Total Pageviews

Monday, November 14, 2011

பிரியக் கூடாதது - நட்பு



படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

"மறக்கக் கூடாதது - நன்றி

பிரியக் கூடாதது - நட்பு

உயர்வுக்கு வழி - உழைப்பு

மிக மிக நல்ல நாள் - இன்று

நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

விலக்க வேண்டியது - விவாதம

செய்யக் கூடியது - உதவி

செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்

ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு

நம்பக் கூடாதது - வதந்தி

கீழ்த்தரமான விஷயம் - பொறாமை

மிகவும் கொடிய நோய் - பேராசை

மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

மிகவும் வேண்டாதது - வெறுப்பு


ஒருவரையும் ஒதுக்கித்தள்ளாதே வேண்டாதவர்கள் என்று.ஒவ்வொருவரையும் உன் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள். மும்முரமாய் கூழாங்கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கும்போதுஒரு நாள் நீ விழித்துக்கொள்வாய்.அப்போது ஓரு வைரத்தை தொலைத்துவிட்டோம் என்பதை நீ உணர்வாய்.

உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல் செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார் என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை. அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே. சற்றே பொறுத்திரு அது அவரின் இதயத்தில் மலரட்டும்.அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.

இதயத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியாத எதையும் உன் கைகளில் பிடித்து வைத்துக் கொள்ளாதே.

உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால் போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும் உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

No comments:

Post a Comment