Total Pageviews

Wednesday, October 7, 2026

காமெடி நடிகர் லூஸ் மோகன் !

 

🌹லூஸ் மோகன்

அரிச்சந்திரா என்ற சினிமாவில், காமெடி நடிகராக லூஸ் மோகன் அறிமுகமானார். மூன்று முகம், பாட்டி சொல்லை தட்டாதே, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன், தங்க மகன், அழகி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

🌹காஞ்சிபுரத்தில் பிறந்தவர் மோகன். இவரது தந்தை லூசு ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே.

அரிதாஸ் படத்தில், தனது தந்தை பெயரில் லூஸ் ஆறுமுகம் வேடத்தில் நடித்தார். இந்த வேடம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால், லூஸ் மோகன் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

🌹1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர மராத்தி, போச்புரி, இந்தி, துளு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது

🌹2,000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ள லூஸ் மோகன், பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

🌹இவரது கடைசித் திரைப்படம் தங்கர் பச்சானின் அழகி (2002) ஆகும்.

🌹இவரது மனைவி பச்சையம்மாள் 2004 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். லூஸ் மோகன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மறைந்த லூஸ் மோகனுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

Prashanth

Srinivas

No comments:

Post a Comment