விஜயகாந்தின் 100வது படம் அபார வெற்றி. அதுதான் கேப்டன் பிரபாகரன். இன்று 4கே சிஸ்டத்தில் ரீரிலீஸ். மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. வசூல் மழை. படத்தைப் பற்றிய சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்.
பாறை சண்டைக்காட்சிகளில் வழுக்கும் அளவும் கேப்டனுக்கே அடிபடும் வகையிலும்தான் சூழல் இருந்தது. விஜயகாந்த் நிறைய சிரமத்துக்கு நடுவில் தான் அப்பவும் படத்துல நடிச்சிருக்காரு. விஜயகாந்த் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தாரு என்கிறார் ஆர்.கே.செல்வமணி. காட்டுக்குள்ள கேமராவைத் தூக்கிட்டு நடந்தே போனாங்களாம்.
இன்னைக்கு மாதிரி அப்போ கேரவன் வசதி கிடையாது. இருந்தாலும் கூட அப்படியான காட்டுக்குள்ள கேரவனைக் கொண்டு போக முடியாத சூழல். இன்னும் சொல்லப்போனா ரம்யா கிருஷ்ணன் சேலையை சுத்திக்கிட்டு அதுக்குள்ள இருந்துதான் உடை மாற்றினாராம். இன்னைக்கு இந்தப் படம் வந்துருந்தா டிரோன் கேமரா மூலம் பருந்து பார்வையில் அழகா எடுத்துருக்கலாம்.
இன்னும் திகிலூட்டும் காட்சிகள் வந்துருக்கும். ஆனா அதைத் தீர்த்து வச்சது இளையராஜாவின் பின்னணி இசை தான். ஒவ்வொரு காட்சியும் பிரேம் பை பிரேமா அவ்வளவு சிறப்பா செஞ்சிருப்பாரு. பாசமுள்ள பாண்டியரே குத்தாட்டம் போடும் ரகம். ஆட்டமா, தேரோட்டமா பாட்டும் அவ்ளோ சூப்பராக இருக்கும். இந்தப் படத்தில் ஒவ்வொரு வசனமும் சாட்டையடியாக இருக்கும்.
படத்துல கிளைமாக்ஸ்ல கடைசியில போலீஸால வீரபுத்திரன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஆனா படம் வரும்போது அதே வீரப்பன் உயிரோடு இருக்காரு. போலீஸால பிடிக்க முடியல. கண்ணுக்கு மருந்து ஊத்திக்கிட்டு இருக்கான். அவனுக்கு சொந்தக்காரப் பொண்ணுட்ட சொல்லி சோத்துல விஷத்தை வச்சி செத்த பிறகு சுட்டுப் பிடிச்சாங்க. சந்தன கடத்தல் வீரப்பனை மனிதாபிமானம் உள்ளவன்னு சொல்லி சமூகவிரோதிகள் அவங்க தேவைக்காக அவனைப் பயன்படுத்திக்கிறாங்கன்னு சுட்டிக்காட்டிய படம்.
எப்பவோ நடக்கக்கூடிய விஷயத்தை 10 வருஷத்துக்குப் பின்னாடி நடக்கக்கூடிய விஷயத்தை ஆர்.கே.செல்வமணி அன்னைக்கே சொல்லிருப்பாரு. அந்தக் காலகட்டத்துல மிகப்பெரிய பிரம்மாண்டம்.

No comments:
Post a Comment