, வயதில் இளையவராக இருந்தாலும் அப்படி ஒரு மரியாதையைக் கொடுத்து உபசரித்ததோடு மட்டும் இல்லாமல், தன்னோட தயாரிப்புகளில் உருவான பல படங்களை எனக்காகப் போட்டுக் காட்டச் சொன்னார் பிஎன்.ரெட்டி. அந்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. படங்களைப் போட்டுக் காமிச்ச உடனே நான் அவரது அலுவலகத்துக்குப் போவேன். அங்கு 12 மணி வரை அந்தப் படத்தைப் பற்றிப் பேசுவேன். நான் பார்த்த படங்களில் பல காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டது?

எதனால் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது என்பது பற்றியும் பல விளக்கங்களை பிஎன்.ரெட்டி என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் திரையுலகில் நன்றாக செயல்படவும், விமர்சனங்களை ஓரளவுக்கு நன்றாக எழுதவும் காரணமாக அமைந்ததுன்னா அன்றைக்கு பிஎன்.ரெட்டி எனக்கு எடுத்த பாடங்கள் தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் மகேந்திரன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Thursday, April 30, 2026

வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !

 

வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !

பதினாறு வயதினிலேயே சூட்டிங் ...

அப்போது, 4 வகையான உணவு வருமாம்.

முதல் தரம் கமலுக்கானது,

இரண்டாவது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கானது,

மூன்றாவது தரம் ஸ்ரீதேவி உடையது.

மற்றவர்களுக்கு 4வது தர சாப்பாடு. தரம் என்பது, உணவு வகைகளை பொருத்தது.

ரஜினி தினமும் சூட்டிங் வருவாராம்; தொடர்ந்து 10 நாட்கள் அவருக்கு காட்சியே தரவில்லை.

உண்மையில் அப்போது ரஜினியின் நிலையும் அது தான்

கமல், ஸ்ரீதேவிக்கு அப்போதெல்லாம்

இலட்சங்களில் சம்பளம்,

ரஜினிக்கு அந்த படத்தில் மூன்று ஆயிரம் சம்பளம்

மற்றவர்களை போல அவரை அழைத்து வர அங்கு காரெல்லாம் வராது. அவராக எதையாவது பிடித்து சூட்டிங் ஸ்பாட் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் கடந்து மதியம் ஒருநாள் உணவுக்காக புரொடக்ஷனில் அமர்ந்துள்ளார்.

அவருடன் மேலும் பல துணை நடிகர்களும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அப்போது அசைவ உணவு கொண்டு வந்ததை அறிந்த ரஜினி, பரிமாறுபவர்களிடம், ‛முட்டை இருந்தா தாங்க...’ என்று கேட்டுள்ளார்.

இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது...’ என கிண்டலாக பதிலளித்து, மறுத்து கடந்திருக்கிறார் அங்கு பரிமாறிய நபர். ரஜினி கேட்ட ஒரு முட்டையை அவர் தர மறுத்திருக்கிறார்.

காலங்கள் கடந்தது. ரஜினி...

பெரிய ஹீரோ என்பதை கடந்து,

சூப்பர் ஸ்டாராக நிற்கிறார். பிறகு ஒருபடத்தில் சூட்டிங்கில் 16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அதே பரிமாறிய நபர், முதல் தர உணவை ரஜினிக்கு பரிமாறியுள்ளார். அந்த நபரை அடையாளம் கண்ட ரஜினி, ‛முட்டை இருக்கிறதா...’ என்று கேட்டுள்ளார். அந்த நபரோ... ‛இதோ... இப்போ கொண்டு வர்றேன்...’ என ஓட முயற்சித்துள்ளார்.

உடனே அவரை அழைத்த ரஜினி, ‛கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா...’ என கிண்டலடிக்க, எதிரில் இருந்த நபருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. ரஜினி பழசை மறக்கவும் இல்லை;

தன்னை ஒதுக்கப்பட்ட இடத்தில் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி யால்

பதிலடி கொடுத்தவர் ரஜினி

இன்றும் ஷுட்டிங் கில் சகமனிதனாக

அனைவருடனும் அமர்ந்து சாப்பிடுவது,

எல்லோரும் சாப்பிட்டார்களா என கேட்பார்

என்று அவருடன் பணியாற்றிவர்கள் சொல்ல கேட்டேன்

தான் கடந்த வந்த பாதை எதையும் மறக்காததால் தான் அவர் இன்றைக்கு இவ்வளவு முன்னேறவும் முடிந்தது.

யாரையும் எப்போதும் இவன் இப்படி தான் என்று

கணிக்க கூடாது என்பது நான் வாழ்க்கையில் கற்ற பாடம் என்று சொல்கிறார்.

உண்மை அது தானே!

முகநூல் பதிவு-பிரசாந்த்!

Monday, April 20, 2026

தஞ்சை பெரிய கோயில் !

 

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."

என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...

இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

படித்ததில் பிடித்தது

10 வகையான கணவர்கள் ! உங்கள் கணவர் இதில் எந்த வகை ?

 1: பேச்சிலர் கணவர்

 மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கித்துவம் தராதவர்.

2: அமிலக் கணவர்

எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.

3: அடிமை கணவர்

ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.

4: சராசரி கணவர்

பெரும்பாலான பெண்ணுக்கும் அமையும் கணவர் இவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும் மேலும் பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம்.

5: உலர் கணவர்

மிகவும் உலர்ந்த மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்குவதில்லை. ஊடல் இல்லை. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.

6: சந்தர்ப்ப கணவர்

மனைவியை பிரச்சனை தீர்பவராகப் பயன்படுத்துகிறார், அவரிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவின் பலவீனங்களை பயன்படுத்துவார்.

7: ஒட்டுண்ணி கணவன்.

சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லை மற்றும் வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவுவதில்லை.

8: குழந்தை கணவர்

பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு, ஏதாவது தவறு நடந்தால் எப்போதும் உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ ஓடிவிடுவார்.

9: வருகை பதிவேடு கணவர்:

பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காதவர்.

10: அக்கறையுள்ள கணவர்

அக்கறையும் அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.

இப்போது உங்களுக்குத் தெரியும்,

உங்கள் கணவர் எந்த வகை என்று !

Saturday, April 18, 2026

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த #சும்மா.

 

சும்மா ‌படிச்சி தான் பாருங்களேன்..

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த #சும்மா.

அது சரி சும்மா என்றால் என்ன?

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா..

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1 . கொஞ்சம் சும்மா இருடா?

( அமைதியாக/Quiet)

2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது!

(அருமை/in fact)

4. இது என்ன சும்மா கிடைக்கும்னு

நினச்சியா?

(இலவசமாக/Free of cost)

5. சும்மா கதை அளக்காதே?

(பொய்/Lie)

6. சும்மா தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்.

(உபயோகமற்று/Without use)

7. "சும்மா "சும்மா" கிண்டல் பண்ணுறான்.

(அடிக்கடி/Very often).

8.இவன் இப்படித்தான்.. சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பான்.

(எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன்.

(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை சும்மா தான் இருக்கிறது.

(காலி/Empty)

11.சொன்னதையே சும்மா சொல்லாதே.

(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் சும்மா போகக் கூடாது.

(வெறுங் கையோடு/Bare)

13. சும்மா தான் இருக்கின்றோம்.

(சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் சும்மா ஏதாவது உளறுவான்.

(வெட்டியாக/idle)

15.எல்லாமே சும்மா தான் சொன்னேன்.

(விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் சொல்லும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது.

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்

😏😏😏

Monday, April 13, 2026

நடிகர் விஜய்யை ஏன் பலர் வெறுக்கிறார்கள்?

விஜய் அவர்கள் சினிமாவில் அறிமுக ஆக பெற்றோர்கள் தேவைபடுகிறார்கள்.

விஜய் வளரும் போது ரஜினிகாந்த் தேவை படுகிறார்.

விஜய் தோல்வி பெரும் போது, அவரை ஊக்குவிக்க விஜயகாந்த் தேவை படுகிறார்.

விஜய் வளர்ந்த பிறகு தற்போது அரசியலுக்கு எம்ஜிஆர் தேவைபடுகிறார். இவர் முதல்வர் ஆனால் எம்ஜிஆர் கூட விஜய்க்கு தேவைப் பட மாட்டார் என்பதே நிதர்சனம்!!

ஆக மொத்தம், விஜய் என்னும் குதிரை வெற்றி பெற பலர் திரைக்கு பின்னால் உழைக்கிறார்கள்.

விஜய் வைத்திருக்கும் தளபதி பட்டமும் சரி, தற்போது ஆசைப்படும் சூப்பர் ஸ்டார் பட்டமும் சரி, ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமானது!

விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ரஜினிகாந்த் பாணி தான். விஜய் அவர்களுக்கு என்று தனிப்பட்ட பாதை இல்லை. சுயமாக சொல்ல ஒன்றுமில்லை!!

விஜய் அவர்கள் நல்ல நடிகர், அபாரமான உழைப்பு இதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் அவருடைய நன்றி மறந்த செயல்பாடுகளும் சுயமாக பாதையை உருவாக்காமல், ரஜினிகாந்த் பாதையை பின்பற்றி தற்போது நான் தான் தலைவர், சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களை உசிப்பிவிடுவதும், குட்டி கதைகள் சொல்வதும் தான் அவரை வெறுக்க காரணமாக இருக்கிறது!!

விஜயின் நடனம் பிடிக்கும் அவ்வளவே!!

இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை இந்த படமாக தான் இருக்கும்!!

நடிகர் விவேக் !

 

சினிமாவுலகில் எந்த வலுவான பின்புலமும் இல்லாத சாமானியர்களும் திறமையிருந்தால் நுழைய முடியும், தாக்கு பிடித்து வெற்றி பெறலாம் என்று இன்னமும் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும் நம்பிக்கை விதையை விவேக் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் விதைத்தவர்.

  • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். வகுப்பில் அடிக்காத லூட்டியில்லை.
  • மதுரை மக்களுக்கே உரிய லந்து, டைமிங் சென்ஸ் இவரிடமும் இருந்தது, கொஞ்சம் அதிகமாகவே..
  • சரியாக K.பாலசந்தரிடம் சென்று அடைக்கலம் ஆனார்.
  • கவுண்டமணியும் செந்திலும் கொடி கட்டி பறந்த காலம்.
  • Intellectual Comedy என்பது மக்களுக்கு தெரியாத நிலையில், மெல்ல மெல்ல ஒரு நகைச்சுவை கலைஞன் மனம் தளராது முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
  • சுற்றுசூழலை பாதுகாக்க, ஒரு கோடி மரங்கள் நடுவதை இலக்காக கொண்டு தீவிரமாக இயக்கம் நடத்தி வந்தார்.
  • கலாமின் தீவிர ரசிகர். கலாமுடன் இவரது பேட்டி மிகவும் கேஷுவலாக இருக்கும்.
  • சாலமன் பாப்பையா, பரவை முனியம்மா, பட்டிமன்றம் புகழ் ராஜா போன்றவர்கள் திரை துறையில் நுழைய ஒரு காரணியாக இருந்தார்.

நாகேஷ், மனோரமா, விவேக் இவர்களுக்குள் என்ன ஒற்றுமை தெரியுமா?

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலை தான்.

  • பிற நடிகர்கள் தங்கள் முக தோற்றத்துக்கு மேக்கப் போடுவார்கள்.
  • நகைச்சுவை கலைஞர்கள் மட்டும் தங்கள் மனசுக்கு மேக்கப் போட்டுக் கொண்டு தங்கள் சோகங்கள் வெளியே தெரியாதவாறு பிறரை மகிழ்விப்பார்கள்.

துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது

மக்கள் மனம் போலே பாடுவேன் நானே!

என் சோகம் என்னோடு தான்!

டெங்கு காய்ச்சலில் தன் அருமை மகனை வாரி கொடுத்து விட்டு, அதிலிருந்து மீண்டவர் போல தம்மை காட்டிக் கொண்டார்.

"எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்?"

இவர் சொன்னது வெறும் நகைச்சுவை வசனமல்ல. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தவை.

பொது வெளி என்றும் பாராமல் இவர் மகன் இறப்புக்கு வந்திருந்த அஜித் கதறி அழுதார். சில விஷயங்களை சிலரால் தான் உணர முடியும்.

"இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" - வாழ்க்கையின் நிதர்சனத்தை ஒரு வரியில் சொன்ன வசனம் இது.

இவர் நடத்தி வந்த மரம் நடும் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருவதே நாம் இவர்க்கு செலுத்தும் உண்மையான மரியாதை.