Total Pageviews

Tuesday, October 27, 2026

இயக்குனர் செய்த அந்த வேலை... தாங்க முடியாத ஏக்கத்தில் மெல்லிசை மன்னர்கள்!

 

MSV, Ramamoorthi

தமிழ்சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர் தான் மெல்லிசை மன்னர்களான எம்எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும்.

இவர்கள் இசை அமைப்பில் உருவான 100க்கணக்கான பாடல்கள் இன்றைக்கும் பல லட்சம் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக உள்ளன. அப்படி எண்ணற்ற வெற்றிப் பாடல்களைத் தந்த இந்த இசை அமைப்பாளர்களுக்குப் பிடித்த பாடல் என்ன தெரியுமா?

காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் நாளாம் நாளாம் திருநாளாம். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன், கலை இயக்குனர் கங்காவோடு இணைந்து பாக்யலட்சுமி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி, அதன் சார்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கலைக்கோயில் என்ற படத்தைத் தயாரித்தது பலருக்கும் தெரியும். முதலில் அந்தப் படத்தில் ஒரு இந்திப்பாடல் இடம்பெறுவதாக இருந்தது. அந்தப் பாடலை லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரது குரலில் பதிவு செய்ய வேண்டும் என்பது இவர்களது ஆசை.

ஆனால் கடைசி நேரத்துல அந்தக் காட்சியையே படத்தில் இருந்து தூக்கி விட்டார் இயக்குனர். எங்களுக்கு அந்த ஆசையை நிறைவேற்ற முடியலையே என்கிற ஏக்கம் பல ஆண்டுகள் இருந்தது என ஒரு பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.

No comments:

Post a Comment