Total Pageviews

Tuesday, November 15, 2011

காற்றினால் இயங்கும் கார்

காற்றினால் இயங்கும் கார் ஒன்று விரைவில் சாலைகளில் ஓடப்போகிறது, பழைய பார்முலா ஒன் பொறியாளர் நெக்ரேயின் உதவியுடன் டாட்டா இந்த தயாரிப்பில் இறங்கப் போகிறது.
காற்றின் அழுத்தத்தினால் இயங்கும் இந்த வாகனம் முதலில் சோதனைத் தயாரிப்பாக ஆறாயிரம் எனும் எண்ணிக்கையில் இந்தியத் தெருக்களில் ஓடப் போகின்றன. அதுவும் இரண்டாயிரத்து எட்டிலேயே !
இந்த வாகனம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். ஒரு முறை காற்றடித்தால் சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வாகனம் ஓடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகர போக்குவரத்திற்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இரண்டு ரூபாய் கொடுத்து ஒருமுறை காற்றடித்தால் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வைக்கும் இந்த கார் அதிக விலை இல்லாமல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் விலை ரகசியங்கள் வெளிவரவில்லை.
ஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது ? அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.
இந்தியா உட்பட ஜெர்மனி, இஸ்ரேல் , தென் ஆப்பிரிக்கா என பன்னிரண்டு நாடுகளில் விற்பனைக்கு வரப்போகும் இந்த வாகனமத்திற்கு அமெரிக்காவில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்க சாலைகளின் வேகத்தில் இந்த கார்கள் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்பது அவர்களுடைய விபத்துச் சோதனையின் முடிவு.

No comments:

Post a Comment